உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வேகம் வேண்டாம்... விவேகம் வேண்டும்!

Go down

வேகம் வேண்டாம்... விவேகம் வேண்டும்! Empty வேகம் வேண்டாம்... விவேகம் வேண்டும்!

Post by nandavanam Wed Dec 21, 2011 4:25 am

வேகம் வேண்டாம்... விவேகம் வேண்டும்! Anumin
கூடங்குளம் பிரச்னை, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்கள் விவகாரம் என தினமும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

இதனால் அரசியல் கட்சிகள் அனைத்துமே ரொம்பவும் பரபரப்பாகி விட்டன. இதில் யாருக்கு நன்மை கிட்டுகிறதோ இல்லையோ... நிச்சயமாக தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் இலவச விளம்பரம் கிடைக்கிறது.

இந்நிலையில் அரசின் திட்டங்கள், விலை உயர்வு போன்ற விவகாரங்கள் அப்படியே திசைமாறி விட்டன. பால் விலை, பஸ் கட்டண உயர்வு பற்றி பேசியவர்களின் வாய்க்கு பூட்டு போடும் வகையில் அமைந்துவிட்டன.

இது ஒருவகையில் ஆளுங்கட்சிகளுக்கு தாற்காலிக நிவாரணம் என்று கருதினாலும், தலைவலிபோய் திருகுவலி வந்த கதையாகிவிட்டது. காரணம் முல்லைப் பெரியாறு விவகாரம்.

இலங்கைத் தமிழர் பிரச்னைகளோடு இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ என்ற மனப்போக்கு காணப்படுகிறது.

மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகள் பாடு திண்டாட்டம்தான். அதே வேளையில் ஊமை கனவு கண்டதைப்போல இருக்கிறது வாக்காளர்கள் நிலை.

உதாரணமாக, விவசாயத்துக்கு அரசு அளிக்கும் பல்வேறு சலுகைகள், அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தாமல் தாமதமாகியுள்ளன.

தமிழக விவசாயிகளின் நிலை சொல்ல முடியாத துயரத்தில் உள்ளது. யூரியா தட்டுப்பாடு காரணமாக நித்தமும் பாதிக்கப்படும் விவசாயிகளின் கவலையை யார் துடைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உரம் கிடைக்காமல் அரசு உரக்கிடங்கில் தவம் இருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி உரங்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர்.

இதேபோல வேளாண் இடுபொருள்கள், காப்பீடுத் திட்டம், சொட்டு நீர்ப்பாசனம் போன்றவற்றைச் செயல்படுத்துவதில் மெத்தனப் போக்கு காணப்படுகிறது. இதைத் தீர்ப்பார் யாருமில்லை.

இந்நிலையில் பொதுப்பிரச்னையில் தனிநபர்கள் சட்டத்தைக் கையில் எடுப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், அரசுக்குச் சவால் விடுவது மற்றும் அறிக்கைகள் விடும்போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இதற்குக் காரணம், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம், உளவுப்பிரிவுகளின் செயல்படாத தன்மை போன்றவைதான். முன்பெல்லாம் வடகிழக்கு மாகாணங்களிலும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலும் போர்க்குழுக்கள் பொதுமக்கள் போர்வையில் புகுந்து தீவிரவாதத்தையும், மோதலையும் உருவாக்கி வந்தன. அதே போக்கு இப்போது தென் பகுதிக்கும் பரவிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை.

ஏனென்றால், இத்தனை நாளும் இல்லாமல் மக்களின் திடீர் எழுச்சியும், அதிகாரிகள், காவல்துறையினரை மிரட்டும் சிலரது போக்கும் யோசிக்க வைக்கிறது. அதேபோல முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்களே களத்தில் இறங்கிப் போராடுவது, வன்முறையில் ஈடுபடுவது போன்றவை கவலையளிப்பதாக உள்ளது. கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றதும் இங்குள்ளவர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

இப்படி இருதரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டால் பாதிப்பு இருவருக்கும்தான். இதனால் இரு மாநில அரசுகளும் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். ராஜ்ஜியரீதியாக மட்டுமே சில பிரச்னைகளைத் தீர்க்க முடியும். மாறாக, எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுத்துவிட முடியாது.

கூடங்குளம், முல்லைப் பெரியாறு, காவிரிநதி நீர், கச்சத்தீவு விவகாரம் போன்ற விவகாரங்களிலும் விவேகமாகத்தான் செயல்பட வேண்டும். வேகம் கூடாது. அதிரடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இந்நிலையில் சில திடீர் தலைவர்கள் பிரச்னையை ஊதிவிட்டு வேடிக்கை பார்ப்பதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்காமல் அவர்களின் பின்னணி, செயல்பாடுகளை உடனடியாகக் கண்காணிக்க வேண்டும்.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum