உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அப்துல் கலாமின் கனவு நிறைவேறுமா?

Go down

அப்துல் கலாமின் கனவு நிறைவேறுமா?  Empty அப்துல் கலாமின் கனவு நிறைவேறுமா?

Post by nandavanam on Mon Oct 10, 2011 4:04 am

அப்துல் கலாமின் கனவு நிறைவேறுமா?  13sd1
எழுதியவர் Rafi

மகத்தான(மாண)வர்


வெகுளித்தனமா வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன்.
அவ்வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் அம் மாணவரது கணக்கு வாத்தியார்
ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, அவனது கழுத்தைப் பிடித்து ,
எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார் அவர்.
இச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து, இதே ஆசிரியர், கணக்கில்
நூற்றுக்கு நூறு வாங்கியதற்காக அந்த மாணவனைக் காலைப் பிரார்த்தனைக்
கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார்.


'என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்' என்று வேறு
அறிவித்தார். ஆம்! அவரது வாக்கின் படி, அந்தப் பள்ளிக்கும் அந்த ஊருக்கும்,
தமிழகத்திற்கும் ஏன் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்த அந்த
'மகத்தான' மாணவன் வேறு யாரும் அல்ல அவர்தாண் நமது முன்னாள் குடியரசுத்
தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.

பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரதரத்னா எனப் பல்வேறு பட்டங்களையும்
விருதுகளையும் பெற்றவர்.விண்வெளி, தேசப்பாதுகாப்பு, அணு ஆற்றல் என மூன்று
துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர், அவர் தமிழர் என்பதில் நம்
எல்லோருக்கும் பெருமை தரும் விஷயம்;.

வீடு வீடாய்.........


தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு
படகோட்டியின் மகனாய் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் பிறந்தார். முழுப்
பெயர் அவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம்.

பள்ளி விடுமுறை நாள்களில் , தனது ஒன்று விட்ட சகோதருக்கு உதவியாக
சைக்கிளில் வீடு, வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக் கூடச்
செய்துள்ளார். கலாமுக்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. கல்லூரியில்
சேர்வதற்கான கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை
அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி.

1958-ஆம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.
எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ஆம் ஆண்டு விண்ணில்; ஏவப்பட்ட ரோகிணி
செயற்கைக் கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல். அக்னி,
பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர்.

அறிவியல் ஹீரோ

அப்துல் கலாமின் கனவு நிறைவேறுமா?  Museam
கலாமின் வீட்டில் உள்ள கண்காட்சிக் கூடம்
சமீபத்தில் திறக்கப்பட்டது


1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி மதியம் 3.45மணி
பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை அமெரிக்காவின் செயற்க்கை
கோள்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு வெற்றிகரமாக நடத்தியது. உலக
நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இச் சாதனைக்குக்
காரணகர்த்தா கலாம்தாண். இச்சாதனைக்குப் பின், பாரதமெங்கும் ஒரு மூத்த
விண்வெளி விஞ்ஞானியின் பெயர் பத்திரிகைகள் தோறும் தலையங்கம், கார்டூன்,
கவர் ஸ்டோரி என அமர்களப்பட்டது.

சினிமா நடிகர்களையும் அரசியல்வாதிகளையுமே போட்டு வியாபாரம்
செய்துகொண்டிருந்த பத்திரிகைகள், அப்துல்கலாமின் புகைப்படத்தையும் போட்டு
ஜன்ம சாபல்யம் தேடிக்கொண்டன.

ஏவுகனை அவசியம்

' நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம்
அன்னிய நாடுகளின் மிரட்டலுக்குப் பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்'
என்று கூறும் கலாம். பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும்
உதவியிருக்கிறார் கலாம் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த
கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பேஸ்
மேக்கர்' போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமையின் சிகரம்

ஒரு முறை சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டியின் பொன்விழா ஆண்டு
நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே,
உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையிலிருந்து எம்.ஐ.டி வளாகத்தினுள் செல்ல,
ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த சமயம், ஏதோ ஒரு
ரயிலுக்காக கேட் போடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக
நின்றுவிட்டது.


ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே!
குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டும்' என்ற எண்ணத்தில், காரை
விட்டு இறங்கினார் கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி
நடக்கலானார்.

உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில்
நடந்துச் சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு, ' டாக்டர் கலாம்
போறார்...! என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில்
இதுதாண் சிறப்புச் செய்தி.

இசைப்பதும் ரசிப்பதும்


உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல்
வாசிப்பதிலும், புத்தகங்களை மட்டுமல்ல் வீணையை வாசிப்பதிலும் இவர் தேர்ந்த
கலைஞானி.


தமது சொந்த ஊர் ராமேஸ்வரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத்
தவிர்த்து விட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம்
பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப்
பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும்
பழக்கமும் இன்னும் இவரிடம் உண்டு. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர்
எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேரியது.

வாருங்கள் இளையோரே

' நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை
அடையக் கடுமையான உழைக்க வேண்டும். அதன் மூலமே சாதனைகள் படைக்க முடியும்
நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது
உழைக்க வேண்டும்' என்று இளைய தலைமுறைக்குக் கோரிக்கை விடுகின்றார் கலாம்.

அப்துல் கலாமின் கனவு

மாணவர்களையெல்லாம் 'கனவுகாணுங்கள்' என இளையத் தலைமுறைக்குக் கோரிக்கை
விடுத்த கனவு நாயகன் அப்துல் கலாம் படித்த துவக்கப் பள்ளி இராமேஸ்வரம்
வர்த்தகன் தெருவில் உள்ளது. எழுபத்தி ஐந்து வருடங்களைக் கடந்து விட்ட
இப்பள்ளி தற்போது தான் புதுப்பிக்கப் பட்டது.

'பணி ஓய்வு பெற்றதும் வசதிக் குறைவான ஆனால் திறைமையானக் குழந்தைகளுக்குப்
பள்ளி ஒன்று ஆரம்பிக்க வேண்டும்' என்று தனது 'அக்னிச்சிறகுகள்' என்ற தனது
சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அப்துல் கலாம். அவரின் ஆவலுக்கேற்ப அவரது
பெயர்களில் பள்ளிகளை அரசு திறந்து அவரது சாதனைகளுக்கு மகுடம் சூட்ட
வேண்டும். அதிலிருந்து இன்னும் ஆயிரக்கணக்கான அப்துல் கலாம்கள் வருவார்கள்
என்பது நிச்சயம் .


அக்டோபர்-15 கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்டக் கட்டுரை

எழுதியவர் Rafi

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum