உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என் வாழ்க்கை திகாரிலேயே முடியட்டும் -கனிமொழி

Go down

என் வாழ்க்கை திகாரிலேயே முடியட்டும் -கனிமொழி Empty என் வாழ்க்கை திகாரிலேயே முடியட்டும் -கனிமொழி

Post by nandavanam on Sun Nov 06, 2011 3:53 am


என் வாழ்க்கை திகாரிலேயே முடியட்டும் -கனிமொழி 0409jvsl1


கனிமொழி மட்டுமல்ல் தி.மு.க வினரே பெரிதும் நம்பியிருந்தது நவம்பர் 3 ஆம் தேதியைதான்!

கருணாநிதி டில்லி வந்து சோனியாவை சந்தித்து பேசியதும் கனிமொழி உள்ளிட்ட
ஐந்து பேர்களின் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் எண்ணம் இல்லை என சி.பி.ஐ
அறிவித்ததும் கனிமொழிக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி
இருந்தது.தி.மு.க வின் சட்ட ஆலோசகர்களும் ஜாமீன் உறுதி என்றே கனிமொழிக்கு
நம்பிக்கை கொடுத்தார்கள்.
அதனால் வழக்கத்திற்கு மாறாக புன்னகையுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார்
கனிமொழி.திரண்டிருந்த கட்சிகாரர்களை பார்த்து வணக்கம் சொன்னபடியே
வந்தார்.அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி ஷைனியும் அறைக்குள்
நுழைந்தார்.அடுத்த இரண்டாவது நிமிடம்...ஜாமீன் மனுக்களை தள்ளுபடி
செய்கிறேன் என்று நீதிபதி ஷைனி அறிவிக்க அந்த அறையே கண்ணீர் மயமானது.
இதை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி,தனது வழக்கறிஞரிடம் ஷைனியின் உத்தரவு
குறித்து தெளிவாக கேட்டார்.அடுத்த சில நிமிடங்களில் தன்னை
சகஜமாக்கிகொண்டார்.மகளிரணி நிர்வாகி ஒருவர் கனிமொழியின் கைகளை
பிடித்துக்கொண்டு கதற,இது கோர்ட் ..இங்கு அழக்கூடாது என்றார்
கனிமொழி.ராஜாத்தி அம்மாள் அவரது அருகில் வர,கனிமொழிக்கே ஒரு மாதிரியாகி
விட்டது.
நீங்க அழுவறதால் என்னம்மா நடக்க போகுது.தைரியம் சொல்ல வேண்டிய இடத்துல
இருந்துகிட்டு நீங்களே அழலாமா? என கனிமொழி தேற்றினாலும் ராஜாத்தியின்
கண்ணீர் குறையவில்லை.ஒரு கட்டத்தில் சிறுபிள்ளை போல தேம்ப தொடங்கிவிட்ட
ராஜாத்தியை தோளோடு சாய்த்து கனிமொழி தேற்ற...அங்கிருந்த கட்சிக்காரர்கள்
அனைவரும் கண்கலங்கி போனார்கள்.
உளைச்சலும் உருக்கமுமாய் நகர்ந்த அந்த சூழலில் நாமும் கலந்திருந்தோம்.நம்மை
அடையாளம் கண்டுகொண்ட கனிமொழி வணக்கம் தெரிவித்தார்.பதிலுக்கு வணக்கம்
தெரிவித்து விட்டு,’’ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி உயர் நீதிமன்றத்தை
அணுக சொல்லியிருக்கிறார்.ஆனால் அது சாத்தியபடாத விஷயம் என வழக்கறிஞர்கள்
சிலர் சொல்கிறார்களே...? என நாம் வருத்தம் காட்ட..,’’வழக்கு சம்பந்தமா நான்
எதுவும் பேசக்கூடாது.அதெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும்.நான் ஜெயிலுக்கு
போக வேண்டிய நிலை வரும்னு கற்பனை பண்ணிக்கூட பார்த்ததில்லை.ஆனா இன்னிக்கு
அந்த ஜெயிலே எனக்கு உலகமாயிடுச்சி.எனக்கு சாதகமாகவோ பாதகமகவோ என்ன
நடந்தாலும் நான் அதை சட்டை பண்ற நிலையில் இல்லை.இன்னிக்கு ஜாமீன் மனு
நிராகரிக்கப்பட்டதற்கான நான் கவலைப்படவில்லை.இப்படி எல்லாம் அகலாம்னு மனசை
அதுக்கு தயாராகத்தான் வெச்சிருந்தேன்.இத்தனை பேர் எனக்காக தமிழ்நாட்டுல
இருந்து வந்திருக்காங்க..அவங்க எதிர்பார்ப்பு பொய்யா போனதை நினைச்சாதான்
சங்கடமா இருக்கு.ஜாமீனுக்கு வாய்ப்பில்லாமல் என் மொத்த வாழ்க்கையும்
திகாரிலேயே முடிஞ்சாலும்,அதை இன்முகத்தோடு ஏத்துக்கநான் தயாராக
இருக்கேன்.இத்தனை வருச வாழ்க்கையில இந்த கடைசி அஞ்சாரு மாதங்களை என்னால
மறக்கவே முடியாது.

பட வேண்டிய அடி எல்லாத்தையும் பட்டாச்சு.இனி எந்த கஷ்டத்தாலும் என்னை
வருத்தப்படுத்த
முடியாது.பரபரப்பு,குற்றசாட்டு,கைது,விமர்சனம்,அவமானம்,துரோகம்,துயரம்,எதிர்ப்பு,ஏமாற்றம்னு
எல்லாத்தையும் கடந்தாச்சு,சாவை தவிர எல்லாத்தையும் பார்த்தாச்சு.அதையும்
எதிர்கொள்கிற பக்குவத்தை ரொம்ப சீக்கிரமே கத்துகிட்டேன்.ஆனா அதுக்கு நான்
கொடுத்த விலைதான் ரொம்ப பெருசு’’விரக்தியாய் சிரிக்கிறார் கனிமொழி.

வாட்சை காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல..,ஓ தாரளமா கிளம்பலாமே..’’
என்றபடி கோர்ட்டுக்கு அருகே நிற்கும் வேனில் ஏறச்சென்றார்.குழுமி இருந்த
கட்சிக்காரர்களை வணங்கியபடி,மாறாத புன்னகையுடன் திகாருக்கு கிளம்பினார்
நாளைய தி.மு.க வின் தவிர்க்க முடியாத அந்த சக்தி..!

நன்றி-ஜூனியர் விகடன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum