உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இரட்டிப்பு கொள்ளையடிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்

Go down

இரட்டிப்பு கொள்ளையடிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் Empty இரட்டிப்பு கொள்ளையடிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்

Post by nandavanam on Thu Nov 24, 2011 4:05 am

இரட்டிப்பு கொள்ளையடிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் Img1111123036_1_1

‘தாய் எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்’ என்கிற தமிழ் பழமொழிக்கு சரியான இலக்கணமாகத் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள்.

தமிழக
அரசின் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன என்று கூறி,
பேருந்துக் கட்டணங்களை 50 முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தினார் தமிழக
முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் அறிவித்த கட்டணங்களும், நடைமுறையில்
வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. பயணக்
கட்டணச் சீட்டை பெறுவோர் அதிர்ச்சியால் உரையும் அளவிற்கு கட்டணங்கள்
உயர்த்தப்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டாக,
குறைந்த பட்ச கட்டண உயர்வு ரூ.2இல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்படும்
என்றுதான் முதல்வர் அறிவித்தார். ஆனால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த
ஸ்டேஜ்கள் நீக்கப்பட்டு, கட்டணங்கள் 100 விழுக்காடு வரை
உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரிய ஏமாற்றுச் செயல் என்னவெனில், வெள்ளை
போர்ட் பேருந்துகள் முற்றிலுமான சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன
என்பதுதான். எனவே குறைந்த பட்ச கட்டணத்தில் பயணம் செய்யும் பேருந்துகளே
இல்லை!


கட்டணம்
உயர்த்தப்பட்ட நாளில் மட்டுமே வெள்ளை பேருந்து இயங்கியது. அடுத்த நாள் அது
மஞ்சள் போர்ட் பேருந்தாகி, சைதாப்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டு வரை
செல்ல ஏற்கனவே வசூலித்த ரூ.4.50. நடத்துனர் இரண்டு கட்டணச் சீட்டுகளை
அளித்தார், அதாவது ரூ.9! என்னப்பா இது என்று கேட்டால், இது மஞ்சள் போர்ட்
சார் என்கிறார்.


அடுத்த
கட்டமாக, பல வெள்ளைப் பேருந்துகள் மஞ்சள் போர்ட் பேருந்துகளாகவும், பச்சை
நிற (எக்ஸ்பிரஸ்) பேருந்துகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் என்ற
பெயர் கொண்ட தாளை ஒட்டிக்கொண்டு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எமது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் வெள்ளைப் பேருந்துக்காக 1 மணி
நேரத்திற்கு காத்திருந்தும் அது வரவில்லை. ஆனால், இடைப்பட்ட நேரத்தில்
வந்ததெல்லாம் எக்ஸ்பிரஸ் - அதாவது பச்சை போர்ட் பேருந்துகள்தான்! பல வழித்
தடங்களில் இயங்கும் பேருந்துகளில் பாதி எக்ஸ்பிரஸ், மீறி வருபவை அனைத்தும்
டீலக்ஸ் பேருந்துகள். இந்த டீலக்ஸ் பேருந்துகள் கட்டணம், ஏற்கனவே வெள்ளைப்
பேருந்து கட்டணங்களை விட 3 மடங்கு வசூலித்தவை, இப்போது 6 மடங்கு
வசூலிக்கின்றன!


ஆக,
அரசு உயர்த்தி அறிவித்ததற்கும் அதிகமாக கலர் போர்ட் காட்டி அதிகாரிகள்
கட்டண வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இராஜ விசுவாசம் என்பது இதுதானோ?
இது நகர பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளை, புற நகர் பேருந்துகளில்
எப்படி நடக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.நன்றி வெப்துனியா

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum