உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.

Go down

இன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.  Empty இன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.

Post by nandavanam on Thu Oct 06, 2011 3:25 am

இன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.  Vijayakanth_Birthday_Celebration_stills_01
எழுதியவர் ரஹீம் கஸாலி

சங்கரன் கோவில் பிரச்சாரத்திற்கு நேற்று மதியம் வரவேண்டிய விஜயகாந்த்,
இரவு தான் வந்தாராம். இதனால், அனுமதி மறுத்த போலீசார் விஜயகாந்த்
பேசவிருந்த மைக்கை பிடிங்கிட்டு போய்ட்டாங்களாம். ஆனால், சளைக்காத கேப்டன்
இன்னொரு மைக்க வாங்கி

சங்கரன் கோவில் போலீஸ் என்ன புதுசா, வழியில
நான் எத்தனை போலீசை பார்த்தவன் தெரியுமா? நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர்.
எனக்கு கொடுக்க வேண்டிய முழு பாதுகாப்பை நீங்க தரணும்.

இது உங்களுக்கு தெரியாதா? இதென்ன புதுசா ஆட்டம் போடுறீங்க. குறிப்பிட்ட
நேரம் தவறி வந்தாலும், தேர்தல் நேரம் அனுமதியோ, முன் அனுமதியோ பெறணும்
என்கிற அவசியம் இல்ல.

நான் விபரம் தெரியாதவன்னு நினைச்சீங்களா? மக்களைக்காக்க வேண்டியதுதான்
போலீசின் வேலை. அதை விட்டுட்டு இந்த மாதிரி செய்யச்சொல்லியாரேனும்
சொன்னாங்களா?

முன்னால் நாங்க ஒரு எம்.எல்.ஏவா இருந்தோம். இப்ப 27 எம்.எல்.ஏவாக
இருக்குறோம். நாளைக்கு நாங்கதான். இதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.
உங்ககிட்ட நான் பேசனும்னு அவசியமில்ல. தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்கிட்ட நான் பேசிக்குறேன். உங்க நண்பன்னு காவல்நிலையத்தில் போர்டு போட்டிருக்கீங்களே. முதல்ல அத தூக்கி தூர வீசுங்க
”ன்னு பேசினாராம்.

சரி இப்ப அதுக்கென்ன எங்கிறீங்களா? விஷயத்திற்கு வாரேன். உள்ளாட்சி
மன்றத்தேர்தலுக்கான அதிகாரி பிரவீன்குமார் இல்லை. சோ.அய்யர். இதுகூட
தெரியாத கேப்டன் இப்ப எதிர்கட்சித்தலைவரு....என்ன கொடுமை சார் இது?

அதுசரி, ஏற்கனவே அவரு கட்சியோட தர்மபுரி வேட்பாளர் பாஸ்கர் பேரையே
பாண்டியன்னு சொன்னாரு நம்மாளு, என்பேரு பாண்டியன் இல்லை பாஸ்கருன்னு
திருத்திசொன்ன வேட்பாளரை நடு மண்டையில நங்கு நங்குன்னு குட்டி மஹாராஜன்
ஆக்கினாரு. இப்போ அய்யரு பேரை மாத்தி பிரவீன் குமாருன்னு சொல்லிருக்காரு..
நல்லவேளையா அய்யர் அங்கில்லை. இருந்திருந்தால் என் பேரு பிரவீன்குமாரு
இல்லை அய்யருன்னு சொல்லி கேப்டன் கிட்ட அடி வாங்கி மஹாராஜன் ஆகிருப்பாரு.

இவ்வளவு விபரம் தெரிஞ்ச கேப்டன் எதிர்கட்சி தலைவரா மட்டுமல்ல....பிரதமராகவே தகுதியானவருதான்.
விளங்கிரும் போங்க....

சரி, யாராவது கேப்டன்கிட்ட எடுத்து சொல்லி மஹாராஜன் ஆக ரெடியா இருக்கீங்களா?
எதுக்கும் நீ எச்சரிக்கையா இரு...உன்னை மஹாராஜன் ஆக்கினாலும் ஆகிடுவாரு கேப்டன்னு அங்கே யாருப்பா குரல் கொடுக்கறது?

எழுதியவர் ரஹீம் கஸாலி
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum