உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

ப.சிதம்பரத்தை மாட்டிவிட ஆபரேஷன் பிளான் ரெடி!

View previous topic View next topic Go down

ப.சிதம்பரத்தை மாட்டிவிட ஆபரேஷன் பிளான் ரெடி!

Post by nandavanam on Thu Dec 01, 2011 4:05 am


“நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பேசவிடாமல் செய்வோம்” என்று பாரதீய ஜனதா கட்சி கடும் போக்குடன் நிற்பது பழைய கதை. இதில் புதிய கதை என்னவென்றால், பா.ஜ.க.-காரர்கள் இதை எதற்காகச் செய்கிறார்கள் என்ற பின்னணிதான்! இதன் பின்னணியில் விரிவான ஒரு ஆபரேஷன் பிளான் இருக்கவே இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்தக் கட்சியும் ஒரு அளவுக்குமேல் ஆவேசம் காட்டமுடியாது என்பது நிஜம். அதில் பா.ஜ.க.-வும் விதிவிலக்கு அல்ல. ஓவராகப் போனால், தமது சொந்த கூரையே தலையில் இடிக்கும்! அதனால்தான் பா.ஜ.க.-வும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவ்வப்போது ஆவேசம் காட்டியபின் சிறிதுகாலம் அடக்கி வாசிப்பது வழக்கம்.

ஆனால், இப்போது ஆவேசம் காட்டியே தீரவேண்டிய அளவில் கூரை தலைக்கு மிக அருகே வந்துவிட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப் பட்டுள்ளன. இவர்கள் அவர்களை காட்சிக்குள் இழுத்துவிடப் பார்த்தால், அவர்கள், நீங்களும் வாங்கன்னு இவர்களையும் இழுத்து விட்டிருக்கிறார்கள்.
இப்போது பா.ஜ.க.-வுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, “ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.-வும் பா.ஜ.க.-வும் பங்காளிகள்” என்ற திசையில் விவகாரம் திருப்பி விடப்படுகின்றதோ என்பதுதான் அந்த சந்தேகம். இது சாத்தியமா? அப்படியொரு திசையில் விவகாரத்தைத் திருப்ப முடியுமா?

ஆம். மிகவும் சிம்பிளாகச் செய்யலாம். எப்படியென்றால், இந்த விவகாரம் கிளறப்படத் தொடங்கும் காலம் முதல், சிக்கலில் எல்லாம் மாட்டிக்கொண்ட காலம்வரை காங்கிரஸ், பா.ஜ.க. என்று இரு அரசுகளும் இருந்திருக்கின்றன. ஆனால், ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். பா.ஜ.க. ஆட்சியில் அவர்கள் கட்சிக்காரர் ஒருவர்தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்திருக்கிறார்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அந்தத் துறையில் காங்கிரஸ்காரர் யாரும் அமைச்சராக இருக்கவில்லை. கூட்டணிக் கட்சியான தி.மு.க.-வுக்கு அந்த அமைச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது!

இந்த விவகாரத்தில், குறிப்பிட்ட துறையின் அமைச்சர் மாத்திரமே சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வார். ஆட்சித் தலைமைகள் நேரடியாக மாட்டிக்கொள்ள சான்ஸ் கிடையாது. அமைச்சர்கள் பட்டியல் என்றால், பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன், ஆ.ராசா என்றுதான் வருகின்றது. இதை வைத்துக்கொண்டு காங்கிரஸ் விளையாடப் போகின்றது என்பதே பா.ஜ.க.-வின் பயம்.

பா.ஜ.க.-வுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சி மீடியாக்களில் அழுத்தமான செல்வாக்கு வைத்திருக்கிறது. மீடியா முலம் இமேஜ் பில்டப் செய்யும் வித்தையில் காங்கிரஸ்காரர்கள் சூரர்கள். எல்லா மொழிகளிலும், எல்லா மாநிலங்களிலும் அதை அவர்களால் செய்ய முடியும். பா.ஜ.க.-வின் மீடியா செல்வாக்கு டில்லி மற்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான்.

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் ஸ்லோ-பாய்ஸன்போல, பா.ஜ.க.-வை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குள் தி.மு.க.-வின் சம அந்தஸ்துக்கு கொண்டுவந்துவிட அவர்களால் முடியும். அதைத் தடுக்காவிட்டால், அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பது கனவுதான்.

இதனால்தான் சிதம்பரத்தை இந்த விஷயத்தில் இழுத்துவிட நினைக்கிறது பா.ஜ.க.

ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை இழுத்துவிடுவதைவிட, ஒத்தை ஆளாக ப.சிதம்பரத்தை இழுத்துவிடுவது சுலபம் என்பதே பா.ஜ.க.-வின் வியூகம். ஏற்கனவே ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோரை ராஜினாமா செய்ய வைக்க அழுத்தம் கொடுத்த அனுபவம்வேறு பா.ஜ.க.-வுக்கு உள்ளது. அதை ஸ்டெப்பில் சிதம்பரம் விவகாரத்தை கையாளப் போகின்றது பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சிக்கு இரு சாய்ஸ்கள் உள்ளன. ஒன்று, என்ன ஆனாலும் பரவாயில்லை என்று சிதம்பரத்தைக் காப்பாற்றுவது. இரண்டாவது சிதம்பரத்தை பலிக்கடா ஆக்கிவிட்டு, கட்சியைக் காப்பாற்றிக் கொள்வது. இதில் 1-வது சாய்ஸில்தான் இப்போது நிற்கிறது காங்கிரஸ்.

பா.ஜ.க.-வின் ஆவேசம் எந்தளவுக்குப் போகும் என்பதைப் பொறுத்துதான் 2-வது சாய்ஸ் தொடர்பாக யோசிப்பார்கள்.


நன்றி விறுவிறுப்பு
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum