உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உழைப்புக்கேற்ற ஊதியம் தேவை!

Go down

உழைப்புக்கேற்ற ஊதியம் தேவை! Empty உழைப்புக்கேற்ற ஊதியம் தேவை!

Post by nandavanam Sat Dec 24, 2011 4:17 am

உழைப்புக்கேற்ற ஊதியம் தேவை! 3993423698_0b2cbd36eb
உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க வீடு- இவைதான் ஒரு மனிதன் வாழ்வதற்கு அத்தியாவசியமானவை. இந்த மூன்றில் மிக முக்கியமான உணவுத் தேவையை நிறைவேற்றும் விவசாயிகளின் நிலைமை முன்னெப்போதையும்விடத் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது.

காலம் தவறிப் பெய்யும் பருவமழை, பாசனத்துக்குப் போதிய அளவு தண்ணீர் கிடைக்காதது, ரசாயன உரங்களின் கடுமையான விலை உயர்வு, வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காதது, அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடை உள்ளிட்ட பல்வேறு இடர்ப்பாடுகளால் விவசாயம் செய்வது என்பதே இன்று மரண அவஸ்தை போலாகிவிட்டது.

விவசாயிகளின் நலன்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தினாலும், அவற்றின் பயன்கள் சிறு, குறு விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். அரசு அளிக்கும் மானிய உதவிகள், பயிர்க் கடன், இலவச மின்சாரம், பயிர்க் காப்பீட்டு பலன்கள் போன்றவை பெரும் விவசாயிகளுக்குத்தான் சாதகமாக உள்ளன. சிறு, குறு விவசாயிகள் இந்தப் பயன்களைப் பெறுவதற்குப் படும்பாடு சொல்லி மாளாது.

மழையில் நனைந்தும், வெயிலில் வதங்கியும் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யும் சிறு விவசாயிகளுக்கு, அவர்களது உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காததால், அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு இலக்காகி, விவசாயத்தையே கைவிடும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அதனால்தான், விளைநிலங்கள் தரிசாகி, வீட்டுமனைகளாக உருமாற்றமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு நாடு உண்மையான வளர்ச்சியை எட்ட வேண்டுமானால், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும். உணவுக்காக, வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைமை ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது.

இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், சில்லறை வர்த்தகம் உள்பட அனைத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நமது கதவுகளைத் திறந்துவிடுவதும்தான் தனது முக்கியப் பணி என்பது போல மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இத்தகைய போக்கால்தான் நாடு முழுவதும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தன்னுடைய உழைப்பால் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத விரக்தியில் விவசாயிகள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர்.

இதற்கு என்னதான் தீர்வு? விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, முனைப்புடன் செயல்படக் கூடியவர்கள் மத்தியிலும், மாநிலங்களிலும் வேளாண்மைத் துறை அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போது மத்தியில் வேளாண்மைத் துறை அமைச்சராக உள்ள சரத் பவாருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் தனது மாநிலத்தில் உள்ள பெரு நிறுவனங்களின் நலன்களைக் காப்பதில் கவனம் செலுத்துவதற்கே நேரம் போதவில்லை. அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் சிறு, குறு விவசாயிகளைப் பாதிக்கும் வகையில்தான் உள்ளன.

அடுத்ததாக, நாடு முழுவதும் பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கான பொறுப்புகளை அரசு அலுவலர்களிடம் விடாமல், அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாய அமைப்புகள் அல்லது பாசனதாரர்கள் சங்கங்களிடம் ஒப்படைத்துவிட்டு, தேவையான நிதியுதவியை மட்டும் மத்திய, மாநில அரசுகள் வழங்கலாம்.

தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு செயல்படுத்தும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் உடனடியாக மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையாகவே கூறி வருகிறார். எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் வேலை அளிக்கப்படும் தொழிலாளர்களை விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கலாம். இதை மேற்பார்வையிட்டு, செயல்படுத்தும் பொறுப்புகளை அந்தந்தப் பகுதி விவசாய சங்கங்களிடமே ஒப்படைக்கலாம்.

தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் பணிகளால் கிடைத்த பலன்களை மதிப்பீடு செய்வதற்கான ஒருங்கிணைந்த அமைப்பு ஏதும் இல்லை.

எனவே, இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி பெரும்பாலும் விரயமாவதாக பரவலாகப் புகார் எழுந்துள்ளது. இத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் இந்த நிதியை விவசாய அமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக வழங்கலாம்.

இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்காக வழங்கப்படும் பல்லாயிரம் கோடி நிதியும் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளும் நீண்டகாலப் பயன்களை அளிப்பதாக இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை விவசாய வளர்ச்சிக்கு உதவும் விதத்தில், பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, விவசாயிகளுக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைப்பதை உறுதி செய்வதுதான். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று பல காலமாகவே கூறி வருகின்றனர். விவசாய விளைபொருள்கள் தவிர, வேறு எந்தவொரு பொருளானாலும் அதை உற்பத்தி செய்பவர்கள்தான் அதற்கான விலையை நிர்ணயம் செய்கின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு மட்டும் அந்த உரிமை அளிக்கப்படவில்லை. இது என்ன நியாயம்?

ஒவ்வொரு உணவுப் பயிருக்கும் அதன் சாகுபடிச் செலவைக் கணக்கிட்டு, அத்துடன் 50 சதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என எம்.எஸ். சுவாமிநாதன் குழு பல ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரையை ஏற்று, நடைமுறைப்படுத்தாமல் மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகிறது.

தனியார் விமான நிறுவனத்துக்கு இழப்பு என்றவுடன் துடிதுடிக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற வருவாயை உறுதி செய்வதில் மட்டும் பாராமுகமாக இருப்பது நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்லதல்ல.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum