உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விஜயகாந்துக்கு கோவையில் கடைசியாக வந்த பங்காளி சண்டை!

Go down

விஜயகாந்துக்கு கோவையில் கடைசியாக வந்த பங்காளி சண்டை! Empty விஜயகாந்துக்கு கோவையில் கடைசியாக வந்த பங்காளி சண்டை!

Post by nandavanam Tue Oct 04, 2011 3:01 am

விஜயகாந்துக்கு கோவையில் கடைசியாக வந்த பங்காளி சண்டை! TblArasiyalnews_9409296513
நன்றி விறுவிறுப்பு


உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி என்று வரும்போது, இருப்பதற்குள்
பொலிவான கூட்டணி தே.மு.தி.க. கூட்டணிதான். அதற்குள்ளும் இழுபறிகள் எட்டிப்
பார்க்கத் தொடங்கிவிட்டன. இழுபறிக்குக் காரணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இவர்கள் கூட்டணிக்குள் இருக்கிறார்களா, இல்லையா என்பதே குழப்பமாக உள்ளது.
இவர்களது கூட்டணிக் குழப்பங்கள் தலைவிரித்து ஆடும் இடம் கோவைதான்.
காரணம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கோவையில் செல்வாக்கு உண்டு. அதைப்
புரிந்துகொண்டு, கோவை மேயர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை மாக்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்திருந்தார் விஜயகாந்த். அத்துடன், 19
வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், மார்க்சிஸ்ட்கள் போட்டியிடுவது என்று
கூட்டணி தொகுதி உடன்பாட்டில் முடிவாகியது.

இது நடந்தபோது, கூட்டணிக்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. அவர்கள்
அப்போதும், அ.தி.மு.க. உடன் தொங்குநிலை பேச்சுக்களை நடாத்திக்
கொண்டிருந்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி வருமா வராதா என்று தெரியாத நிலையில், தே.மு.தி.க.வும்
மாக்சிஸ்ட் கட்சியும் கோவையில் உள்ள தொகுதிகளைத் தமக்குள் பங்கிட்டு, ஒரு
செட்டில்மென்ட்டுக்கு வந்து விட்டிருந்தன. கோவையில், யாவரும் நலம்!

இந்தக் கட்டத்தில்தான் இறுதி ஓட்டக்காரராக இழுத்துக்கொண்டு முகாமுக்குள்
வந்து இறங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. வந்த வேகத்தில் அவர்கள் கண்
வைத்ததும் கோவையில் உள்ள தொகுதிகளில்தான்.

இப்போது, யாரிடமுள்ள தொகுதிகளை இவர்களுக்கு விட்டுக் கொடுப்பது என்ற குழப்பம் மற்றைய இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டது.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளில், தமிழகத்தைப் பொறுத்தவரை இருப்பதற்குள்
சுறுசுறுப்பான கட்சி மாக்சிஸ்ட் கட்சிதான். இவர்களுக்கு அமைப்பு ரீதியான
பலமும், தொழிற்சங்கப் பலமும் அதிகம். தொண்டர்களும் இவர்களிடம்தான் அதிகம்
உண்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஈஸிசேரைவிட லேசாக உயரமான கட்சி.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவது என்று முடிவெடுத்த உடனேயே,
தே.மு.தி.க. உடன் பேசி, தனது வழியைப் பார்த்துக் கொண்டது மாக்சிஸ்ட் கட்சி.
இந்திய கம்யூனிஸ்ட்கள் தாமதமாக முடிவெடுத்து வந்து சேரும்வரை, வேட்புமனு
தாக்கல் செய்யும் டெட்லைன் காத்திருக்குமா?

இதனால் இந்த செந்தோழர்கள் என்ன செய்தார்கள் என்றால், வாய்ப்புள்ள
இடங்களில் எல்லாம், தாங்களே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, கூட்டணி பேச
வந்திருக்கிறார்கள்.

எங்கெல்லாம் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவது என்பது பற்றித்தான், இப்போது இழுபறி நடக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட்கள் சுயமாக வேட்புமனு தாக்கல் செய்த வார்ட்களின்
எண்ணிக்கை 29. (மாக்சிஸ்ட்கள் போட்டியிடுவதே, 19 வார்ட்களில்தான்!) இந்த 29
வார்டுகளில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான வார்டுகளில்,
தே.மு.தி.க. உடன் நேரடியாக மோதல்; ஒரு சில வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி
உடன் மோதல் என்ற நிலை உள்ளது.

மோதலைத் தவிர்க்க, சில தொகுதிகளில், யாராவது வாபஸ் வாங்க வேண்டும்!

“கூட்டணி தலைமைக் கட்சியான தே.மு.தி.க. தான் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்கு ஏதாவது பார்த்துக் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள்
மாக்சிஸ்ட்கள்.

விஜயகாந்த் என்ன சொல்கிறார்? “அட, நீங்க இருவருமே பங்காளிகள். இருவருமே
கம்யூனிஸ்ட்டுகள். கைவசம் இருக்கும் 19 வார்டுகளையும் பங்கு போட்டுக்
கொள்ளுங்கள். இலவச இணைப்பாக ஓன்று ரெண்டு வார்டுகளை நாங்களும் தருகிறோம்”

இழுபறி தொடர்கிறது. புரட்சி பற்றிப் பேசினாலும், இதிலுள்ள எந்தத்
தரப்பும் ஆயுதம் தூக்கப் போவதில்லை என்பதால் அபாயமில்லை. (விஜயகாந்த்
தூக்குவது சினிமா பொம்மை துப்பாக்கி. கம்யூனிஸ்ட்களின் துப்பாக்கிகள்,
அவர்களது வரலாற்று நூல்களில்தான் உள்ளன)


நன்றி விறுவிறுப்பு


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum