உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கலைஞர் டி.வி. சொத்துக்கள் முடக்கம்! ஆகா.. அப்படியா ‘சமாச்சார்’?

Go down

கலைஞர் டி.வி. சொத்துக்கள் முடக்கம்! ஆகா.. அப்படியா ‘சமாச்சார்’? Empty கலைஞர் டி.வி. சொத்துக்கள் முடக்கம்! ஆகா.. அப்படியா ‘சமாச்சார்’?

Post by nandavanam on Thu Nov 17, 2011 3:24 am

கலைஞர் டி.வி. சொத்துக்கள் முடக்கம்! ஆகா.. அப்படியா ‘சமாச்சார்’? K

தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்துக்குச் சொந்தமான கலைஞர் டி.வி.-யின் ‘சில’ சொத்துக்கள் முடக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலேயுள்ள வாக்கியத்தில் ‘சில’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். காரணம் இருக்கிறது.

அமலாக்கப்பிரிவு கலைஞர் டி.வி. குஷ்கோன் ஃபுருட்ஸ், மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் அசையும் அசையாச் சொத்துக்களில்13.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கலாம் என்றே கூறப்படுகின்றது. சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டம் அல்லது PMLA (Prevention of Money Laundering Act) வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே சொத்துக்கள் முடக்கப்படலாம் என்று தெரிகின்றது.

கலைஞர் டி.வி. உட்பட மேற்படி மூன்று நிறுவனங்களுக்கும் 2ஜி ஊழல் மூலம் பெற்ற பணம் வந்து சேர்ந்தது என்ற அடிப்டையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகின்றது.

வெளியான தகவல் உண்மையாகி, கலைஞர் டி.வி.யின் சொத்துக்கள் முடக்கப்படும் நிலைக்குப் போனால், அது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்கும். இப்படி நாம் சொல்வது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், நாம் சொல்வதிலும் ஒரு வலுவான காரணம் உள்ளது.

இவர்கள் இங்கு குறிப்பிடும் தொகையைப் பாருங்கள். 13.5 கோடி ரூபா. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் 200 கோடி ரூபா கலைஞர் டி.வி. ஊடாக வந்தது என்ற குற்றச்சாட்டில்தான் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதே வழக்கில் கடந்த ஆகஸ்டில் டைனமிக் ரியாலிட்டி உட்பட 4 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கும் உத்தரவை இதே அமலாக்கப்பிரிவு பிறப்பித்தது.

அதன் மதிப்பு 223.55 கோடி ரூபா. கலைஞர் டி.வி. உட்பட 3 நிறுவனங்களின் சொத்துக்களில் இவர்கள் முடக்க திட்டமிடுவது வெறும் 13.5 கோடி ரூபா!

கலைஞர் டி.வி.க்கு சென்னையில் மாத்திரம் உள்ள சொத்துக்களின் மதிப்பு என்ன தெரியுமா? 215 கோடி ரூபா!

இப்போது புரிகின்றதா நாம் சொல்லும் காரணம்? டிசெம்பர் 1-ம் தேதிக்குமுன் டில்லி ஹைகோர்ட்டுக்கு கனிமொழி ஜாமீன் பற்றி சி.பி.ஐ. ஒரு பதில் கொடுக்க வேண்டியுள்ளது. அப்படியான நேரத்தில் இப்படியான ஒரு நடவடிக்கை ஒருவித டிஸ்ட்ராக்டிங் டெக்னிக் போல தெரிகிறதே.

எதற்கும், சொத்து முடக்கல் உத்தரவு வரட்டும், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

நன்றி விறுவிறுப்பு
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum