உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா?

Go down

உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? Empty உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா?

Post by nandavanam on Sat Dec 03, 2011 3:28 am

உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? Images?q=tbn:ANd9GcSZYnoM7jVW-usoa_xwqrZSHxc5-OjK-n8oYj9V1E0KZaF2KLq0அரசியலில் ராஜ தந்திரம் என்பது
இன்றியமையாத ஒன்று, அந்த குணத்தை வைத்தே அரசியலில் வெற்றி தோல்விகள் முடிவு
செய்யப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் இரு பெரும் கட்சிகளான அதிமுக
வும் திமுக வும் இருந்து வருகின்றன, அதிமுக செல்வி.ஜெயலலிதாவின்
தலைமையிலும், திமுக திரு.கருணாநிதியின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.
கடந்த 20வருடங்களில் நான் கவனித்து வந்த அரசியலில் இவ்விருவருமே தமிழகத்தை
தங்களின் ஆளுமையால் கட்டுபடுத்தி வருகின்றார்கள், இவ்விருவரையும் நான்
கவனித்தவரையில் யார் சிறந்த ராஜதந்திரி அல்லது அரசியல் சாணக்கியர் என்று
என் அரசியல் ஞானத்தை வைத்து அலசப்பட்டுள்ள அரசியல் பதிவு, இது தமிழகம்
சார்ந்த, அவர்களின் அரசியல் சார்ந்த முடிவுகளின் அடிப்படையில்
அலசப்பட்டுள்ளது.


கலைஞர் கருணாநிதி: 1991 - 1996
உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? 18277

 • 1991
  தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகும், 1993 ல் திமுக உடைந்து மதிமுக
  உருவான பின்னும் கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்து மீண்டும் அபார
  வெற்றி பெற்றது அவரின் தன்னிகரில்லாத தலைமைக்கு அபாரமான எடுத்துக்காட்டு. • தனித்தே
  நின்றிருந்தாலும் ஜெயலலிதாவின் மீதிருந்த வெறுப்பினால் வெற்றி பெறக்கூடிய
  சூழ்னிலை இருந்தும், புதிதாக உதயமான த மா கா விற்க்கு 40 சட்ட மன்ற
  தொகுதிகளை கொடுத்து கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து போனது நல்ல ஒரு
  முன்னுதாரணம்.

செல்வி.ஜெயலலிதா 1991 - 1996


உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? Images?q=tbn:ANd9GcQMpaLAx-YMWhZJSnvSr-Sib-991YHY0eesJJGJOLwFd4kzGeneOw

 • 1991 தேர்தலில் பெற்ற அபரிதமான வெற்றியை தன் அரசியல் அனுபவமின்மையால், தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.


 • 1991 பெற்ற வெற்றி தன்னால் பெற்ற வெற்றி என்று வீர வசனம் பேசிவிட்டு மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணிக்காக காத்து கிடந்தது.
கலைஞர் கருணாநிதி: 1996 -2001

உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? Images?q=tbn:ANd9GcRIjB5t5FbGtrO2Wjbwrh5BgBE3Q6OuGEmB1RUm4lMod73qstOZ


 • ஜெயலலிதாவின் மீதுள்ள வெறுப்பால் பெற்ற வெற்றிக்கு த ம கா விற்கும் பங்கு கொடுத்தது .
 • 1996 ல் நடை
  பெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ தி மு க தனக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து
  எழுந்திராத நிலையிலும், த மா கா அவசியம் இல்லாத போதிலும் நகராட்சி தலைவர்
  பதவிகளையும் , மேயர் பதவிகளையும் வாரி வழங்கியது.

 • 1998 மக்களவை
  தேர்தலில் 2 இடங்கள் கேட்ட பா ம க வை உதறி பிரயோஜனமே இல்லாத த மா கா விற்கு
  மீண்டும் 20 மக்களவை இடங்களைக் கொடுத்தது. அந்த தேர்தலில் தோல்வி அடைந்து அ
  தி மு க விற்கு புத்துணர்சி தந்தது.

 • 1999 தேர்தலில் ஜெயலலிதா பாணியிலேயே கூட்டணி அமைத்து தன் தனித் தன்மையை இழந்தது.
 • 2001 ல்,
  பயனில்லாத பா ஜ கா வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் த மா கா, பா ம க
  கம்யூனிஸ்டு, ம தி மு க வுடன் கூட்டணி அமைக்க முடியாமல் நல்லாட்சி
  தந்திருந்தும் தேர்தலில் தோற்றது.

செல்வி.ஜெயலலிதா 1996 - 2001


 • 1996 ல் கிடைத்த படுதோல்விக்கு பிறகு தனி ஒரு நபராக கட்சியை தூக்கி நிறுத்தியது
 • 1998 ல் யாரும் எதிர்பாராத விதமாக ஜம்போ கூட்டணி அமைத்து மீண்டும் வெற்றி வெளிச்சத்தில் வலம் வர தொடங்கியது.
 • 1999 ல் பலமான கூட்டணி இல்லாமலேயே சாதகமான வெற்றியைப் பெற்றது.
 • 2001 ல் தன்னை
  எதிர்த்து தொடங்கப் பட்ட த மா காவையே தன் கூட்டணிக்குள் அழைத்து
  மறுமுறையும் பலமான கூட்டணி அமைத்து 1996 ல் இழந்த வெற்றியை மீண்டும்
  பெற்றது.கலைஞர் கருணாநிதி: 2001-2006


 • 2001 ல் தன்னை கைது செய்த சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றது.
 • 2004 ல் மீண்டும் ஜெயலலிதாவின் பாணி கூட்டணி அமைத்து அபார வெற்றி பெற்று மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்தது .


செல்வி.ஜெயலலிதா 2001- 2006உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? Images?q=tbn:ANd9GcS2oS7PgeNGalxEStU-8oF7xOwT0WGWGxZWIoea1bMyJw-EESuO

 • ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை தவறான அணுகுமுறையில் கைது செய்தது.
 • அரசு அலுவலர்களை சாட்டையால் வேலைவாங்குவேன் என தைரியமாக சொன்னது
 • மதரீதியிலான சில வேண்டாத முடிவுகளை எடுத்தது
 • தன்னை எதிர்த்து
  அரசியல் செய்த வை கோ வை 2006 தேர்தலில் தன் அணிக்கு வரவழைத்து, பலமில்லாத
  கூட்டணியாக இருந்தும் குறிப்பிட்டு சொல்லும் படியான வெற்றியை பெற்றது.கலைஞர் கருணாநிதி: 2006 - 2011 • பலமான கூட்டணி அமைத்தும், வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை தேர்வு செய்யாமல் பெரும்பான்மை பெற முடியாமல் போனது
 • கடும் மின்வெட்டுக்கு வழி வகுத்தது
 • மீண்டும் காங்கிரஸுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கொடுத்து மேயர் பதவியையும், நகராட்சி தலைவர் பதவிகளையும் வாரி வழங்கியது
 • மீண்டும் ஜெயலலிதாவை பழிக்கு பழியாக கைது செய்யாமல், பழிவாங்கும் அரசியலுக்கு முடிவு கட்டியது.
 • மீண்டும்,மீண்டும் ஒரே மாதிரியான அமைச்சரவைகளை அமைத்தது.
 • பலமே இல்லாத காங்கிரஸ் கட்சியை 2009 தேர்தலிலும் தூக்கி சுமந்தது
 • இலங்கை தமிழருக்கு ஆதரவு தராதது
 • 2011 தேர்தலில் கட்சியையும் மக்களையும் மறந்து குடும்பத்திற்காக காங்கிரஸிடம் கேவலப்பட்டு ஆட்சியை இழந்தது.


செல்வி.ஜெயலலிதா 2006 - 2011
 • ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக செயல்படாவிடாலும், திடீர் திடீரென சட்டசபையில் கலந்து கலக்கியது
 • இலங்கை தமிழர் பிரச்சனையை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டது
 • கடைசி 18 மாதங்களில், கட்சியை அசுர வேகத்தில் பலப்படுத்தியது
 • திறனான கூட்டணி அமைத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்தெடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
கலைஞர் கருணாநிதி: 2011


உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? Images?q=tbn:ANd9GcRkCiFlcIGcyqNJod2Rgm08h9a2wLc7uAuYWnrwndmV8TRZGss6

 • பொறுப்புள்ள கட்சியின் தலைவர் என்பதை மறந்து, ஒரு குடும்பத்துக்கு மட்டும் தலைவராக இருப்பது


செல்வி.ஜெயலலிதா : 2011உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? Images?q=tbn:ANd9GcQKjJfaDnatyNxO4HoZ9FItO9i_80e8E57cM2EUdyru9k1cOJst

 • சட்ட
  மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் அனைத்து கட்சிகளையும் தள்ளிவைத்து
  உள்ளாட்சி பதவிகளை பங்கு போடாமல் தன் கட்சி தொண்டர்களுக்கே பதவிகளை வாரி
  வழங்கியது.

 • இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு தேர்தல் கவலை இல்லை என்ற தெம்பில் பால், பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.அவர்களின்
குண நலன்களை இங்கே எனக்கு தெரிந்தவரையில் பட்டியலிட்டு இருக்கிறேன், இனி
யார் சிறந்த அரசியல் ராஜ தந்திரி என்பது உங்களின் கைகளில் , முடிவில்.எழுதியவர் A.R.ராஜகோபாலன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum