உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆலம் விதையும் அழகிய மதிலும்

Go down

ஆலம் விதையும் அழகிய மதிலும் Empty ஆலம் விதையும் அழகிய மதிலும்

Post by nandavanam on Tue Jan 03, 2012 3:15 am

ஆலம் விதையும் அழகிய மதிலும் Divorce
இருபத்தைந்து வயதுக்குள் மண வாழ்க்கை கசந்து விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என அண்மையில் வரன்கள் பதிவுக்கான இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2008-ம் ஆண்டு 25 வயதுக்குள் விவாகரத்து பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 2 சதவிகிதமும், பெண்களின் எண்ணிக்கை 3 சதவிகிதமும் இருந்ததாகவும், 2011-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இரு மனங்களின் இணைப்பே திருமணம், திருவும் மணமும் சேர்வதே திருமணம் என்றெல்லாம் திருமணத்துக்கு விளக்கங்கள் கொடுத்தாலும் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால்தான் திருமணம் இனிக்கிறது.

தம்பதி "ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து' வாழ வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். அதை இன்றைய இளம் தலைமுறையினர் "ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்து" வாழ வேண்டும் எனத் தவறாகப் புரிந்துகொண்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. அதனால்தான் மண வாழ்க்கை சில வாரங்களிலோ, மாதங்களிலோ, ஆண்டுகளிலோ கசந்து, விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அவர்களிலும் வயதானவர்களைவிட, இளம் வயதினரே அதிகம் உள்ளனர் என்பது கவலை தரும் செய்தி.

2007-ம் ஆண்டில் 50 வயதுக்கு மேற்பட்ட வயதான தம்பதி 6 சதவிகிதம் பேர் விவாகரத்து பெற்றதாகவும், 2011-ம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

விவாகரத்து எதில் அதிகம், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலா, காதல் திருமணத்திலா என காலங்காலமாக பட்டிமன்றங்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. இரண்டு வகை திருமணத்திலும் கடைசிவரை இணைபிரியாமல் இருக்கும் தம்பதியும் உள்ளனர். ரயில் ஸ்நேகம்போல ஆடிய நாடகம் முடிந்ததென்று அவசரமாய் இறங்கிக் கொள்ளும் தம்பதியும் இருக்கின்றனர்.

மண வாழ்க்கை பாதியிலேயே கசந்துபோவதற்கு மது, வரதட்சிணை, புரிந்துகொள்ளாமை, சந்தேகம், ஈகோ, அடக்கியாள நினைத்தல், அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பால் ஏற்படும் ஏமாற்றம் எனப் பல காரணங்கள் உள்ளன.

பழங்காலங்களில் விவரம் புரிந்துகொள்ளும் முன்பே திருமணம் செய்துவைத்தல் நடைமுறையில் இருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர்களெல்லாம் அன்பினாலோ, வேறு வழியில்லாமலோ வாழ்ந்துமுடித்தவர்கள்.

காலப்போக்கில் அந்த முறை கைவிடப்பட்டு ஆணுக்கும், பெண்ணுக்கும் குறிப்பிட்ட வயதை திருமண வயதாக அரசு நிர்ணயித்தது. வயது வரும்வரை காத்திருந்து திருமணம் முடித்தோரும் உள்ளனர்.

இப்போது பழைய காலம் மீண்டும் திரும்பிவிட்டது. இக் கணினி யுகத்தில் திரைப்படங்களும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நெ(கொ)டுந்தொடர்களும் கலாசாரச் சீரழிவையும், எல்லை தாண்டும் போக்கையும் கற்றுத் தருகின்றன; ஊக்குவிக்கவும் செய்கின்றன.

அதனால் பள்ளிச் சீருடை அணியும் வயதிலேயே திருமண ஆசை துளிர்விடத் தொடங்கிவிடுகிறது. உழைத்து சொந்தக் காலில் நிற்கும் முன்பே இல்லத் தலைவனாகிவிட வேண்டும் என இளம்பருவ ஆணும், தாவணி அணியும் பருவம் வரும் முன்பே தலைவியாகிவிட வேண்டும் என இளம்பருவ பெண்ணும் நினைக்கின்றனர். இரு வீட்டு சம்மதத்துடனோ, இரு வீட்டையும் பகைத்துக் கொண்டோ நடக்கும் இத்தகைய இளம்பருவத்தினரின் திருமணம் சில வாரங்களில் கசக்கத் தொடங்கி, சில மாதங்களில் நீதிமன்றப் படிக்கட்டை மிதித்துவிடுகிறது.

இதேபோல, இப்போது கூட்டுக் குடித்தனங்கள் இல்லாத நிலையே உள்ளது. பெரும்பாலான பெண்கள் திருமணம் ஆனதுமே தனிக்குடித்தனம் செல்வதைக் குறிக்கோளாகவே கொண்டுள்ளனர். இதனால் இளம் தம்பதியிடையே ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து அவர்களும் அலசி ஆராய்வதில்லை. அறிவுரை கூற ஆளுமிருப்பதில்லை.

ஆலம் விதை கண்ணுக்குத் தெரியாது என்பார்கள். அத்தகைய ஆலம் விதை விழுந்து முளைத்துச் செடியாகி, பெரிய, அழகிய மதில்களில்கூட விரிசல் விழச் செய்வதைப்போல, அவர்கள் ஒன்றுமில்லாத பிரச்னைகளைக்கூட மெüனத்தாலோ, பேசிப்பேசியோ பூதாகரமாக்குகின்றனர். இல்லறத்தில் விரிசல் விழச் செய்து நிம்மதியைத் தேடி நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

கணவன்-மனைவி இருவருமே பணிக்குச் செல்லும் சில குடும்பங்களிலும் விவாகரத்து விவாதப் பொருளாகிவிடுகிறது. அதிலும் குறிப்பாக, இருவரின் பணி நேரங்களும் வேறுவேறாக அமையும்பட்சத்தில், பொருள் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் நிம்மதி என்ற இன்பம் இருப்பதில்லை. அதன் அடுத்தகட்டம், விவாகரத்துக் கோரி விண்ணப்பித்தலில் தொடங்கிவிடுகிறது.

ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தும், தீர விசாரித்தும் துணையைத் தேர்ந்தெடுத்தல், தன்னைப்போலவே துணையை எண்ணுதல், குறைகளைப் பெரிதுபடுத்தாமல் நயமாகச் சுட்டிக்காட்டுதல், நிறைகளை நினைத்துப் புகழ்தல், இருவரின் உறவினர்களையும் சமமாக மதித்தல், பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், ஏற்பட்டால் அவை உருவானவிதம் பற்றிப் பேசாமல் அதற்கான தீர்வைச் சிந்தித்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் விவாகரத்துகள் இல்லாமல் போகும் காலம் விரைவில் வரும்.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum