உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்!

Go down

அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்! Empty அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்!

Post by nandavanam on Mon Nov 21, 2011 4:12 am

அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்! 020509_ariviyal_spacelift

அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, உள்நோக்கி மெய்ப்பொருள் தேடும் அக நுட்பம். இன்னொன்று, வெளியே செய்பொருள் காணும் தொழில்நுட்பம். முன்னது விழிப்புணர்வு. மனிதனின் அக ஆளுமையை வளர்க்கும் பகுத்தறிவு. பின்னது வாழ்வின் புற வசதிகளைப் பெருக்கும் பகுப்பாய்வு. இரண்டுமே இன்று நம் தேவை.

இன்றைக்குச் சரியாக 48 ஆண்டுகளுக்கு முன்னால், 1963-ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 21) "நைக்கி அப்பாச்சி' என்ற முதலாவது ராக்கெட் இந்திய மண்ணில் இருந்து மிக அடக்கத்துடன் விண்ணில் உயர்ந்தது. திருவனந்தபுரம் அருகே தும்பா கடற்கரை அந்தப் பெருமை பெற்றது. இயற்கையில் புவிகாந்த நடுக்கோட்டில் அமைந்துவிட்ட ஒரு மீன்பிடி கிராமம்.

அங்கு ராக்கெட் நிலையம் வந்தாலும் உச்சிமீது வானிடிந்து வீழ்ந்து விடாது என்று மக்கள் அச்சத்தைப் போக்கினோம். தும்பா நிலநடுக்கோட்டு ராக்கெட் ஏவுதளம் உருவாயிற்று. எத்தனையோ சோதனைகள், சாதனைகளின் ஆரம்பகாலச் சாட்சியம் கூறும் தும்பா ஏவுதளத்தில் இந்தியாவிலேயே முதலாவது பெரிய திட உந்து எரிபொருள் தயாரிப்பு நிலையம் எழுப்பப்பட்டது.

ஹோமி ஜே.பாபா, விக்கிரம் சாராபாய், சிட்னிஸ், அப்துல் கலாம் போன்றவர்களால் ராக்கெட் ஏவுதளமாகத் தேர்வு செய்யப்பட்டபோது, அந்தப் பகுதியில் இருந்த மரிய மக்தலேனா தேவாலயமும், பிஷப் பெரெய்ரா வாழ்ந்த ஓட்டு வீடும் இன்று வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டன. இந்திய விண்வெளி அருங்காட்சியகமும், மக்கள் தொடர்பு அலுவலகமும் ஆக அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நம் முதலாவது "ரோகிணி - 75' வானிலை ஆய்வூர்தி 1967 அக்டோபர் 25 அன்று வெறும் 2.5 கிலோ கிராம் எரிபொருளால் 7 கிலோமீட்டர் உயரம் வரை பறந்தது.

இன்று உலகிலேயே மிகக் கனமான திட எரிபொருள் ஏவூர்திகள் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், உக்ரைன், எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, சுவீடன், பல்கேரியா, பிரான்சு, பிரேசில், நார்வே, நெதர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய மேலை நாடுகள் அகர வரிசையில் தத்தம் செயற்கைக்கோள் பொட்டலங்களுடன் சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிக்கோட்டா வெயிலில் காத்து நிற்கின்றன.

ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், அந்நாளில் தமிழகத்தில் திருநெல்வேலி கடலோரம்தான் செயற்கைக்கோள் ஏவுதளத்துக்கான இடம் முதலில் பரிந்துரைக்கப்பட்டது என்பதே உண்மை.

"வானவூர்தி ஏறினள் மாதோ' என்று கண்ணகியைத் தெய்வமாக வழிபடுகிறோம். வானவூர்தியை எனது முப்பாட்டன் கண்டுபிடித்தான் என்றெல்லாம் இன்று சின்னத்திரையில் முழங்குகிறோம். இந்தப் பிரசாரத்துக்கு உறுதுணை செய்யும் செயற்கைக்கோள்கள் செலுத்தும் ஏவுதளத்தை ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குத் தள்ளி விட்டோம்.

அறிவியலில் மட்டுமா, திராவிடக் கலாசாரம் பற்றி சுயநலத்துக்காக மட்டும் வாய்கிழியப் பேசுகிறோம். பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத்தைப் பணக்கார சாமி பள்ளி கொள்ளும் திருவனந்தபுரத்துக்குப் பயணச்சீட்டு கொடுத்து வழி அனுப்பினோம். திராவிடப் பல்கலைக் கழகத்தையோ கொஞ்சமும் தீண்டாமல் ஏழுமலையானின் ஆந்திரக் குப்பத்துக்கு வண்டி ஏற்றிவிட்டோம்.

அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என்று பிறர்க்குத்தான் பாடம் நடத்துகிறோம். நமக்கு அல்ல. அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி என்கிற வெள்ளை அறிக்கையை மேற்கோள்

காட்டுவோம். அதையே செயல்படுத்தக் கருப்புக்கொடி தான் காட்டுகிறோம். உண்மையான அறிவியல் வீரம் வாய்ச்சொல்லிலும், புறநானூற்றுக் கதைப் பாடல்களிலும் மட்டும் அல்லவே.

இதற்கு மத்தியில் அபாய அணு உலை எங்களுக்கு. மின்சாரம் அவர்களுக்கா என்று அரசியல் வாதம் வேறு. அப்படியானால் அபாய அணைக்கட்டுகள் எங்களுக்கு, தண்ணீர் பக்கத்து வீட்டாருக்கா என்று அண்டை அயலார் நம்மைக் கேட்டால் என்னவாகும்?

சொன்னால் சிரிப்பீர்கள். 1783-ம் ஆண்டு பிரான்சு நாட்டில் காற்றில் வெறும் ஹைட்ரஜன் பலூன் பறக்கவிடும் பரிசோதனைக்கு கன்னேசி கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சோகம்தான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது.

பேராசிரியர் ஜேக்கியு சார்லஸ் மற்றும் நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் சகோதரர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். ஆனால், அவர்கள் ஆய்வு மாண்ட்கோல்ஃபியர் பலூன்கள் தொடங்கி இன்றுவரை வானவியலில் முக்கியத்துவம் பெற்றது. போகட்டும்.

அறிவியலும், தொழில்நுட்பமும் ஒன்றன்பின் ஒன்றாக மேம்படுத்தப்பட்டே உருவாகிறது என்பதுதான் சத்தியம். சாத்தியம். அதை அறியாமல் முழுப் பழத்தை முதலிலேயே உருவாக்க வேண்டியதுதானே என்று தொழில்நுட்ப எதிர்ப்பாளர்கள் கேட்பது வேடிக்கை.

உணவு விடுதிக்கு உண்ணச் சென்றவன் பொங்கல், இட்லி, தோசை, வடை, பூரி, சப்பாத்தி என்று பட்டியல் போட்டுச் சாப்பிட்டு, கடைசியில் ஒரு குவளைத் தேனீர் அருந்தியதும் பசி அடங்கிற்று. அதற்காக தேனீரை முதலிலேயே தந்து இருக்க வேண்டியதுதானே என்று பரிமாறுகிறவரிடம் கோபித்துக் கொண்டால் எப்படி?

சில நோட்டுப் புத்தக ஆசிரியர்களின் இன்னொரு பழஞ்சாண் விவாதம். மின்சார உற்பத்திக்கு மாற்று வழிகள் உண்டே என்கிறார்கள். பஞ்ச பூதங்களும் ஆற்றல் மூலங்கள் என்று தெரியாதா என்ன? நிலத்தின் கரி, நீரின் புனல், காற்றின் இயக்கம், நெருப்பின் அனல் அனைத்து விசைகளையும் தாண்டி வானத்தின் சூரிய ஒளியிலும், புவிகாந்தத்திலும் மின்சாரம் தயாரிக்கலாம். இதையும் விஞ்ஞானிகள்தானே உணர்த்தினார்கள்.

பிரம்மாண்டமான கற்கோயில்களும் கல்லணைகளும் எழுப்புவதில் அன்றைய கட்டுமான உழைப்பாளிகள் சந்தித்த சவால்கள் நாம் அறிய மாட்டோம். இன்றுவரை நிலைத்து நிற்பதைச் சொன்னால் அதில் வாக்கியப் பிழை, சந்தி - சாரியைப் பிழை என்று வாதாட அறிஞர்கள் அனேகம். மேலும் தொழில்நிபுணர்களுக்கு "அறிவியல் கோமாளிகள்' என்ற பல்கலைப் பட்டமே வழங்கி விட்டனர், போங்கள். தீர்க்கதரிசியான அறிவாளி கலைவாணரே தம்மை ஒரு நாகரிகக் கோமாளி என்றுதானே எடுத்துக்கொண்டார்.

எப்படியோ, எதையும் ஒட்டுமொத்த அமைப்பாக இனி பகுப்பாய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நிலநடுக்கமும், சுனாமியும் பற்றிப் பகுத்தறிவுக்கு ஒத்து வராத சத்திய வாக்குமூலம் கேட்கிறார்கள். அதிராத பூமி இந்த அண்டவெளியில் இல்லையே. நம் பூமிப் பேருந்து மணிக்கு ஏறத்தாழ 1,700 கிலோமீட்டர் அசுர வேகத்தில் தன்னச்சில் சுழன்று கொண்டு இருக்கிறது. சூரியனையும் கண் இமைக்கும் நொடிக்குள் (மணிக்கு அல்ல!) 30 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. போகிற போக்கில் எவருக்கும் தெரியாமல் மெலிதாக இடையறாமல் அதிர்ந்துகொண்டே இருக்கத்தான் செய்கிறது. நடுங்காமல் குலுங்காமல் இயங்கும்படி பூமியை எவராலும் எதிர்த்துப்போராட முடியாது.

அணுசக்திக்கு எதிரானோர் தங்கள் குழுவில், "பிரிட்டனைச் சார்ந்தவர்' ஒருவரை அறிவிக்க முன்வந்தது அணுகுண்டைக் காட்டிலும் ஆச்சரியம். ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னைக்கு அன்னிய அறிஞர்களை இறக்குமதி செய்வது துப்பறிய வேண்டிய அம்சம் ஆயிற்றே.

தொலைநோக்கு வேறு. தூரப்பார்வை வேறு. எதற்கு எடுத்தாலும், ஜெர்மனியைப் பார், பெல்ஜியத்தைப் பார் என்பது இன்று ஃபேஷன் ஆகி வருகிறது. சீனாவைப் பார், பாகிஸ்தானைப் பார், இலங்கையைப் பார் என்கிற கிட்டப்பார்வை இங்கு எவருக்கும் கிடையாதா?

நாட்டின் பாதுகாப்புத் தன்மையும் இதோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறது. உணவு, கல்வியும் சுகாதாரமும், உள்கட்டமைப்பு (மின்சாரம்), தகவல் தொழில்நுட்பம் (பொருளாதாரம்), வியூகத் தொழில்நுட்பங்கள் ஆகிய டாக்டர் கலாமின் "நவீன பஞ்ச சீலக் கொள்கை' கவனத்துக்கு உரியது.

எல்லாம் இருந்தும் வீட்டிலோ, நாட்டிலோ அடிதடி வந்தால் என்ன செய்ய? கையில் வாள் இல்லாமல் போனாலும், குறைந்தபட்சம் கேடயமேனும் அவசியம் ஆயிற்றே. "சக்தியே சக்தியை மதிக்கும்' என்பார் டாக்டர் கலாம்.

சுண்டைக்காய் அளவு ராக்கெட்டில் தொடங்கி இன்று சூரியனுக்கு "ஆதித்யா' செலுத்துகிறோம். நெருப்பைக் கண்டு பயப்பட நாம் காட்டுவாசிகள் அல்லவே. நம் தொழில்நுட்ப நிபுணர்கள் தினமும் பல நூறு டன்கள் எரிபொருள் தயாரித்துச் செயற்கைக்கோள் செலுத்தி வருகிறார்கள். அணு உலை என்பதும் தீபாவளி வெடி அல்ல, பொருத்திப் போட்டுவிட்டு விஞ்ஞானிகளே தப்பித்து ஓட முடியுமா? அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. உயிர்ப் பாதுகாப்பு பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்களும்தான்.

தங்களை மட்டும் மனிதாபிமானி என்று வர்ணித்து அறிவியலை எதிர்ப்பானேன்?

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum