புதிய தலைமுறைக்கு ஆப்படிக்கப்போகும் சன்?!
Page 1 of 1
புதிய தலைமுறைக்கு ஆப்படிக்கப்போகும் சன்?!
தமிழ் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் அசைக்கமுடியாத ஜாம்பவானாக விளங்கும் சன் டி.வி. குழுமத்தின் செய்தி சேனலான சன் செய்திகள் சேனலை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே முதலிடம் பிடித்திருக்கிறது புதிய தலைமுறை சானல். டி.ஆர்.பி., ரேட்டின் படி சற்றேறக்குறைய இரண்டு புள்ளிகளே சன்னைவிட புதிய தலைமுறை அதிகம் பெற்றிருந்தாலும், இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
சன்.டி.வி., கலைஞர் டி.வி., ஜெயா டி.வி. என்று முந்தைய ஆட்சியாளர்களாலும், இன்றைய ஆட்சியாளர்களாலும் நடத்தப்படும் செய்தி சானல்களை பின்னுக்குதள்ளிவிட்டு ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஒரு சானல் முன்னணிக்கு வருவதென்பது சாதாரணமான விஷயமில்லை..
சன்னை திறந்தால், நடு நிலை என்ற பெயரில் கலைஞருக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவிற்கு எதிராகவும் செய்திகள் வரும். முக்கியமாக தயா நிதிக்கு எதிரான செய்திகள் வரவே வராது. அதுபோலத்தான், கலைஞர் டி.வி.யிலும் இதே நிலைதான், ஜெயாவிற்கு எதிரான செய்திகளே அதிகம் இடம் பிடிக்கும். ஜெயா டி.வி.யை பற்றி சொல்லவே வேண்டாம்......ஒரெ கலைஞருக்கு அர்ச்சனைதான் அதிகமாக இருக்கும். கருணாநிதி என்ற பெயரை அதிகம் உச்சரிப்பது யார் என்று ஒரு போட்டிவைத்தால் அதில் ஜெயா டி.வி.க்குட்தான் முதலிடம். செய்திகள் ஒளிபரப்பும் முப்பது நிமிடங்களில் பத்து நிமிட விளம்பர இடைவேளை தவிர்த்து மீதி, இருபது நிமிடங்களில் பதினைந்து நிமிடங்கள் ஜெயலலிதாவின் அறிக்கைகளே ஆக்கிரமித்திருக்கும். இப்படி ஆண்டவராலும், ஆள்பவர்களாலும் நடத்தபடும் டி.வி.யில் தான் இப்படி என்றால்....ஒரு போதும் ஆட்சிக்கே வரமுடியாதவர்களால் நடத்தப்படும் கேப்டன் டி.வி., மக்கள் டி.வி., வசந்த் டி.வி. , மெகா டி.வி., போன்றவற்றிலும் இதே நிலைமைதான்.
கட்சிக்கு கொள்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு டி.வி. சானல் இருக்கிறது. இப்படி கட்சிக்காரர்களால் நடத்தப்படும் சேனல்கள் ஒருபக்க சார்புடன் தான் செய்திகளை தருகிறார்களே தவிர யாரும் மக்களுக்கு உண்மைகளை சொல்லவில்லை. சரி...விடுங்க...யாராவது சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்வார்களா?
இந்த நிலையில்தான், செய்திகள் சானலில் ஒரு புதிய விடியலாக புதிய தலைமுறை வந்தது. அனைத்துக்கட்சி செய்திகளையும் விருப்பு, வெறுப்பின்றி தொகுத்து ஒரு மிக்சராக, ஜூஸாக கொடுத்தது புதிய தலைமுறை. செய்திகளை அலசும் விதமும் சுவாரஸ்யமாகவே இருந்தது. இதை...இதை...இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் மூலம், இப்போது முத்லிடம் பிடித்திருக்கிறது புதிய தலைமுறை. வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம் அதற்கு....
இதன் அசுர வளர்ச்சியால் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டி.வி., இதை ஆரோக்கியமான போட்டியாக நினைக்காது. தன் சன் டைரக்ட்(DTH) மூலம் வழங்கிவரும் புதிய தலைமுறை சானலுக்கு ஆப்படிக்கவே நினைக்கும். எனக்கிருக்கும் பயமும் அதுதான். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று?....
புதிய தலைமுறை செய்திகளை இணையதளத்தில் பார்ப்பதற்கு clickHere
எழுதியவர் ரஹிம் கஸாலி
Similar topics
» சிறு முதலீடுகள் - தேவை புதிய பார்வை
» மரபணு நோய்களை தடுக்கும் புதிய ஆராய்ச்சி!!!
» காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்
» மரபணு நோய்களை தடுக்கும் புதிய ஆராய்ச்சி!!!
» காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum