உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பூமியை அச்சுறுத்தும் ஆபத்து

Go down

பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Empty பூமியை அச்சுறுத்தும் ஆபத்து

Post by nandavanam on Mon Nov 21, 2011 4:10 am

பூமியை அச்சுறுத்தும் ஆபத்து V142Planet
இந்தியாவில் இப்போது நீர், நிலம், காற்று மாசடைதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவர அறிக்கையிலிருந்து இதை அறியலாம்.

அகில இந்திய அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் அங்களேஸ்வர் (குஜராத்), வாபி (குஜராத்), காசியாபாத் (உத்தரப் பிரதேசம்), சந்திராபூர் (மகாராஷ்டிரம்), கோர்பா (சத்தீஸ்கர்), பிவாடி (ராஜஸ்தான்), அங்குல் டால்ச்சர் (ஒரிசா), வேலூர் (தமிழ்நாடு), சிங்குரிலி (உத்தரப்பிரதேசம்), லூதியானா (பஞ்சாப்) ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.

தமிழக அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் வேலூர் (தோல் ஆலை), கடலூர் (ரசாயன ஆலை), மணலி (பெட்ரோ கெமிக்கல் ஆலை), கோவை (ஜவுளி, என்ஜினியரிங்), திருப்பூர் (சாய ஆலை), மேட்டூர் (ரசாயன ஆலை), ஈரோடு (ஜவுளி, தோல் ஆலை) ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் தொழில் நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்துள்ள மணலி காற்று அதிகம் மாசடைந்துள்ள பட்டியலில் வந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் காற்று மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் கடினமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

திருப்பூரில் நீர், நிலம், காற்று ஆகிய மூன்றுமே மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. சாய ஆலைகளை அதிகம் உள்ளடக்கியது திருப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் ரசாயன ஆலைகளைக் கொண்டுள்ள மேட்டூரும் பட்டியலில் இருந்து தப்பவில்லை.

நிலத்தை வளப்படுத்தும் நீரின் அளவு குறைந்துகொண்டே போவதால், நிலம் முழுவதும் பாலைவனம் ஆகிவிடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.

புதிது புதிதாய்த் தோன்றும் பெரிய தொழிற்சாலைகள், அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வனங்கள் அழிக்கப்படுதல், அபரிமிதமாக நகர் மயமாதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனலாம்.

நீர் மாசுபடுதலில், குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளில், இறால் பண்ணைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்படுவதுடன் இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் உள்ள உப்பு மற்றும் ரசாயனப் பொருட்களால், மற்ற விளைநிலங்களும் தரிசாகின்றன.

அருகிலுள்ள கிணறுகளும், குளங்களும், உப்பு நீராகி விடுகின்றன. கடல்நீர் நிலத்தில் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராகிறது.

அடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆறுபோல் பெருகி கடலை அடைகின்றன. இக் கழிவுகள் விளைநிலங்களைப் பாழடித்து விடுகின்றன. இக் கழிவுகள் கலக்கும் நீரை, கால்நடைகள் அருந்துவதால் இறந்து போகின்றன.

மேலும், இப் பகுதியில் உள்ள மக்கள், தோல் மற்றும் மூச்சிறைப்பு நோய் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பெரும்பாலான தொழிற்சாலைகள் ஆற்றங்கரைகளில்தான் அமைக்கப்படுகின்றன. அந்த ஆறுகளில், இன்று தொழிற்சாலைக் கழிவுகளும், மனிதக் கழிவுகளுமே உள்ளன.

நாட்டில் தொழிற்சாலைகள் எங்கும் பெருகி, தீய புகையைக் கக்கிய வண்ணம் உள்ளன. அவற்றால் நச்சுக் காற்று பரவி மனிதனை அழிக்கின்றது. தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை போன்றவற்றிலிருந்து வெளியாகும் கழிவுநீரால், அப் பகுதி கிராமங்களும், விளைநிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கும் நீரைப் பருகுவதால் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த மாசு சுமார் 25 சதவீதம் வாகனங்களில் இருந்தும், 30 சதவீதம் புழுதியில் இருந்தும், 20 சதவீதம் தொழிற்சாலைகளில் இருந்தும் வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தைப் பெருமளவுக்கு மீறியிருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

காடுகளை அழிப்பது, எரிபொருட்களின் வெப்பம், ஒழுங்கற்ற மழை, கோடையில் அதிக வெப்பம், பனிக்காலத்தில் கடும் பனி ஆகியவையே இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்துக்கு காரணம்.

இப்போதைய வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.

நான்கு லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ûஸடு) அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள்தான் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கரியமில வாயு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள வளையத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப் பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

மொத்தத்தில் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்து வரும் செய்தி நம்மிடையே கண்ணீரை வரவழைக்கிறது.

இதை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம். இருப்பினும், மேலும், மாசடையாமல் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் முடிந்த அளவு செய்யலாமே..!நன்றி தினமணி
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum