உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

வீரபாண்டியார் வீணாக அழுகிறாரா? வீம்புக்காக அழுகிறாரா? (ஆள் அழுகிறார்)

Go down

வீரபாண்டியார் வீணாக அழுகிறாரா? வீம்புக்காக அழுகிறாரா? (ஆள் அழுகிறார்) Empty வீரபாண்டியார் வீணாக அழுகிறாரா? வீம்புக்காக அழுகிறாரா? (ஆள் அழுகிறார்)

Post by nandavanam on Thu Oct 06, 2011 3:29 am

நன்றி விறுவிறுப்பு

“பதவியில் இல்லாததால், போலீஸ் அதிகாரிகளில் இருந்து நீதிபதிகள் எல்லோரும் எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்” என்று தி.மு.க.வினரிடம் தேர்தலில் தோற்றதில் இருந்தே புலம்பல்கள் கேட்டவண்ணம் உள்ளன. இதில் ஒன்றும் புதுமை இல்லை. நாளைக்கே அ.தி.மு.க. தோற்றாலும் இப்படித்தான் புலம்புவார்கள்.
புதுமை என்னவென்றால், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் ‘தூண்களில்’ ஒருவரும் புலம்புவதுதான்!
தனது சொந்தக் கட்சியே தன்னைக் கண்டு கொள்வதில்லை என்று புலம்பும் அவர், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்தான்!
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதானபோது, தி.மு.க. அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொண்டது. வீரபாண்டியாருக்கு ஆதரவாக நிற்குமாறு, கட்சி மேலிடத்தில் இருந்தும் மாவட்ட ஆட்களுக்கு உத்தரவு போனது. வீரபாண்டியாரும், காவல் நிலையத்துக்கும், கோர்ட்டுக்கும், ஆதரவாளர்கள் சகிதம் வந்திறங்கி அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்.
வீரபாண்டியார் வீணாக அழுகிறாரா? வீம்புக்காக அழுகிறாரா? (ஆள் அழுகிறார்) 20111003-TOD-9
அழகிரி அவரை வீட்டில் சென்று பார்த்தார். ஸ்டாலின் அவரைச் சிறையில் சென்று பார்த்தார். கோவையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், கலைஞரும் வீரபாண்டியார் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசினார்.
இப்போது யாரும் கண்டு கொள்கிறார்கள் இல்லை என்று தனது ஆதரவாளர்களிடம் கூறத் தொடங்கியிருக்கிறார் அவர்.
சிறைக்குச் செல்லும்போது வீரமாகச் சென்ற வீரபாண்டியாரை, சிறைவாசம் கொஞ்சம் மோசமாகவே உடலளவில் பாதித்து விட்டது. இதனால், ஜாமீனில் வெளியே வந்தபோது தளர்ந்த நிலையில்தான் சேலம் வந்து சேர்ந்தார். வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
சிகிச்சை முழுமையாக முடியும் முன்னரே, தி.மு.க.வின் முப்பெரும் விழா வந்துவிட, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வந்திறங்கி விட்டார். விழாவிலும் ஆஜரானார். ஆனால், கவனிக்க வேண்டியவர்கள் கண்டுகொள்ள இல்லை என்பது அவரது வருத்தமாம்.
தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதிகூட, அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க.வினர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் பற்றிப் பேசியபோது, இவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. “குற்றம் ஏதும் செய்யாமல் தம்பி பொன்முடியை சிறையில் அடைத்தது இந்த அரசு” என்று தொடங்கி, விலாவாரியாக பேசிக்கொண்டே போனார்.
கருணாநிதி இப்படிப் பேசியபோது, பொன்முடிக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டியார், கூட்டத்தின் முன்வரிசையில்தான் உட்கார்ந்திருந்தார். அவர் அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்த பின்னரும்கூட கலைஞர், வீரபாண்டியார் பற்றி வாயே திறக்கவில்லை.
கூட்டம் முடிந்த பின்னர் விறுவிறுவென்று வெளியேறிவிட்ட வீரபாண்டியார், இப்போது தனது ஆதரவாளர்களை பாட்ஜ் பாட்ஜாக அழைத்து, புலம்பிக் கொண்டிருக்கிறார். “கட்சிக்கும் தலைவருக்கும் நாங்கள் செய்ததைவிட, பொன்முடி அப்படி என்னதான் பெரிதாகச் செய்துவிட்டார்?” என்று குரலை உயர்த்தி ஆவேசம் கொள்கிறார்.
இதை எமக்குக் கூறிய தி.மு.க. பிரமுகர் ஒருவர், “தி.மு.க. பீரியட்டில் வீரபாண்டியார் சேலத்தில் என்னவெல்லாம் அட்டகாசம் செய்தார், யாருடைய நிலத்தையெல்லாம் பிடுங்கினார் என்பதெல்லாம், ஊர் அறிய நடந்த விஷயம். கலைஞர் பேசும்போது, “குற்றம் ஏதும் செய்யாமல் வீரபாண்டியாரை சிறையில் அடைத்தது இந்த அரசு” என்று பேசினால், தி.மு.க. தொண்டனே வாயை மூடிக்கொண்டு சிரிப்பானே! அதைப் பற்றி யோசிக்காமல் வார்த்தைகளை கொட்டுகிறார் வீரபாண்டியார்” என்றார்.
அப்படியானால், பொன்முடி மாத்திரம் விழுப்புரத்தில், ‘ரகசியமாக’ நில அபகரிப்பு செய்தாரா?
நன்றி விறுவிறுப்பு
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum