உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜனநாயகத்தின் எதிரிகள்

Go down

ஜனநாயகத்தின் எதிரிகள் Empty ஜனநாயகத்தின் எதிரிகள்

Post by nandavanam on Sun Dec 25, 2011 2:43 am

ஜனநாயகத்தின் எதிரிகள் Congress
நீண்ட காலமாக மெளனமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இப்போது லோக்பால் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்த நிலை திடீரென மாறி, கட்சி கட்டுக்கோப்பாக உருவெடுத்திருக்கிறது. கட்சியின் நிலைப்பாட்டை சோனியாவே முன்னின்று விளக்குகிறார். அரசுக்கும் லேசான நெருக்கடி தரப்படுகிறது. நல்ல அரசியல் கட்சிக்கு இப்படிப்பட்ட தலைமைதான் மிக முக்கியமான தேவை.

எதிர்மறைச் செயல்கள் நமது நாட்டில் மிக அதிகம். எப்போதுமே இவை இருந்து வந்திருக்கின்றன. ஆனால், இப்போது கொஞ்சம் எல்லை மீறிப்போய் நாட்டில் அரசற்ற குழப்பத்தை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு நலம் பெற வேண்டும் என்று கூறிக்கொண்டு, மக்களாட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவும் இருப்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.

அண்ணா ஹசாரே நல்லவர்தான். நல்லதையே அவர் நினைக்கக்கூடும். ஆனால், நாடாளுமன்றத்துக்கு உத்தரவிடக் கூடாது. நாடாளுமன்றம் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்றால், அது அரசியல் ஆதாயத்துக்காகத்தான். ஆனால், அவர்களேகூட ஹசாரேயின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் தலைவர்கள் இப்போது பெருகிவிட்டார்கள். அரசியல் சட்டம் என்ன கூறுகிறது என்பதைக்கூட மதிக்காமல், தங்கள் இஷ்டப்படி வேலைகள் நடக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்.

அண்ணா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் நல்ல மரியாதை இருக்கிறது. அவரை விமர்சிப்பவர்கள்கூட அவர் நல்ல மனிதர் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இந்த மரியாதை அவரது குழுவில் உள்ள மற்றவர்களுக்குக் கிடையாது. ஆனால், போராட்டங்களை வழி நடத்துபவர்கள் என்னவோ இவர்கள்தான்.

லோக்பால் விவகாரத்தில் தமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஹசாரே 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார். அதன் பிறகு 3 நாள் சிறை நிரப்பும் போராட்டம். இவை முடிந்ததும், சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கும் 5 மாநிலங்களில் அவரது குழுவினர் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸýக்கு எதிராகப் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

இவரது பிரசாரத்துக்கு எந்த அளவுக்கு வலிமை இருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால், இவர்களது பிரசாரத்தால் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பலனடையப் போவது மட்டும் உறுதி. இது அரசியலல்லாமல் வேறென்ன? வேண்டுமென்றால் வித்தியாசமான அரசியல் என்று சொல்வார்களே, அந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

உத்தரப் பிரதேசத்தில் எதிர்பாராத சுவாரசியமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சிக்கே அதிக ஆதரவு இருக்கிறது என்று கருதப்பட்டு வந்த நிலையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சமாஜவாதி கட்சி போட்டியில் முந்துவதாக இரு கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன. காங்கிரஸ் மூன்றாமிடத்திலும் பாஜக நான்காமிடத்திலும் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கணிப்பில் எனக்கு உடன்பாடில்லை. மாயாவதிக்கும் அவரது கட்சிக்கும் இன்னும் அதிக ஆதரவு இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை இப்போதைய கருத்துக் கணிப்புகளின்படி நடந்தால் யாருக்கும் பெரும்பான்மை இருக்கப் போவதில்லை. தொங்கு சட்டப் பேரவைதான் அமைய முடியும்.

சமாஜவாதிக்கு 120, காங்கிரஸ் - லோகதளம் கூட்டணிக்கு 85, பகுஜன் சமாஜுக்கு 110, பாஜகவுக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இப்படி தொங்கு சட்டப் பேரவை அமையும்பட்சத்தில் இரு வகையான அணி சேர்க்கைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சமாஜவாதியும், காங்கிரஸ் - லோகதள கூட்டணி ஒருபுறமும், 15 சுயேச்சைகளின் ஆதரவுடன் பகுஜன் சமாஜ், பாஜக ஆகிய கட்சிகள் மற்றொரு புறமும் நிற்கும்.

ஆட்சியமைப்பதற்கு கொள்கையோ, நேர்மையோ தேவையில்லை. எண்ணிக்கை மட்டும்தான் முக்கியம். அதனால் வேறு வகையான சேர்க்கைகள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. தேர்தல் மிக அருகில் நெருங்கிவரும்போது இன்னும் தெளிவான நிலை ஏற்படும்.

எனது கணிப்புப்படி, காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய கட்சிகளைக் காட்டிலும் பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களைப் பெறும். செல்வாக்கு மிகுந்த தலைவர்களைக் கொண்ட அமைதிக் கட்சியின் ஆதரவு பகுஜன் சமாஜ் கட்சிக்கு இல்லாதது ஒரு மாபெரும் குறையே. அதனால் சிறுபான்மையினரின் வாக்குகள் சமாஜவாதி கட்சிக்கும் காங்கிரஸýக்கும் செல்லும். ஆனால், இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற முடியாது.

மத்திய அரசு என்கிற ஒன்று இருப்பதற்கான அறிகுறியே நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்போதுதான் தெரிகிறது. பல அதிகார மையங்கள் இருந்ததால் பல பிரச்னைகளைக் கையாள முடியாமல் அரசு இதுவரை திணறி வந்தது. ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு கருத்தைக் கூறுவார். அதை அமைச்சரவையில் உள்ள மற்றொருவரே மறுப்பார். கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்குப் பிடித்தது மற்றொரு கட்சிக்குப் பிடிக்காது. அரசுக்கும் காங்கிரஸýக்கும் இடையே மாபெரும் இடைவெளி இருந்து வந்தது. சோனியா காந்தியின் வருகை எல்லா முரண்பாடுகளையும் களைந்திருக்கிறது.

இதுநாள்வரை காங்கிரஸýக்கும் அரசுக்கும் இருந்த நெருக்கடிகள் இப்போது பாஜகவுக்குச் சென்றுவிட்டன. காங்கிரûஸ வெல்வதற்கு அண்ணா ஹசாரேவை மட்டுமே நம்பியிருக்கும் பரிதாபகரமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் இது நடக்காது.

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. உத்தரகண்டில் பாஜகவும், பஞ்சாபில் அகாலி தளமும் ஆட்சி நடத்தி வருகின்றன. அங்கெல்லாம் ஊழல் நடக்கிறதென்றால் அதற்கு ஆளும் கட்சிகளைத்தான் குறை சொல்ல வேண்டும். மக்களின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கும். அப்படியில்லாமல், காங்கிரஸூக்கு எதிராக அண்ணா ஹசாரே பிரசாரம் செய்வதை மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கோரி நடக்கும் போராட்டங்களை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை மக்களாட்சிக்கு எதிராகத் திரும்புவதைக் காணும்போது உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. மத்தியக் கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை நாம் உதாசீனப்படுத்திவிட முடியுமா? துனீஷியா, எகிப்து, யேமன், லிபியா, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் எந்த மாதிரியான நிலைமையில் தள்ளப்பட்டிருக்கின்றன? இப்படியொரு பிரளயம் நமக்குத் தேவைதானா?

கடந்த 60 ஆண்டுகளாக நமது அரசியல் சட்டம் நமக்கு பாதுகாவலனாக இருந்து வருகிறது. இந்த நிர்வாக அமைப்பில் நமக்குப் பலவகையான உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நமது நாட்டில் மக்களே மேலானவர்கள். தேர்தல்கள் மூலம் இதைப் பலமுறை நாம் நிரூபித்திருக்கிறோம். உலகில் மற்ற எல்லா நாடுகளும் ஆச்சரியப்படத் தக்க வகையில் இத்தனை காலமும் மக்களாட்சியைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.

நம்மிடையே ஊழல் இருக்கலாம், மோசடிகளும், குற்றங்களும் மலிந்திருக்கலாம். இவற்றுக்கு இடையேயும் நாட்டில் மக்களாட்சி தழைத்திருக்கிறது. அதுவே நமது பலம். ஏதோ மாயாஜாலம் நிகழ்ந்துவிடும் என்று கருதி, மக்களாட்சியைக் கைவிட முயற்சிக்கக் கூடாது. அது நமது உரிமைகளைப் பலியிடுவதற்குச் சமம். எல்லா நடவடிக்கைகளும், பிரச்னைகளும் அரசியல் சட்டத்துக்கு உள்பட்டே இருக்க வேண்டும். இப்போதைய பிரச்னைகளுக்கு அரசியல் சட்டத்துக்கு வெளியே தீர்வைத் தேடுவது ஆபத்தாக முடிந்துவிடும்.

நமது நாட்டில் திறமையானவர்களுக்குப் பஞ்சமேயில்லை. ஒவ்வொரு துறையிலும் வியத்தகு திறமை பெற்றோர் இருக்கின்றனர். நாம் ஏன் ஒரு சிலரின் கையில் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும். எனக்கு அற்புதங்கள் நடக்கும் என்பதில் நம்பிக்கையே இல்லை. ஆனால், நமது நாடாளுமன்ற மக்களாட்சி அமைப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எத்தனையோ பரிசீலனைக்குப் பிறகு நாம்தான் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினோம். நாடாளுமன்றத்தின் முடிவு என்பது மக்களின் முடிவுதான்.

நாடாளுமன்றம் எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கருத்துடையவன் நான். அதுதான் மக்களாட்சியின் அடிப்படை. நாடாளுமன்றத்துக்கே மதிப்பில்லை எனில், மக்களாட்சியும் அதற்காக தேர்தலும் இருப்பதால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது?


நன்றி தினமணிnandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum