உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாருக்கு நன்மை?

Go down

யாருக்கு நன்மை? Empty யாருக்கு நன்மை?

Post by nandavanam Sat Jan 07, 2012 3:50 am

யாருக்கு நன்மை? Sethuproject


முல்லைப் பெரியாறு பிரச்னை, "தானே' புயல் பாதிப்புகள் இரண்டுமே ஒருபுறம் இருக்க, இப்போது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டத்தில், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் தனுஷ்கோடி வழியாக புதிய கால்வாய் அமைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என்பதை அறிவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 2008 ஜுலை மாதம் அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கையை கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தற்போது கேட்டுள்ளது.

ரூ. 2,440 கோடி செலவிலான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் ஜெயலலிதா இதற்கு நேர்மாறான முடிவை மேற்கொண்டார். லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழக்கும்படி செய்யும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று 2007-ல் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2005-ம் ஆண்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டபோது, இது வெறும் அரசியல் நாடகம், திமுக தரும் நெருக்கடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காங்கிரஸ் அரசு இந்தத் திட்டத்தை எடுத்துக்கொண்டுள்ளது என்று இந்திய அளவில் பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் இரண்டுமுறை நடுக்கடலில் பழுதடைந்ததாலும், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியில் உள்ள அரிய கடற்தாவரங்கள் அழிந்துவிடும் என்பதோடு, புராதனச் சின்னமாகிய ராமர் பாலம் இடிக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டதாலும் பணிகள் நிறுத்தப்பட்டன.

2007 செப்டம்பரில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இந்தியத் தொல்லியல் துறை, "ராமர் இருந்ததற்கு வரலாற்று ஆதாரம் இல்லை; ராமர் பாலம் மனிதரால் உருவாக்கப்பட்டது அல்ல' என்று தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்காக தொல்லியல் துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தனுஷ்கோடி வழியாக மாற்றுவழி அமைப்பது குறித்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை அறியவும் ராஜேந்திர கே. பச்சோரி தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் எல்லாரும் மறந்துபோன அந்த அறிக்கையைத்தான் இப்போது நீதிமன்றம் கேட்கிறது.

தனுஷ்கோடி வழியாகத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று குழுவின் அறிக்கை அமைந்தால் முதல்வர் ஜெயலலிதா அதைக் கடுமையாக எதிர்ப்பார் என்பது நிச்சயம். தனுஷ்கோடி வழியாக மாற்றுத்தடம் அமைந்தாலும் கடல்வாழ் அரிய உயிரினங்கள் அழியும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலோ, திமுக பெரும் மனக்கசப்பைக் கொட்டித் தீர்க்கும்.

இந்தத் திட்டத்தை மதரீதியாகப் பார்ப்பதைவிடவும், அறிவியல்பூர்வமாகவும் பொருளாதார ரீதியிலும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினாலும் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக 50 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும், பயண தூரம் சுமார் 300 மைல்கள் மிச்சப்படும் என்றாலும், இதனால் பெரும் லாபம் இல்லை என்றும் கப்பல் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர். இந்தக் கருத்துப்படி அதிக கப்பல்கள் இந்தக் கால்வாயைப் பயன்படுத்தாத நிலை உருவானால், மிகப்பெரும் நஷ்டம்தான் ஏற்படும்.

பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் இரண்டுமே தரைப்பகுதியை வெட்டி உருவாக்கப்பட்டவை. தூர்வார வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சேது சமுத்திரக் கால்வாயைத் தூர்வார ஆண்டுதோறும் பெரும்செலவு ஆகும். மேலும், மன்னார்வளைகுடா கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்துக்கான பாதுகாக்கப்பட்ட கடற்பகுதி. தூர்வாரும் பணிகளால் பவழப் பாறைகள், அரிய கடற்பாசிகள் ஆகியவை பாதிக்கப்படும். நீரி (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) ஏற்கெனவே அளித்த அறிக்கையில் தூர்வாரும் பணி காரணமாக அப்பகுதியில் 6 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு பல்லுயிர் பெருக்கம் நிரந்தரமாக அழிந்துபோகும் என்று தெரிவித்துள்ளது.

ராமர் பாலம் ராமரால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையிலேயே அமைந்த மண்மேடா என்பதையும், ராமர் என்பது நிஜமாக, வெறும் கதாப்பாத்திரமா என்பதையும் மறந்துவிட்டு, அறிவியல்பூர்வமாகவே இந்தப் பிரச்னையை அணுகினால், இதில் உள்ள சாதக பாதகங்களைப் புரிந்துகொள்வது எளிது.

ராமரைவிட, ராமர் பாலத்தைவிட, கிடைக்கும் எனக் கருதப்படும் வருவாயைவிட உயர்வானது கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம். தமிழ்நாட்டின் தென்மாநில வருமானத்தைப் பெருக்கிட ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால், பல்லுயிர் பெருக்கம் அழிந்துபோனால், அதை மீட்டெடுக்கவே முடியாது.

பிரதமர் அமைத்த ஐவர் குழுவின் தலைவர் ராஜேந்திர கே.பச்சோரி இயற்கை ஆர்வலர். புவிவெப்பம் குறித்த அறிவுக்காகவும், புவிவெப்பத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்காகவும் இவர் பொறுப்பு வகித்த ஐபிசிசி அமைப்பு சார்பில் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டவர். ஆகவே, நிச்சயமாக அரிய கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்களைக் கணக்கில் கொண்டிருப்பார். அவற்றைக் காக்கும் விதத்தில்தான் அறிக்கை அளிக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்.

அறிக்கையை நீதிமன்றத்தில் கொடுக்காமல் இத்தனைக் காலம் கிடப்பில் போட்டதற்கும்கூட, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்கு அது ஆதரவாக இல்லாததுதான் காரணம் என்பதாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும், "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்று பழமொழி இருக்கிறது. கடலில் அளக்காமல் போட்டது எவ்வளவு, அதனால் கிடைத்த பலன்தான் என்ன, அந்தப் பலனும் யாரைப் போய்ச் சேர்ந்தது என்றெல்லாம்கூட யோசிக்க வைக்கிறது சேது சமுத்திரத் திட்டம்!

நன்றி தினமணி



nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum