உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புகைப்பழக்கத்தை மறக்கச் செய்யும் சூரியகாந்தி விதைகள்

Go down

புகைப்பழக்கத்தை மறக்கச் செய்யும் சூரியகாந்தி விதைகள்  Empty புகைப்பழக்கத்தை மறக்கச் செய்யும் சூரியகாந்தி விதைகள்

Post by nandavanam Tue Oct 04, 2011 2:58 am

புகைப்பழக்கத்தை மறக்கச் செய்யும் சூரியகாந்தி விதைகள்  SUNFL

நன்றி cnn

நாடு முழுவதும் பரவலாகப் பயன்படும்
சூரியகாந்தியின் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை. உடலுக்கு தேவையான
அனைத்து சத்துக்களையும் மருத்துவ பயன்களும் சூரிய காந்தியின் விதைகளில்
அடங்கியுள்ளன. இன்றைக்கு தமிழ்நாட்டில் 80 சதவிகித சமையலறையை சூரிய காந்தி
விதை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

சப்போனின்கள்-ஹீலியான்தோஸைடுகள்,A,B&C
லினோலிக்,மிரிஸ்டிக்,பாலிமிட்டிக், ஒலியாக்,ஸ்டீரியக்
அமிலம்,வைட்டமின்கள் A,D,மற்றும் E காணப்படுகின்றன. விதைகளில்
அசிட்டோன்,ஃபார்மிக் அமிலம் மெத்தில் ஆல்கஹால் காணப்படுகின்றன.

கொழுப்புச் சத்து குறையும்

சீதபேதியை
குணப்படுத்தும்.காய்ச்சல், வயிற்றுவலி, வலியுடன் சிறுநீர்கழிதல்,
கண்வலியுடன் வீங்குதல், மண்ணீரல், கோளாறுகள், புண்களை ஆற்றும்.

விதைகள்
பாக்டீரியா கொல்லிகள். சிறுநீர் கழிவை அதிகரிக்கும். கபம் வெளியேற்றும்,
காய்ச்சல் தணிக்கும், இருமல் ஜலதோஷத்திற்கு பயன்தரும். காற்று
குழாய்,பேச்சுக்குழாய், மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்தும்.
எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

விதையில்
உள்ள பொட்டாசியம் சத்து மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். ஒரு கோப்பை
சூரிய காந்தி விதையில் ஆயிரத்து 300 மில்லி கிராம் பொட்டாசியம்
காணப்படுவதாக உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விதைகளில்
இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய்
தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.

கால்
கோப்பை சூரிய காந்தி விதையில் 32 சதவிகிதம் மெக்னீசியம் காணப்படுகிறது.
இது நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை தொடர்பான
நோய்கள் வராமல் தடுப்பதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. இதயம்
தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள்
கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.

மெனோபாஸ் டென்சனை குறைக்கும்

இதில்
உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்தும், ஆன்டி ஆக்சிடண்டும் உடல் மற்றும் தசை
வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது. நீரிழிவு
மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மெனோபஸ் கால டென்சனை
குறைக்க உதவுகிறது.

புகைப்பழக்கத்தை மறக்கடிக்கும்

ஆண்டுகணக்கில்
சிகரெட் புகைப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பதில் சூரிய
காந்தி விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கறுப்பு தோலை நீக்கிய சூரிய
காந்தி விதைகளை சில நாட்கள் தொடர்ந்து மென்று தின்று வந்தால் சிகரெட்
புகைக்க வேண்டும் என்ற பழக்கம் மறந்து விடும் என்று மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.

நன்றி cnn
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum