உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உள்ளாட்சி தேர்தல் 2011: சென்னையில் யாருக்கு என்ன செல்வாக்கு?

Go down

உள்ளாட்சி தேர்தல் 2011: சென்னையில் யாருக்கு என்ன செல்வாக்கு? Empty உள்ளாட்சி தேர்தல் 2011: சென்னையில் யாருக்கு என்ன செல்வாக்கு?

Post by nandavanam on Mon Oct 17, 2011 4:07 am
நன்றி விறுவிறுப்பு
சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) முதல் கட்டமாக
நடக்கவுள்ளது. தமிழகத்தின் தலைநகர் என்ற காரணத்தாலும், தமிழகத்தின் சகல
மாநில கட்சிகளில் தலைமைகள் இயங்கும் இடம் என்பதாலும், சென்னை முடிவுகள்
முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களிடமும் “ஜெயிக்கப்போவது யாரு” என்பதில்
பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் தேர்தல் பிரச்சாரம், மற்றைய இடங்களுடன் ஒப்பிடும்போது விறுவிறுப்பாக இல்லை.

பிரச்சாரத்தின்போது, சகல கட்சிகளும் குறி வைத்திருப்பது, சென்னை
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில்தான். இந்தப்
பகுதிகளில் இருந்து விழப்போகும் வாக்குகள்தான் இம்முறை வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கப் போகின்றன.

கடந்த தேர்தலின்போது, சென்னை மாநகராட்சியுடன் இணைந்திராத இப்பகுதி
மக்கள், தமக்கும் கிரேட்டர் சென்னை ரெசிடென்ட் என்ற அந்தஸ்து கிடைத்துள்ள
பிரமிப்பில் உள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், சென்னையின் ஒரிஜினல்
பகுதிகளில் உள்ளது போல, இந்த புதிய பகுதிகளில் சாலை, தெரு விளக்குகள்,
குடிநீர், வசதிகள் கிடையாது.

‘புதிய சென்னையில்’ தாமும் ஒரு அங்கம் என்ற ரீதியில், ஒரிஜினல்
சென்னையில் உள்ள வசதிகளை இவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவற்றை நிறைவேற்றித்
தரக்கூடிய மேயர் வேட்பாளருக்கே இவர்களது ஓட்டுக்கள் விழும்.

அந்த வகையில், அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்களைத் தவிர மற்றைய வேட்பாளர்களில் யாரையும் இவர்கள் பெருவாரியாக ஆதரிக்கப் போவதில்லை!

மொத்தத்தில், தலைநகரில் போட்டி சைதை துரைசாமிக்கும் (அ.தி.மு.க.),
சுப்ரமணியனுக்கும் (தி.மு.க.), இடையேதான். இவர்களில் ஒருவர்தான் சென்னை
மாநகர மேயராகப் போகின்றார்.

மற்றைய கட்சி வேட்பாளர்களும், களத்தில் உள்ளனர். மொத்தம் 32
வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின்
வேட்பாளர்களாக, வேல்முருகன் (தே.மு.தி.க.), மனோகரன் (ம.தி.மு.க.),
ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) சைதை ரவி (காங்கிரஸ்) ஆகியோர் உள்ளனர்.
இவர்களுக்கு விழப்போகும் ஓட்டுக்கள், கட்சியின் வாங்கு வங்கி மைனஸ்
அதிருப்தி வாக்குகள் மாத்திரமே.

மூன்றாவது இடத்தைப் பெறுவதில் இவர்கள் போட்டியிடுகின்றனர்.
விஜயகாந்த்தின் டைமிங் பிரச்சாரம் (பிளஸ் அதிரடி மிரட்டல்கள் ஏதும் இல்லாத
அமைதியான போக்கு) தே.மு.தி.க.வுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத் தரலாம்.
மூன்றாவது இடத்துக்கு காங்கிரஸ் கட்சி வந்தால் மொட்டை போடுவதாக
தமிழக நிருபர்களில் 4 பேர் எம்மிடம்
தெரிவித்துள்ளனர்.

சென்னை வாக்காளர்கள் எமக்கு அந்தச் செலவை வைக்க மாட்டார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, தற்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க. பற்றிய
ஆச்சரியமான ஒரு தரவு என்ன தெரியுமா? சென்னை மேயர் பதவியை அ.தி.மு.க.,
இதுவரை ஒரு தடவைகூட கைப்பற்றியது இல்லை. அதற்காகவே இம்முறை மேயர் பதவியை
பிடித்துவிட வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள்.

மற்றைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில், அ.தி.மு.க.வின் வேட்பாளர் தேர்வு
அருமை. சைதை துரைசாமிதான் அ.தி.மு.க. வேட்பாளர். இவர் நடாத்தும் மனித நேய
அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்தப்படுகிறது.
இவர்கள் தமிழக அரசின் தேர்வு ஆணையம் நடாத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி
அளிக்கிறார்கள். இவை அனைத்துமே இலவச சேவைகளாக நடாத்தப்படுகின்றன.

மத்தியில் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், மாநில அளவில் தமிழக
அரசின் அதிகாரிகள் குரூப் 1, 2 பதவிககளில் பலரும் சைதை துரைசாமியின்
மையத்தின் மூலம் பணியில் அமர்ந்துள்ளார்கள். படித்த வாக்காளரிடையே சைதை
துரைசாமிக்கு இது ஒரு அட்டகாசமான விசிட்டிங் கார்டு.

அதைத் தவிர, இவர் நடாத்தும் மனித நேய அறக்கட்டளை வேளச்சேரியில் இலவச
திருமண மண்டபம் கட்டிக் கொடுத்துள்ளது. வசதியற்ற, இறந்தவர்களின்
வீடுகளுக்கு இலவசமாக குளிரூட்டும் சவப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அத்துடன், ஆளுங்கட்சியின் பிரமுகர் என்ற அந்தஸ்து வேறு உள்ளது.

தி.மு.க.வின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் மா.சுப்ரமணியன் மீது பெரிய
அளவில் எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது என்பது ஒரு பிளஸ் பாயின்ட். ஆனால்
அதே நேரத்தில், அவரது சொந்த கட்சியின் தொண்டர்களிடையேகூட அவ்வளவாக
நெருக்கம் இல்லாத நபராக உள்ளார்.

கடந்த தேர்தலில் அவர் கவுன்சிலராக போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதன்
மூலமே மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த முறை நேரடியாக மேயர் வேட்பாளராக
போட்டியிடுகிறார். இதனால், இவரது லீடர்ஷிப் ஸ்கில்கள் எந்தளவுக்கு
ஸ்ட்ராங்காக உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. இவரது மாஸ் அட்ராக்ஷன்
பற்றி தி.மு.க.வினருக்கே சந்தேகம் உள்ளது.

இவர்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ஒரேயொரு கட்சித் தலைவர்
விஜயகாந்த்தான். சென்னை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய்க்கு ஊழல்
நடந்துள்ளது என்பது, அவரது குற்றச்சாட்டு. அந்த விபரத்தை அவர் எங்கிருந்து
பெற்றார் என்பதும் தெரியவில்லை. தான் குறிப்பிடும் ஊழல் பற்றிய விவரங்களை
அவர் வெளியிடவும் இல்லை.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு,
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வீதியில் இறங்கி தமக்கிடையே சண்டை போடாமல்,
காங்கிரஸ் வேட்பாளர் சைதை ரவிக்காக பிரசாரம் செய்துள்ளனர். வீதியில் இறங்கி
சண்டை போடவில்லை என்ற பெருமை மாத்திரமே இவர்களுக்கு உண்டு.

கவலைப் படாதீர்கள். தேர்தல் முடிந்தவுடன், இவர்களது அடிதடிகள் கோலாகலமாக தொடங்கும்.


நன்றி விறுவிறுப்பு
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum