உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தி.மு.க வில் மீண்டும் புரட்சி..?

Go down

தி.மு.க வில் மீண்டும் புரட்சி..?  Empty தி.மு.க வில் மீண்டும் புரட்சி..?

Post by nandavanam on Wed Nov 02, 2011 4:02 am

தி.மு.க வில் மீண்டும் புரட்சி..? பரிதி இளம்வழுதி பேட்டி-ரிப்போர்ட்டர்

தி.மு.க துணை பொது செயலாளர் பரிதி இளம்வழுதி..தி.மு.க வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என சொல்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதன்பின் கருணாநிதி தன்னை அழைத்து விளக்கம் கேட்பார் என நம்பி...ஏமாந்து போனார்...இதற்கிடையில் ’’சேர்த்த பணத்தை காப்பாற்ற தாயின் வயிற்றை கூர்வாளால் அறுப்பது போல கழகத்தை சிலர் காட்டிக்கொடுக்க முயல்கின்றனர்’’..என கலைஞர் தன் கொஞ்சு தமிழில் பரிதியை அசிங்கப்படுத்த...பரிதியோ..தன்னை போல தி.மு.க வில் ஓரங்கட்டப்பட்வர்களையெல்லாம் ஒருங்கிணைத்து கட்சி தலைமைக்கு எதிராக போராட போவதாக பேட்டி கொடுத்திருக்கிறார்.


தி.மு.க வில் உள்ள அதிருப்தியாளர்களுக்கெல்லாம் தலைமை தாங்குவேன்னு சொல்லியிருந்தீங்களே..? புது கட்சி தொடங்குவீங்களா..?


புதிதாக கட்சி துவங்கிதான் போராட வேண்டும் என்றில்லை.போராட்ட குணம் உடையவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே போராடலாம்.(அதுதானே..புதுசா கட்சி ஆரம்பிச்சா என்னாகும்னு வரலாறு சொல்லுதே...கலைஞர் ரூட்டு தான் எப்பவும் கரெக்ட்..பரிதி அந்த ஐடியாவுல இருப்பார் போல..)


அப்படியென்றால் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி போராடுவீர்களா..?


நீதி கேட்டு போராடுவேன்..

நீங்கள் போராளி என்று சொல்கிறீர்கள்.ஆனால் கோழைகள் விலகட்டும்.வீரர்கள் என் பின் தொடரட்டும்..என்று உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி சொன்ன கருத்து உங்களை பற்றித்தான் என்று உடன்பிறப்புகளே கூறுகின்றனரே..?

அண்ணா சொன்னதைதலைவர் சொல்லியிருக்கிறார்.அண்ணா யாரை நினைத்து சொன்னாரோ அது தெரியாது.அதே போல தலைவர் யாரை நினைத்து சொன்னார் என்பதும் எனக்கு தெரியாது.ஆனால் நிச்சயம் என்னை பற்றி சொல்லியிருக்க மாட்டார்.ஏனெனில் என் வீரத்தை பற்றி தலைவருக்கு நன்றாகவே தெரியும்.

(கரெக்ட்..இவர் சொல்வது யாரை தெரியுமா..மதுரையில் பிரச்சாரம் செய்யாமல் முடங்கி கிடந்தாரே அஞ்சா நெஞ்சன்..அவரை சொல்கிறார்..திரு.பரிதி சொல்வது ரொம்ப சரி)

கட்சி மாறுவீர்களா..?


வடசென்னை மாவட்டத்தில் இருந்து தெர்ந்தெடுக்கப்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளேன்.இந்த கட்சியில் அடிப்படை உறுப்பினராக தொடர்வேன்.

(அதுதான் கரெக்ட்..உங்க 50 வருட உழைப்பை தாரை வார்த்துவிட வேண்டாம்.தி.மு.க வில் எல்லோர்க்கும் உரிமை உண்டு.இது கருணாநிதி குடும்ப சொத்து அல்ல.என தொண்டர்களுக்கு முன்மாதிரியாக தெளிவுபடுத்துங்கள்..அண்ணா சொத்தை அவர் உண்மையான தம்பிகளுக்கு ஸ்திரபடுத்துங்கள் )

தி.மு.க வில் மீண்டும் புரட்சி..?  08-parithi-ilamvazhuthi-300

கருணாநிதியை எதிர்த்துவிட்டு,தி.மு.க வில் இருந்துவிடலாம்..ஸ்டாலினை எதிர்த்துவிட்டு தி.மு.க வில் இருக்க முடியாது என்கிறார்களே..?

சிரிக்கிறார்...தி.மு.க இளைஞரணி துவக்கிய 2 ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடந்தது.இளைஞரணி தலைவர் பதவி தனக்கு தான் கிடைக்கும் என்று வைகோ உட்பட பலர் காத்துக்கொண்டிருந்த நேரம்.அப்போது மேடையேறி இளைஞரணிக்கு தலைவராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும்.என்று நான் பேசினேன்.ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் யார்யார் அரசியலில் இருக்கிறார்கள் என்று நேரு குடும்பத்தில் தொடங்கி மாநிலம் வாரியாக பெயர்களை சொன்னதும் ஒரே கைதட்டல்.ஆனால் மேடையில் இருந்த கருணாநிதி பாதியிலேயே கிளம்பிவிட்டார்.ஏனெனில் இளைஞரணி பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது.
மறுநாள் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த க.சுப்புதான் அந்த பையன் பேசினதில் தவறில்லை.கட்சியின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முடிவெடுங்கள் என சொன்னார்.அதன்பின்புதான் ஸ்டாலினுக்கு இளைஞரணி பொறுப்பு கொடுக்கப்பட்டது.ஆனால் இன்றைக்கு அவராலேயே நான் வெளியேற வேண்டி வந்திருக்கிறது..(சிரிப்பு)

(காலை வருவதுதானே சார் உங்க கட்சி அடிப்படை கொள்கையே..முந்திகிட்டவங்க புத்திசாலிகள்)

சரி..உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

பொறுத்திருந்து பாருங்கள்..!!

(பேச்சுவார்த்தைக்கு ஏங்குறீங்கன்னு புரியுது..போங்க சார்..அடிப்படை உறுப்பினர் கார்டையாவது தொலையாம பத்திரமா வெச்சிக்குங்க..நீதி,நேர்மை,ஜனநாயகம் எல்லாம் உங்க கட்சிக்காரங்க பேசலாமா?)
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum