உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்

2 posters

Go down

காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்  Empty காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்

Post by nandavanam Fri Sep 30, 2011 3:43 am

காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்  Tata+car


நன்றி:தட்ஸ் தமிழ்


காற்றை எரிபொருளாக(கம்ப்ரஷ்டு ஏர்) பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. ரூ.4லட்சம் விலையில் இந்த காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் கார்களுக்கான மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பேட்டரியில் இயங்கும் கார், ஒயினில் ஓடும் கார் என்று மாற்று எரிபொருள் குறித்த ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கம்ப்ரஷ்டு காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. பார்முலாஒன் கார் தயாரிப்பு எஞ்சினியர் ஒருவர் வடிவமைத்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கார் டாடா கார் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மினிகேட் என்ற பெயரில் வரும் இந்த கார் பைபர் கிளாஸ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இலகுவான எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருவதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்கான எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டர் மூலம் இந்த காரில் 300 கிமீ செல்ல முடியும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டரின் விலை ரூ.100 மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும்,மற்ற கார்களை போல கார்பன் புகையை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 6,000 கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாகவும், ரூ.4 லட்சம் விலையில் இந்த காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



நன்றி:தட்ஸ் தமிழ்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்  Empty Re: காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்

Post by pon.ravi Fri Sep 30, 2011 11:25 pm

super ca(i)r

pon.ravi

Posts : 1
Join date : 28/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum