உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மதிப்புக்குரிய மனிதருக்கு...

Go down

மதிப்புக்குரிய மனிதருக்கு... Empty மதிப்புக்குரிய மனிதருக்கு...

Post by nandavanam on Sun Dec 25, 2011 2:32 am

மதிப்புக்குரிய மனிதருக்கு... 17-18-koodankulam-fast300
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்னை அனைவரிடத்திலும் ஒரு விவாதப் பொருளாகிவிட்டது.

ஏறத்தாழ ரூ. 20,000 கோடி செலவில் அமைக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும் வேளையில் மூட வேண்டும் என்ற கோரிக்கை தேவைதானா என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழக்கூடும்.

இத்தனை நாள் இல்லாத எதிர்ப்பு இப்பொழுது எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் அணுமின் நிலைய ஆதரவாளர்கள் மட்டுமன்றி, நடுநிலையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும். இதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டோர் உரிய விளக்கத்தை அளித்து வருகின்றனர்.

சுனாமி ஏற்பட்டபோது ஜப்பானில் புகுஷிமா அணுஉலையில் இருந்து வெளியான கதிரியக்கக் கசிவு மட்டுமே எதிர்ப்புக்கு முழுக் காரணம் என்று கூறிவிட முடியாது. ஆனால், அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் ஜப்பான் கதிரியக்கக் கசிவின்போது புகுஷிமா பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்த படாதபாடு பட்டபோது, நமது அரசு செய்யுமா, செய்ய முடியுமா என்ற கேள்வி யாருக்குத்தான் எழாது?

இருப்பினும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் என்பது அடிக்கல் நாட்டப்பட்ட 1989-ம் ஆண்டில் இருந்தே இருக்கத்தான் செய்கிறது. எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அணுமின் நிலையப் பணிகள் வேகமாக நடைபெற்று இன்று உற்பத்திக்குத் தயாராகும் நிலைக்கு வந்துவிட்டது.

சரி! தற்போதைய பிரச்னைதான் என்ன? நீண்ட நாள்களாகப் போராட்டம் நடத்தி வருவோரின் கோரிக்கை என்ன என்பதற்கு விடையளிக்க வேண்டிய முக்கியமான காலகட்டமும் இதுவே.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்கினால், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிரியக்கத்தால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அணுஉலை வெடித்தால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் உயிரிழக்கக் கூடும். கடலோரப் பகுதி மக்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாது. கொடிய நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது - இதுவே போராட்டக் குழுவினரின் முக்கியமான அச்சம்.

இந்த அச்சத்தைத் தீர்க்க வேண்டிய தலையாய கடமை, மத்திய அரசை மட்டுமே சாரும். ஆனால், மத்திய அரசு தீர்த்ததா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஆராய்ந்தால் அதுவும் ஒன்றுமில்லை என்ற பதிலே கிடைக்கிறது.

இதனால் தீவிரம் அடைந்துள்ள போராட்டத்தையும், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பையும் எப்படிச் சமாளிப்பது என்று செய்வதறியாது திணறுகிறது மத்திய அரசு. அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அமைந்தார் என்றே கூறலாம். கூடங்குளம் விவகாரத்தைப் பொறுத்தவரை, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் மீது மக்களின் வெறுப்பை ஏற்படுத்தவும் மத்திய அரசு அப்துல் கலாமை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டது என்றே கூறலாம்.

அணுமின் நிலையத்தில் ஒருநாள் ஆய்வு மேற்கொண்ட கலாம், பத்திரிகையாளர்களிடம் "நான் மத்திய அரசின் தூதுவராக வரவில்லை', "போராட்டக்காரர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன்', "அணுமின் நிலையம் வந்தால்தான் பொருளாதார வளர்ச்சி அடையும்', "பயந்தால் எதையும் சாதிக்க முடியாது' என்ற கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

பயந்தால் எதையும் சாதிக்க முடியாது என்பது கூடங்குளம் பகுதி மக்களுக்கு மட்டும் தெரியாத கருத்தா என்ன? பயந்தால் அவர்களால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியுமா?

மத்திய அரசின் தூதுவராக வரவில்லை எனக் கூறும் கலாம், பாதுகாப்பு பகுதி எனக் கருதப்படும் அணுமின் நிலையத்துக்குள் தனி மனிதன் என்ற போர்வையில் சென்றுவிட முடியுமா?

அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய வருவதற்கு முன்னரே, "அணுமின் நிலையம் அவசியம்' என கட்டியம் கூறினார் கலாம்.

மக்கள் போராட்டத்தை முடக்க வழிதெரியாமல் தவித்த மத்திய அரசுக்கு "மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்' என்ற முறையில் கலாமின் கூற்று ஒரு வரப்பிரசாதமாகிவிட்டது. அந்த வாய்ப்பை சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டனர் மத்திய அரசு அதிகாரிகள்.

"கூடங்குளத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களில் ஒருத்தியாக இருப்பேன்' என அறிவித்த முதல்வருக்குக்கூட கலாமின் கூற்று அதிர்ச்சியை ஏற்படுத்தித்தான் இருக்கும்.

கூடங்குளம் விவகாரத்தில் இனி நடக்கப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கலாம் என்ற மதிப்புக்குரிய மனிதரின் கூற்றை ஒரு பிரசார வாக்காக மத்திய அரசு பயன்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

அந்தப் பிரசார வலைக்குள் சிக்காமல் இருக்க வேண்டுமானால், போராட்டம் நடத்தி வருவோரின் அச்சத்துக்குப் பதில் கூற வேண்டிய கட்டாயமும் கலாம் அவர்களுக்கு உண்டு.

அணுமின் நிலையம் அவசியம் எனக் கூறும் அவர் இதைச் செய்வாரா? செய்யவிடுவார்களா மத்திய அரசு அதிகாரிகள்?

நன்றி தினமணிnandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum