உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே.........

Go down

விலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே.........  Empty விலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே.........

Post by nandavanam on Tue Nov 22, 2011 4:01 am

விலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே.........  Jayalaitha-milk-bus--1

பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வை தொடர்ந்து மின்சாரக்கட்டணத்தையும் உயர்த்த இருக்கிறதாம் ஜெயலலிதா அரசு.....இந்த விலையேற்றத்திற்கு என்ன காரணம் சொல்வார் ஜெ....என்று கற்பனையாக யோசித்ததன் விளைவுதான் இந்த பதிவு....

பேருந்துக்கட்டண உயர்வு....

ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களால் தமிழக மக்கள் அதிக அளவில் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வியாதிகளை முற்றிலும் நீக்கி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவைப்பது உங்கள் அன்பு சகோதரியின் கடமை. அதற்காக என்ன செய்யவேண்டும் என்று மருத்துவர்களை கலந்து ஆலோசித்தபோது,
தினமும், சிறிது தூரம் நடந்தாலே போதும் சுகர், BP, இதய நோய்கள் எட்டிப்பார்க்காது. ஆனால், மக்கள் நடப்பதேயில்லை. குறைந்த விலையில் பேருந்துக்கட்டணம் இருப்பதால், ஒன்றிரெண்டு கிலோமீட்டர் போவதாக இருந்தாலும் பேருந்திலேயே பயணிக்கிறார்கள். இதனால்தான் நோயாளியாக இருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது.

அப்படி மக்கள் காலார நடப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஹெலிகாப்டரில் பறந்தபடியே நான் யோசித்தபோது, பேருந்துக்கட்டணத்தை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டால் எல்லோரும் வேறு வழியின்றி நடந்துதானே ஆகவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை உதித்தது. அதன்படியே பேருந்துக்கட்டணத்தை உயர்த்தியுள்ளேன். மக்கள் நடப்பதன் மூலம், இனி ஆரோக்கியமான மாநிலமாக தமிழகம் திகழும்.

ஆனாலும், மக்கள் எவ்வளவு தூரம் தான் நடப்பது? நடக்கும் தூரம் 3 கி.மீ-க்கு அதிகம் இருந்தால், அவர்கள் சைக்கிளில் போகலாம்.
அப்படி,சைக்கிள் கூட இல்லாதவர்களுக்காக, கிராமந்தோறும், இருக்கும் நியாயவிலைக்கடையை ஒட்டி ஒரு நியாய வாடகை சைக்கிள் கம்பேனி ஆரம்பிக்கப்பட்டு, ஒரு மணி நேர வாடகையாக ரூ 1 மட்டுமே வசூலிக்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 1500 கோடி ரூபாயை நிதியாக என் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க இனி ரேசன் கடையில் இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது.

பால் விலையேற்றம்....

பால் விலையேற்றம் நிச்சயம் ஏழை எளிய மக்களை பாதிக்காது. என் அரசு ஏழைகளுக்காக இலவசமாக வழங்க இருக்கும் ஆடு, மாடுகளை, மக்கள் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறதாக எனக்கு கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இந்த பால் விலையேற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், இனி ஏழை மக்கள் கடைக்கு சென்று பால் வாங்கவே முடியாது. வேறு வழியின்றி என் அரசு கொடுக்கும் இலவச மாடுகளை மேய்த்து தங்கள் பால் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியதுதான். மாடுகளுக்கு தீவனமாக ரேசன் கடையில் மாதம் ஒன்றுக்கு ஒரு கட்டு புல்லும், பத்துகிலோ புண்ணாக்கும் மானிய விலையில் வழங்கப்படும்.

மின்கட்டணம் உயர்வு....

மின்கட்டண உயர்வைப்பற்றி மக்கள் ஒரு போதும் கவலைப்படவேண்டாம். முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசில் செலுத்தியதைவிட விட குறைவாகவே என் ஆட்சியில் மின் கட்டணம் செலுத்தப்போகிறீர்கள். எப்படி என்றால், மைனாரிட்டி தி.மு.க, ஆட்சியில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே மின்வெட்டு இருந்து மீதமுள்ள 21 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைத்ததால் நீங்கள் செலுத்தவேண்டிய மின் கட்டணம் உயர்ந்தது.

ஆனால், என் ஆட்சியில் ஒரு நாளைக்கு ஏழு, அல்லது எட்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்த சொல்லி உத்தரவிடுள்ளேன். அப்படி நிறுத்தப்படும் ஏழு, எட்டு மணி நேரம் போக மீதி 16 மணி நேரமே மின்சாரம் வருவதால் நீங்கள் செலுத்தவேண்டிய மின்கட்டணம் பாதியாக குறைந்து விடும்.

இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசுதான் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். தீயசக்தி கருணாநிதி மட்டும் அவர் ஆட்சியில் பேருந்து, மின்சாரம், பால் போன்றவற்றின் விலையை உயர்த்தியிருந்தால்... அவர்கள் திட்டங்களையெல்லாம் எடுக்கவேண்டும் என்ற என் ஏட்டிக்குப்போட்டி மனப்பான்மையின் படி நான் விலையை குறைத்திருப்பேன்.


எழுதியவர் ரஹீம் கஸாலி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum