உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை

Go down

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை  Empty ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை

Post by nandavanam on Fri Nov 11, 2011 4:14 am

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை  Img1111110032_1_1

“வெறும் வாய்ப் பேச்சால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலை ஒழிக்க மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள முடியாத நிலையில், பரப்புரை செய்ய அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதில் கவனிக்கத் தக்க விடயம் யாதெனில், ‘வெறும் பேச்சால் ஊழலை ஒழித்துவிட முடியும்’ என்று யார் சொன்னது என்பதுதான். காந்தியவாதி அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து இயக்கம் தொடங்கிய நாள் முதல், அவரும் அவருடைய குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட வல்லுனர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், அர்விந்த் கேஜ்ரிவால், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் ஊழலை ஒழிக்க வலிமையாக லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றுதான் கூறி வருகின்றனர்.

பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசோடு பல முறை பேச்சுவார்த்தை நடத்தி, லோக்பால் சட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பரிந்துரையையும் அளித்தனர். அதனைப் பெற்றுக்கொண்டு, வலிமையான லோக்பால் மசோதாவை தயாரிக்காமல், ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை புகாராகத் தெரிவிப்பவர், அதில் ஆதாரம் இல்லை என்று நிரூபனமானால் கடும் தண்டனயை அனுபவிக்க வேண்டும் என்ற மிரட்டலுடன் ஒரு ‘ஏனோதானோ’ சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியது. அதனை ஏற்றுக்கொள்ளாத அண்ணா ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்று சட்ட வரைவை உருவாக்கி, அதை நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம் என்று எச்சரித்ததோடு நிற்காமல், ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரையும் செய்தனர். அதன் விளைவு, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.

அத்தோல்வியை சுட்டிக்காட்டிய அண்ணா ஹசாரே, தாங்கள் அளித்துள்ள வலிமையான ஜன் லோக்பால் சட்ட வரைவை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றாவிட்டால், 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்துப் பரப்புரை செய்வோம் என்று அறிவித்தது.

இந்த நேரத்தில்தான், ஹசாரே குழு அளித்த ஜன் லோக்பால் வரைவை அடிப்படையாகக் கொண்ட லோக் ஆயுக்தா சட்ட வரைவை பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள உத்தராஞ்சல் மாநில அரசு நிறைவேற்றிவிட்டது. இதனை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் மத்திய அரசு உள்ளது. ஏனென்றால், அதற்கும் குறைவான ஒரு சட்டத்தை லோக்பால் என்று கூறி மத்திய அரசு நிறைவேற்ற முடியாது.

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை  Img1111110032_1_2

உண்மை இப்படியிருக்க, ஏதோ பேச்சிக்கொண்டிருக்காமல், ஊழலை ஒழிக்க சட்டத்தை நிறைவேற்றிவிட்டதைப்போல் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஊடக பலத்தை பயன்படுத்தி எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று சோனியா நினைக்கிறார் போலும். ஹிஸ்ஸார் தேர்தல் தோல்வி இன்னமும் அவர்கள் கண்ணை திறக்கவில்லை என்பதையே அவருடைய பேச்சு காட்டுகிறது.


ஊழலை ஒழிக்க காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கவலைகள் என்னவென்று இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாதா? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டினால் அரசுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளரும், தலைமைத் தணிக்கையாளருமான வினோத் ராய், இன்று வரை மிரட்டலுக்கும், காங்கிரஸ் கட்சி பேச்சாளர்களின் வசைப்பாட்டிற்கும் ஆட்படுத்தப்படுகிறார். “வினோத் ராய் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டுள்ளார்” என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டுகிறார்! இதுதான் ஊழலை ஒழிக்க முற்பட்டுள்ள காங்கிரஸ் அரசின் யோக்கியதை. இந்தத் தகுதியுடன்தான் ஊழலைப் பற்றி சோனியா பேசியுள்ளார்.
ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை  Img1111110032_2_1

“அரசின் கொள்கை முடிவில் தலையிடவில்லை, மாறாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்ட கொள்கையை ஏன் கடைபிடிக்கவில்லை என்றுதான் நான் கேள்வி எழுப்பினேன்” என்று வினோத் ராய் நேற்று பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2001ஆம் ஆண்டு விலையில் 2ஜி அலைக்கற்றைக்கு 2007ஆம் ஆண்டில் விலை நிர்ணயம் செய்யும் அபார ‘கொள்கை’த் திறனுடன்தான் மன்மோகன் சிங்கின் தூய ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் கூறும் ‘அரசின் கொள்கை முடிவு’ என்பதை, கணக்காய்வாளர் மற்றும் தலைமைத் தணிக்கையாளரான வினோத் ராய், அரசின் ‘கொள்ளை’ என்று மாற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதனை சரியாக சொன்னவர் ஜிண்டால் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சஜ்ஜன் ஜிண்டால்தான். இந்த (மன்மோகன் சிங்) அரசின் சுரங்கக் கொள்கை என்பது சுரங்கம் அமைத்து கொள்ளையடிக்க வகைசெய்யும் ஊழல் கொள்கையே என்று கூறினார். மும்பையில் பத்திரிகையாளர்களைக் கூட்டி அதனை பட்டவர்த்தனமாகச் சொன்னார் ஜிண்டால். அதற்கு விளக்கமும் அளித்தார். சுரங்கம் அமைத்து நிலக்கரி முதல் இரும்புத் தாது வரை எந்தக் கனிம வளத்தை வேண்டுமானாலும் தோண்டி எடுத்து, அதனை எங்கு கொண்டு சென்று விற்றுக்கொள்ளலாம்!

இதுதான் இந்த அரசின் சுரங்கக் கொள்கை! அதனால்தான் இந்நாட்டு டாடா முதல் ப.சிதம்பரம் ஆலோசகராக இருந்த வேதாந்தா ரிசோர்சஸ் வரையிலான நிறுவனங்கள் இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்குத் தடையாகவுள்ளார்கள் என்பதற்காகத்தானே அங்கு வாழும் பழங்குடிகளை அடித்துத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள்? அதற்குத்தானே பச்சை வேட்டை எனும் காவல் துறை நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது?

எனவே, அரசின் கொள்கை என்பது, கொள்ளை என்று புரிந்துகொண்டால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்த அரசின் ‘கொள்கை’ என்னவென்று புரியும். அப்படியான கொள்ளைக் கொள்கை காரணமாகத்தான் ஒன்றே முக்கால் இலட்சம் கோடி அரசு வருவாய் அபாரமாக திட்டமிடப்பட்டு திருடப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த ரூ.71,000 கோடி திருடப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஊடக பலத்தைக் கொண்டு மறைக்கப் பார்க்கிறார் மன்மோகன் சிங். இவருடைய ஊழல் அரசை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதன் எதிரொலிதான் தமிழ்நாட்டில் இருந்து ஹிஸ்ஸார் வரை காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலின் முக்கியக் குற்றவாளியான தனது உறவினர் ஒட்டோவியோ குட்ரோக்கியை காப்பாற்ற அரசு அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி விடுவித்த சோனியா, அயல் நாட்டில் வங்கிகளின் இரகசிய கணக்குகளில் பணம் போட்டு வைத்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாற்றை இதுவரை மறுக்கவில்லை. தனது மருமகன் வதேரா இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆகியுள்ளது பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகளை மறுக்காத சோனியா, தன்னை ஊழலை ஒழிக்க வந்த தேவதை என்று காட்டிக்கொள்ள முற்பட்டுள்ளார். இந்திய மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை வாக்கின் மூலம் மீண்டும் நிரூபிப்பார்கள்.


நன்றி வெப்துனியா


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum