உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா,,,?

Go down

விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா,,,?  Empty விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா,,,?

Post by nandavanam on Thu Nov 03, 2011 3:44 am


விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா,,,?  Captain+vijayakanth++%252830%2529

விஜயகாந்த் அவர் மனைவி பிரேமலதா இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு உள்ளாட்சி
தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.மக்களிடம்
கெஞ்சினார்கள்.கதறினார்கள்..இரண்டு ஆட்சியும் மோசம் என மூக்கை
சிந்தினார்கள்.ஆனால் மக்கள் பெருவாரியாக ஓட்டு போட்டு அ.தி.மு.க வை வெற்றி
பெற செய்தார்கள்.தி.மு.க வை தவிர அனைத்து கட்சிகளுக்கும் டவுசர் கழன்று
போனது.இவர்கள் லட்சணம் வெட்ட வெளிச்சமானது.தி.மு.க வும் நாக்கு தள்ளிப்போய்
தான் சில இடங்களில் வென்றிருக்கிறது.ஜெயலலிதா மீது மக்கள் பெரும் அன்பு
வைத்திருப்பதையும் அபார நம்பிக்கை வைத்திருப்பதையும் இந்த உள்ளாட்சி
தேர்தல் உணர்த்திவிட்டது....நக்கீரன் பத்திரிக்கையை கையில் வைத்துக்கொண்டு
தி.மு.க தலைவர் கருணாநிதி சுயேச்சைகளின் ஓட்டு சதவீதத்தையும் அ.தி.மு.க
ஓட்டு சதவீதத்தில் சேர்த்துவிட்டது தேர்தல் கமிசன் என்கிறார்.இதை சொல்ல
அவர் கூச்சப்படவும் இல்லை.தேர்தல் கமிசன் என்ன ஒண்ணும் தெரியாத..சூனா
பானாவா..?அந்தளவு முட்டாள்தனமாகவா ஓட்டு சதவீதம் கணக்கிடுவார்கள்..?
தி.மு.க ஆட்சியில் இவர்கள் ஜெயித்த போதும் கரெக்டா கணக்கு போட்டாங்களாமா..?
நக்கீரன் எல்லாம் ஒரு பத்திரிக்கை..அதெல்லாம் ஒரு புள்ளி விவரம்னு கையில
பிடிச்சிகிட்டு பேசறாரே...இந்தளவு காமெடி பீஸ் ஆகிட்டாரே தாத்தான்னு
நினைக்கும்போது கஷ்டமா இருக்குது..பாவம்.

விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா,,,?  26karunanidhi

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க க்கு தன் பலத்தை காட்டுகிறேன்
பேர்வழி என களத்துல இறங்கிய தெற்கத்து சிங்கம் விஜயகாந்த் ..உள்ளாட்சி
தேர்தல் முடிவுகள் பார்த்து மானிட்டர் மூர்த்தியாக சுருண்டு
விழுந்தார்.விஜயகாந்த் கட்சி தேறுமா தேறாதா..?

எந்திரிக்குமா..எந்திரிக்காதா என குமுதம் ஓ பக்கம் புகழ் ஞானியை கருத்து
கேட்டு வெளியிட்டுள்ளது.அவர் சொல்கிறார்;


''விஜயகாந்த் நிச்சயம் இதில் தோற்கவில்லை.அவருக்கு இருக்கும் ஓட்டு வங்கி
இன்னும் அப்படியேதான் இருக்கிறது.சென்ற முறை வெற்றி பெற்றதை விட இம்முறை
அதிக இடங்களையே கைப்பற்றியிருக்கிறார்.தமிழ்கத்தில் தி.மு.கவுக்கும்
அ.தி.மு.க வுக்கும் தலா 25 சதவீத வாக்கு வங்கியே இருக்கிறது.ஒருவர் ஆட்சி
செய்யும்போது அவர் மேல் உள்ள கெட்ட பெயராலோ அல்லது எதிர் தரப்பினர் மீதான
ஆதரவு அலையாலோ சதவீதம் கூடும் குறையும்.இப்போது விஜயகாந்த் கூட்டணியும்
அ.தி.மு.க வுடன் இணைந்ததால் சதவீதம் அதிகமாகி அ.தி.மு.கவை வெற்றி பெற
செய்துள்ளது...’’என்கிறார்.
விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா,,,?  J._Jayalalithaa_300

அப்ப விஜயகாந்தினால்தான் அதி.மு.க வெற்றி பெற்றது என்கிறார்.விஜயகாந்த்
கணக்கு சரிதான்.ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பட்டி தொட்டி வரை பரவி தி.மு.க பெயர்
நாறிபோனதால் அ.தி.மு.க ஆதரவு அலை அதிகமாகவே இந்த முறை இருந்தது.

அதனால்
விஜயகாந்த் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கும் என்பதே என்
கருத்து.ஏனெனில் இருவருக்கும் சமபல வாக்கு சதவீதம் இருக்குமெனில் 10
சதவீதம் வாக்கு சதவீதம் வெறுப்பால் தி.மு.க இழந்தால் கூட அது அ.தி.மு.க
வுக்கு வெற்றிதானே.அப்படியிருக்க விஜயகாந்த் எங்கிருந்து வருகிறார்.?
நீங்கள் சொல்லலாம் தி.மு.க வுக்கு எதிரான ஓட்டுதானே..அ.தி.மு.க
விஜயகாந்துக்கும் அ.தி.மு.கவுக்கும் போகிறது என்று.ஆனா பா.ம்.க மற்றும்
மற்ற உதிரி கட்சிகளின் வாக்கு வங்கியும் கரைந்து விஜயகாந்துக்கு
வந்திருக்கலாமே? அதை ஏன் தி.மு.க எதிர்ப்பு ஓட்டு..அல்லது அ.தி.மு.க ஓட்டு
என எண்ண வேண்டும்..?


நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க ஓட்டு வங்கி
அப்படியேதான் இருக்கிறது.காலம் காலமாய் தி.மு.க வுக்கு ஓட்டு
போட்டவர்கள்தான் விஜயகாந்த் ஓட்டு வங்கியாய் மாறினர் என்பது
தெள்ளத்தெளிவாகிவிட்டது.தி.மு.க ஓட்டுவங்கி ஒவ்வொரு தேர்தல் முடிவிலும்
கணிசமாய் குறைந்துவருவதை புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்.

நன்றி குமுதம்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum