உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.

Go down

சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.  Empty சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.

Post by nandavanam on Tue Oct 11, 2011 4:22 am


சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.  Kkd

எழுதியவர் ராஜ்ப்ரியன்கலைஞர் மாறன்களை நம்பினார் கெட்டுப்போனார். மாறன்கள் காங்கிரஸ்காரர்களை
நம்பினார்கள் கெட்டுப்போனார்கள். கலாநிதி, தயாநிதி இருவரும் நம்பிக்கை
துரோகிகள். காங்கிரஸ்சுடன் கூட்டு சேர்ந்து திமுக என்ற ஆலமரத்தை அழிக்க
திட்டமிட்டவர்கள். திமுக என்ற ஆலமரத்தின் பாதுகாப்பில் தான் தாங்கள்
உள்ளோம் என்பதை மறந்தே அதன் வேர்களுக்கு வெண்ணீர் ஊற்றினார்கள். யார்
வெண்ணீர் ஊற்றினார்களோ இன்று அவர்கள் மீதே வெண்ணீர் துளியாக விழுந்து அதை
அனுபவிக்கிறார்கள்.


2ஜி விவகாரத்தை வைத்து திமுகவை அழிக்க காங்கிரஸ், பெரும் முதலாளிகள்,
திராவிடத்தின் எதிரிகள் கூட்டு சேர்ந்தார்கள். அதில் திமுகவின் எம்.பியாக
கலைஞரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மாறன் சகோதரர்கள் அந்த கூட்டணியில்
தாங்களே போய் இணைந்தார்கள். திமுக என்ற ஆலமரத்திற்க்கு வெண்ணீர் ஊற்ற
முயன்றபோது வாலி மூலம் தண்ணீர் மெண்டு தரும் முக்கிய பணியை செய்ததே இந்த
நம்பிக்கை துரோகிகள் தான்.


சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ்சை கழட்டி விட்டபோது, கலைஞரின் முடிவை
மாற்றியவர்கள் இருவர். ஒருவர் தயாநிதி மற்றொருவர் அழகிரி. திமுகவை மற்றொரு
முறை காங்கிரஸ்சிடம் அடகு வைத்தார்கள் இவர்கள். அதற்க்கு காரணம் இருவரின்
சுயநலம். அழகிரிக்கு மத்திய அமைச்சர் என்ற பதவி ஆசை, தயாநிதிக்கு அப்போது
2ஜியில் அடிப்பட்ட தனது விவகாரத்தை அடக்கி விடலாம், காங்கிரஸ்க்கு தனது
விசுவாசத்தை காட்டலாம், தனது தொழிலை விரிப்படுத்திக்கொள்ளலாம், தன் மீதான
ஊழல் விவகாரங்களை ஊத்தி மூடிவிடலாம் என எண்ணி ஆதரவு வாபஸ்சை வாபஸ் வாங்க
வைத்தார்கள்.


தேர்தல் தோல்விக்கு பின் ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் திருப்பம் ஏற்பட
ஆரம்பித்தது. 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ், தயாநிதி, அம்பானி பிரதர்ஸ்சின்
பங்கை திமுக எம்.பி ராசா, அவிழ்க்க, அவிழ்க்க விவாகரம் சூடுபிடிக்க
ஆரம்பித்தது. பாட்னர் தயாநிதிமாறனை காப்பாற்ற காங்கிரஸ், பெருமுதலாளிகள்
லாபி எவ்வளவோ முயன்றது. இருந்தும் முதலில் மாறனின் அமைச்சர் பதவி பறிபோனது.
பாட்டியாலயா நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரியாமல் எந்த விவகாரமும் நடக்கவில்லை என தேரை
இழுத்து தெருவில் விட்டார் ராசா. அரண்டு போனது காங்கிரஸ் தலைமையகம்.
அவர்களின் வாயை அடைக்க ராசா, கனிமொழி மீது மேலும் மேலும் வழக்குகளை போட்டது
சி.பி.ஐ.


இப்போது, தான் மட்டும் தப்பினால் போதும்மென பாட்னர் தயாநிதியை நட்டாற்றில்
விட தயாராகிவிட்டது காங்கிரஸ். ஆதன் வெளிப்பாடு முதல்கட்டமாக விசாரணை,
ரெய்டுக்கு ஒ.கே சொன்னது காங்கிரஸ் அரசு. அதன்படி தயாநிதி, கலாநிதியின்
வீடுகள், அலுவலகங்கள் உள்ள சென்னை, டெல்லி, ஐதராபாத் நகரங்களில் இன்று
10.10.11ந்தேதி காலை ஒரே சமயத்தில் ரெய்டு செய்தது சி.பி.ஐ.

சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.  Up-trend
ரெய்டில் என்ன கிடைத்தாலும் உண்மையை வெளியே சொல்லாது சி.பி.ஐ. ஆனால் காலை 7
மணியில் இருந்து நடக்கும் ரெய்டு பற்றிய தகவல்கள் வெளியே பரவி பிரேக்கிங்
நியூஸ்சாக வெளியே பரவியபோது தமிழ் சேனல்கள் தவிர்த்து தேசிய சேனல்கள்
முதலில் வாயை மூடிக்கொண்டன. பின் கொஞ்சம் போட்டது. அதற்க்கே சன்
நிறுவனத்தின் ஷேர் மதிப்பு 20 ரூபாய் மார்க்கெட் தொடங்கிய 20 நிமிடங்களில்
குறைந்தது. அடிவாங்கிக்கொண்டே போன ஷேர் மதிப்பை தடுத்து நிறுத்த ஷேர்
மார்க்கெட்டின் தகிடுதத்தத்தின் படி வேலைகள் நடத்தினர் மாறனின் பிள்ளைகள்.
இதனால் வேகவேகமாக வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள் இதனால் சன்
நிறுவனத்தின் ஷேர் மதிப்பு மார்க்கெட் மூடியபோது, 2 ரூபாய்
உயர்ந்துயிருந்தது.


இராசா, கனிமொழியை உள்ளே அனுப்ப காரணம்மான தயாநிதி உள்ளே சென்று தீபாவளி
கொண்டாட வேண்டும்…… அவர் மட்டுமல்ல தப்பிக்க நினைக்கும் காங்கிரஸ்சின்
தலைகளும் சிக்கவேண்டும் அப்போது தான் நீதி கொஞ்சமாவுது கிடைக்கும். ஆனால்
அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.


எழுதியவர் ராஜ்ப்ரியன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum