உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜெயல‌லிதா‌வி‌ன் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ், பொ‌ங்க‌ல் ப‌ரிசு!

Go down

ஜெயல‌லிதா‌வி‌ன் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ், பொ‌ங்க‌ல் ப‌ரிசு! Empty ஜெயல‌லிதா‌வி‌ன் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ், பொ‌ங்க‌ல் ப‌ரிசு!

Post by nandavanam on Sun Nov 27, 2011 3:50 am

ஜெயல‌லிதா‌வி‌ன் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ், பொ‌ங்க‌ல் ப‌ரிசு! Pon

ப‌‌ஸ் க‌ட்டண‌ம், பா‌ல் ‌விலையை உய‌ர்‌த்‌தி ம‌க்களு‌க்கு ‌‌கி‌றி‌ஸ்தும‌ஸ் ப‌ரிசு வழ‌ங்‌கிய முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, த‌ற்போது ‌மி‌ன் க‌ட்டண‌த்தை உய‌ர்‌த்‌தி பொ‌‌‌ங்க‌ல் போனசே வழ‌ங்‌‌கி ‌வி‌‌ட்டா‌ர்.

த‌னி‌ப் பெரு‌ம்பா‌ன்மையுட‌ன் ஆ‌ட்‌‌சியை ப‌ிடி‌த்த ஜெயல‌லிதா த‌ற்போது த‌மிழக ம‌க்க‌ளி‌ன் தலை‌யி‌ல் கடுமையான சுமையை ஏ‌ற்ற‌ி வை‌த்து‌வி‌ட்டா‌ர். ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்து ஆறே மாத‌ங்க‌ள்தா‌ன் ஆ‌‌கிறது. அத‌ற்கு‌ள் இ‌ப்படியா எ‌ன்று பொதும‌க்க‌ள் கொ‌ந்த‌ளி‌க்கு‌ம் அளவு‌க்கு ‌ப‌ஸ் க‌ட்டண‌ம், பா‌ல் விலையை உய‌ர்‌த்‌தி ‌வி‌ட்டா‌ர் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா.

ம‌க்க‌ளி‌ன் கோப‌த்‌தி‌ற்கு ஆளான எ‌ந்த ஆ‌ட்‌சியு‌ம் இதுவரை ‌நீடி‌த்ததாக ச‌ரி‌த்‌திர‌ம் இ‌ல்லை. க‌ட‌ந்த ‌தி.மு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌விலைவா‌சி உய‌ர்வு, ‌‌கடுமையான ‌மி‌ன்வெ‌ட்டு போ‌ன்றவையே த‌மிழக‌த்‌தி‌ல் ஆ‌ட்‌சி மா‌ற்ற‌‌த்து‌க்கு வ‌ழிவகு‌த்தது.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌‌ணி‌யி‌ல் இரு‌ந்த ‌விஜயகா‌ந்‌த், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌டு, மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட், சர‌த்குமா‌ர், ‌கிரு‌ஷ்ணசா‌மி, ம‌னித நேய ம‌க்க‌ள் க‌ட்‌சிக‌ள் த‌ற்போது த‌னி‌த் த‌னியாக ‌பி‌ரி‌ந்து ‌வி‌ட்டன.

கருணா‌நி‌தி ஆ‌ட்‌சியை அக‌ற்‌றி ‌வி‌ட்டு ஜெயல‌லிதாவை முதலமை‌ச்சராக வே‌ண்டு‌ம் எ‌ன்று துடி‌த்த இவ‌ர்க‌ள், த‌ற்போது அவரு‌க்கு எ‌திராக போர‌ா‌ட்ட‌ம் நட‌த்துவது வேடி‌க்கையாக இரு‌க்‌கிறது. ஜெயல‌லிதா இ‌ன்னு‌ம் ‌திரு‌ந்தவே இ‌ல்லை எ‌ன்று ‌விலையை உய‌ர்‌த்‌திய ‌பிறகுதா‌ன் த‌ற்போது இவ‌ர்களு‌க்கு தெ‌ரியவ‌‌ந்து‌ள்ளது.

ஆ‌ட்‌சியை‌ ‌பிடி‌த்த கையோடு ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்களை ஒ‌வ்வொருவராக ‌கைது செ‌ய்து‌ ‌சிறை‌யி‌ல் அடை‌த்தபோது ஆதரவு தெ‌ரி‌வி‌த்த இ‌ந்த கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌யி‌ன‌ர் த‌ற்போது ஜெயல‌லிதாவை எ‌தி‌ர்‌ப்பது வேடி‌க்கைதா‌ன்.

கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌யி‌ன் எ‌தி‌ர்‌ப்பு‌க்கு காரண‌ம், உ‌ள்ளா‌ட்‌சி தே‌ர்த‌லி‌‌ல் கூ‌ட்ட‌ணி அமை‌த்து கொ‌ள்ளாத ஜெய‌ல‌லிதா த‌னி‌த்து போ‌ட்டி‌யி‌ட்டு 10 மாநகரா‌ட்‌சி மேய‌ர் பத‌வி உ‌ள்பட ப‌ல்வேறு இட‌ங்களை கை‌ப்ப‌‌ற்‌றினா‌‌ர். த‌ற்போது ப‌‌ஸ் க‌ட்டண‌ம், பா‌ல் ‌விலையை கடுமையாக உய‌ர்‌‌த்‌திய ‌பிறகு போரா‌ட்ட‌ம் நட‌‌த்துவது ‌வீ‌ண்.

''முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு த‌ற்போது ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம் ‌நி‌தி‌ச்சுமையை ‌நி‌ச்சயமாக த‌ன் ‌நி‌ர்வாக‌த் ‌திறமையா‌ல் ‌சீ‌ர்படு‌த்துவா‌ர்‌. அத‌ன் மூல‌ம் த‌ற்போது த‌மிழக ம‌க்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம் ‌நி‌தி‌ச்சுமையையு‌ம் இற‌க்‌கி வை‌ப்பா‌ர்'' எ‌ன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சர‌த்குமா‌ர் கூ‌றி‌யிரு‌ப்பத‌ன் மூல‌ம் கூ‌ட்ட‌ணி த‌ர்ம‌த்தை அவ‌ர் ம‌தி‌க்‌கிறா‌ர் எ‌ன்றே சொ‌ல்லலா‌ம்.

பா‌ல் ‌விலையை உய‌ர்‌த்தா‌வி‌ட்டா‌ல் ஆ‌வி‌ன் ‌நிறுவ‌ன‌த்தை மூடி‌விட வே‌ண்டியதுதா‌ன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றி‌யிரு‌ப்பது அவரது ‌நி‌ர்வாக ‌‌திறமையைதா‌ன் கா‌‌ட்டு‌கிறது. கட‌ந்த ஆ‌ட்‌சி‌யி‌ல் ‌ப‌‌ஸ் க‌ட்டண‌த்தை பு‌திய பேரு‌ந்துக‌ள்‌வி‌ட்டு மறைமுகமாக உய‌ர்‌த்‌தினாலு‌ம் ம‌க்க‌ளிட‌ம் இரு‌ந்து அ‌‌ந்த அளவு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு எழ‌வி‌ல்லை. ‌மி‌ன் க‌ட்டண‌த்தையு‌ம் குறை‌ந்த அளவே உய‌ர்‌த்‌தினா‌ர் கருணா‌நி‌தி.

கட‌ந்த ‌தி.மு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் 1 யூ‌னி‌‌ட் முத‌ல் 50 யூ‌னி‌‌ட் வரை 75 காசு‌ம், 51 முத‌ல் 100 யூ‌னி‌ட் வரை 85 காசு‌ம், 101 முத‌ல் 200 யூ‌னி‌ட் வரை ரூ.1.50 வரையு‌ம், 201 முத‌ல் 600 யூ‌னி‌ட் வரை 2.20 ரூபாயு‌ம், 601 யூ‌னி‌ட்‌க்கு மே‌ல் 4.50 காசு‌ம் வ‌சூ‌லி‌க்க‌ப்ப‌ட்டது.

த‌ற்போது 200 யூ‌னி‌‌ட் வரை 2 ரூபாயு‌ம், 201 முத‌ல் 500 யூ‌னி‌ட் வரை 3.50 ரூபாயு‌ம், 500 யூ‌னி‌ட்டு‌க்கு மே‌ல் 5.75 ரூபா‌யு‌ம் உய‌‌ர்‌த்தலா‌ம் எ‌ன்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய‌‌த்து‌க்கு முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா ப‌ரி‌ந்துரை செ‌ய்து‌ள்ளா‌ர்.

ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த ஆறே மாத‌த்‌தி‌ல் ‌மி‌ன் க‌ட்டண‌த்தை 2 மட‌ங்காக உய‌ர்‌த்‌தி ‌வி‌ட்டா‌ர் ஜெய‌‌ல‌லிதா. உ‌ள்ளாட‌்‌சி தே‌ர்த‌லி‌ல் அ‌திமுகவு‌க்கு அமோக வெ‌ற்‌றி தேடி‌க் கொடு‌த்தன‌ர் ம‌க்க‌ள். அவ‌ர்களு‌க்கு ‌தீபாவ‌ளி ப‌ரிசாக ப‌ஸ் க‌ட்ட‌ண‌‌த்தையு‌ம், பா‌ல் ‌விலையையு‌ம் பல மட‌ங்கு உய‌ர்‌த்‌தி ‌வி‌ட்டா‌ர் ஜெயல‌லிதா.

த‌ற்போது ‌கி‌றி‌ஸ்ம‌ஸ், பொ‌ங்க‌ல் ப‌ரிசாக ‌மி‌ன் க‌ட்டண‌த்தையு‌ம் உய‌ர்‌த்‌த முடிவு செ‌ய்து ம‌க்க‌‌ள் தலை‌யி‌ல் மேலு‌ம் பெ‌ரிய இடியை தூ‌க்‌கி‌‌ப் போட உ‌ள்ளா‌ர் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா.

2014ஆ‌ம் ஆ‌ண்டு வரு‌கிற நாடாளும‌ன்ற தே‌ர்த‌‌ல் ஜெயல‌லிதா‌வி‌ன் அ‌திமுக தோ‌ல்‌வி அடைவது உறு‌தி எ‌ன்று‌ம் 2004 ஆ‌‌ம் ஆ‌ண்டு ஏ‌ற்ப‌ட்ட ‌நிலைதா‌ன் ஜெயல‌லிதாவு‌க்கு ஏ‌ற்படு‌ம் எ‌ன்று‌ம் பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள் ஆத‌ங்க‌த்தை இ‌ப்போதே வெ‌ளி‌ப்படு‌த்த தொட‌ங்‌கி‌வி‌ட்டன‌ர்.

நன்றி வெப்துனியா

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum