உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்

Go down

இளமையாக வாழ உதவும் வாழைப்பழம் Empty இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்

Post by nandavanam on Thu Dec 22, 2011 3:17 am

இளமையாக வாழ உதவும் வாழைப்பழம் Banana_medikal
“தினசரி ஒரு ஆப்பிள் போதும்,
வைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு
வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்தது தான். எனினும்
இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி இந்தியாவின்
டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர்.

அவர்கள் கூறியதாவது: வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது
சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில் 0% கொழுப்பு கொண்டது வாழை.

மாறாக அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள
ஸ்டார்ச்(ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு
சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம்,
மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத,
திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது.

இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி,
பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால் ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள் தான் சமம்.

ஏனெனில் ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம்,
விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.

வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக
இருக்கலாம். எனவே தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம்
நிச்சயம்.


நன்றி cnnnandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum