உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா?

Go down

போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா? Empty போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா?

Post by nandavanam Sat Oct 29, 2011 3:45 am

போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா? P26

கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து இரண்டாவது கட்டப் பட்டினிப் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், உள்ளாட்சித் தேர்தலுக்காக கடந்த 17-ம் தேதி மட்டும் இடைவெளி விட்டு, போராட்டத்தின் மூன்றாவது கட்டத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், வதந்தி ஒன்று பரவியது.

'போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தும் சுப.உதயகுமாரன் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்பு​ரோஸ் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்குகிறார்கள். வெளிநாட்டுத் தூண்டுதல் காரணமாகத்தான் இந்தப் போராட்டத்தையே நடத்துகிறார்கள்’ என்று செய்திகள் பரபரத்தன!

உதயகுமாரனிடமே இதுபற்றிக் கேட்டோம். ''இப்படி வதந்திகளைப் பரப்புகிறவர்கள் மீது வழக்குத் தொடரப்போகிறோம். நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அணுமின் நிலைய நிர்வாகத்தினர்தான் எங்களை மிரட்டுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு என் வீட்டில் போலீஸார் ரெய்டு வர இருப்பதாக தகவல்கள் வர, சில பத்திரிகையாளர்களும் வந்தனர். ஆனால், கடைசி வரை ரெய்டு நடக்கவில்லை. ஏன் இப்படி வதந்தி பரப்புகின்றனர்? எங்கள் போராட்டங்களுக்கான நிதியைத் திரட்ட... இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் சுற்றி இருக்கும் சில கிராமங்களில் 'ஊர் கமிட்டி’ ஒன்றை நிறுவி, ஒவ்வொரு வீட்டிலும் நிதி திரட்டுகிறார்கள். இதற்கான கணக்குகளை

போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா? P26a

'நிதிக் குழு’ பதிவு செய்கிறது. ஆகவே, 'பணம் வாங்கிவிட்டார்கள்’ என்று சொல்வது, இந்த மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஆகும். முதலில், அணுமின் நிலையத்தார் இத்தனை வருடமாகச் செலவழித்த தொகை பற்றிய வரவு - செலவு கணக்குகளை வெளியிடட்டும். நாங்களும் எங்கள் கணக்குகளை வெளியிடுகிறோம்.

இது தவிர, தனிப்பட்ட முறையிலும் மிரட்டுகிறார்கள். தூத்துக்குடி அரசு அலுவலகம் ஒன்றில் பணி செய்யும் எனது சகோதரியை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான நரேந்திர நாயர், 'உன் அண்ணன் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறார். அவரை சிறையில் தள்ள வேண்டி இருக்கும்’ என்றரீதியில் மிரட்டி இருக்கிறார்...'' என்கிறார் ஆவேசத்துடன்.

இதுகுறித்து அருட்தந்தை செல்வராஜ், ''முன்பு இந்தப் போராட்டத்தை நாடார்களுக்கும் பரதவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சாதிச் சாயம் பூச முயன்றார்கள். இப்போது மதச் சாயம் பூச நினைக்கிறார்கள். சில விஷமிகள், 'ரஷ்யா ஒரு நாத்திக நாடு. அதனால், இங்குள்ள பாதிரியார்கள் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்க்கிறார்கள்’ என்கிறார்கள். இதை தா.பாண்டியன் போன்றோரும் ஆதரித்ததுதான் ஆச்சர்யம். 'மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிப்பவர்கள்’ இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடந்த 14-ம் தேதி அகில இந்திய பேராயர் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் க்ரேசியஸை தொலைபேசியில் அழைத்து, 'இப்படியான போராட்டங்களுக்கு பாதிரியார்கள் முன்வரக் கூடாது என்று சொல்லுங்கள்’ என்று பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார். முதல் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, 'ஏ... நாடார்களே! பிரச்னை பரதவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்..’ என்று அறைகூவல் விடுத்த 'அய்யா வழி’ பாலபிரஜாபதி, என்ன காரணத்தினாலோ திடீரென்று, 'இந்தப் போராட்டத்தை யாரோ சிலர் தூண்டிவிடுகிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.

இன்னும் சிலர், 'இத்தனை வருடங்களாக இல்லாத போராட்டம் இப்போது ஏன்?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து 1989-ல் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதை எல்லாம் தமிழக மக்கள் மறந்துவிட்டார்களா?'' என்று கேள்வி எழுப்புகிறார் செல்வராஜ்.

சுப.உதயகுமாரனின் தங்கையை மிரட்டி​யதாகக் கூறப்படுகிறதே என்று தூத்துக்குடி எஸ்.பி நரேந்திர நாயரிடம் கேட்டபோது, 'அவரது தங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நான் இதுவரை அவரை பார்த்ததே இல்லை, மிரட்டவும் இல்லை'' என்றார்.

போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருப்​பதாக சொல்லப்படும் பால பிரஜாபதியிடம் பேசினோம். ''போராட்​டத்தில் இருந்து நான் ஒதுங்கி இருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் ஒளியவில்லை. தொடக்கத்தில், மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்காக என்னை பேச்சாளராகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நாளடைவில் போராட்டம் குறித்த தகவல்கள் எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. திடீர் திடீரென, கலந்து ஆலோசிக்காமல் போராட்டத்தில் இறங்கினர். முதல்வர் மற்றும் பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவின் பட்டியலில் எனது பெயரும் இருந்தது. ஆனால் முதல்வரை சந்தித்துவிட்டு வந்த பிறகு என்னை ஒதுக்கிவிட்டார்கள். கடற்கரை மக்களை முன்நிறுத்துவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். முறையாக ஆலோசித்து களத்தில் இறங்காமல் உணர்ச்சி வேகத்தில் திடீர் மறியல் போராட்டத்தில் இறங்கினால், அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு ஆபத்து நேர அதிக வாய்ப்பு உண்டு. இதை அவர்கள் உணராத காரணத்தால் நான் ஒதுங்கிக் கொண்டேன்'' என்றார்.

மக்களின் வாழ்வோடு அரசுகள் விளையாடுகின்றன. இது எங்கே போய் முடியுமோ?

நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை எல்லாம் மூடக் கோரி, பிரஷாந்த் பூஷண் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்று கடந்த 14&ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மரபணு மாற்று பயிர்த் திட்டத்தை எதிர்த்து வரும் பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால் உட்பட பலரும் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.


நன்றி விகடன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum