2011இல் இந்தியாவின் பொருளாதாரம்
Page 1 of 1
2011இல் இந்தியாவின் பொருளாதாரம்
2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் ஏற்படுத்திய பொருளாதார பின்னடைவின் காரணமாக பாதிப்பிற்குள்ளான இந்தியாவின் பொருளாதாரம், இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் சுமையால் உருவான பொருளாதார பின்னடைவின் காரணமாக ஏற்றுமதி குறைந்து, அதன் எதிர்வினையாக தொழில் உற்பத்தி குறைந்து மந்த நிலையை 2011இல் சந்தித்துள்ளது.
2011ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி வளர்ச்சி திட்டமிட்ட இலக்கான 250 பில்லியன் டாலர்களை நோக்கி சென்றாலும், கடந்த சில மாதங்களாக ஏற்றுமதி மிகவும் குறைந்து வருவதாலும், அதே நேரத்தில் இறக்குமதி அதிகரித்து வருவதாலும் ஏற்றுமதி - இறக்குமதி பற்றாக்குறை அதிகரித்து வருவதால் அந்நியச் செலாவணிச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவின் தொழிலக உற்பத்தி இந்த நிதியாண்டில் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி, சுரங்கம், அத்யாவசியத் தேவைகள் உற்பத்தி ஆகியற்றின் கூட்டுதான் தொழிலக உற்பத்தியாகும். இந்தியாவின் தொழிலக உற்பத்திக் குறியீடு 1994 முதல் 2010ஆம் ஆண்டு வரை சராசரியாக 7.49 விழுக்காடு இருந்துள்ளது. இது கடந்த அக்டோபரில், கடந்த ஆண்டு அக்டோபரோடு ஒப்பிடுகையில் 5.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த ஏப்ரல் முதல் தொடர்ந்து அதிகரித்துவரும் இந்தியாவின் ஏற்றுமதி, நவம்பர் மாதத்தில் 22.3 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 35.9 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இந்த நிதியாண்டில் ஏற்றுமதி வளர்ச்சி, கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 33.2 விழுக்காடு அதிகரித்திருந்தாலும், இனிவரும் மாதங்களில் ஏற்றுமதி பெருமளவு குறையும் என்று மத்திய வர்த்தக அமைச்சக செயலர் ராகுல் குல்லர் கூறியுள்ளார். இதற்குக் காரணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடன் சுமையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாகும்.
இறக்குமதியை எடுத்துக்கொண்டால், கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் இறக்குமதி 30.2% அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 116.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
வர்த்தகப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 54 ரூபாயை தாண்டியுள்ளது. இது இந்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட இறக்குமதியாளர்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 20 விழுக்காடு குறைந்துள்ளது. இதன் விளைவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்கத் தொடங்கியதன் விளைவாக பங்கு வர்த்தகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 25 விழுக்காட்டிற்கும் அதிகமாக பங்குச் சந்தைக் குறியீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
மக்களின் மீது ஏற்றப்பட்ட பொருளாதாரச் சுமை
2008ஆம் ஆண்டில் கச்சா எண்ணெணையின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 146 டாலர்கள் அளவிற்கு உயர்ந்ததுபோல், இந்த ஆண்டில் தரம் வாய்ந்த கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான லிபியாவி்ல் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால், கச்சா எண்ணெணையின் விலை பீப்பாய்க்கு 120 டாலர்கள் வரை உயர, பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன.
அரசின் விலைக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் பலமுறை உயர்த்தி, ஆசியாவிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் நாடாக இந்தியாவை உயர்த்தின!
மே மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் முடிந்த கையோடு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. அடுத்த மாதமே டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 கூட்டியது மத்திய அரசு.
பெட்ரோல் விலையுயர்வு நகர மக்களை பாதித்தது என்றால், டீசல் விலை உயர்வு சரக்குக் கட்டணங்களை உயர்த்த காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்த வழிவகுத்தது. இதனால் ரூபாயின் வாங்கும் திறன் குறைய, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு விலைகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் காய்கறிகள், பழ வகைகள், பால், முட்டை, ஆட்டிறைச்சி, கோழி, பருப்பு வகைகள் என்று அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் - மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் 10 விழுக்காட்டிற்கு அதிகமாகவே இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகத்தான் உணவுப் பொருட்கள் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேறு வழியேதும் இல்லாத நிலையில் குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதங்களை (ரீபோ, ரிவர்ஸ் ரீபோ) தொடர்ந்து உயர்த்தியது இந்திய மைய வங்கி (ஆர்பிஐ). இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றை வணிக வங்கிகள் உயர்த்தின. இதன் விளைவாக வாகன விற்பனை - குறிப்பாக கார்கள் விற்பனை இந்த ஆண்டின் கடைசி மாதங்களில் வெகுவாகக் குறைந்தது.
மொத்தத்தில் 2011ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு ஒரு பின்னடைவாகவே இருந்துள்ளது.
நன்றி வெப்துனியா
Similar topics
» மக்கள்தொகை: தடுமாறும் பொருளாதாரம்
» இந்தியாவின் ராஜபாட்டையால் யாருக்கு லாபம்?
» இந்தியாவின் இதயத்துக்கு வயது நூறு!
» இந்தியாவின் ராஜபாட்டையால் யாருக்கு லாபம்?
» இந்தியாவின் இதயத்துக்கு வயது நூறு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum