உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’

Go down

 ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’ Empty ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’

Post by nandavanam on Mon Oct 31, 2011 3:56 am

 ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’ 3

சுடுங்கள்... சுடுங்கள்... யார் எதிர்த்தாலும் தயங்காமல் சுடுங்கள்’ என்று தன்னுடைய சிறிய படைக்குக் கட்டளையிட்ட வண்ணம் லிபிய நாட்டு மன்னரின் அரண்மனைக்குள் நுழைந்து, அங்கிருந்த மன்னரின் மருமகனிடம் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. ‘உங்களைக் கைது செய்கிறோம்’ என்று சொன்ன அந்த 27 வயது இளைஞனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அது: இளவரசர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரணடைந்தது. அன்று யுத்தம், ரத்தம் எதுவுமில்லாமல் மிரட்டிப் பெற்ற ஆட்சியை லிபியாவில் 42 ஆண்டு காலம் தொடர்ந்தவர் மும்மர் கடாஃபி.


பாலைவன கூடாரங்களில் தங்கி, ஒட்டகங்கள் மேய்க்கும் நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த கடாஃபிக்குப் படிக்க ஆசை. ஆனால், அதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டும். அதனால், அடிக்கடி தடைப்பட்ட படிப்பை தனி ஆசிரியர் மூலம் தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த போது வயது 20. தொடர்ந்து படிக்க நல்ல வாய்ப்பு என்ற எண்ணத்துடன் சேர்ந்தது ராணுவத்தில். பட்டப் படிப்பும் வெளிநாட்டுப் பயிற்சியும் இலவசம் என்பதும் ஒரு காரணம். இந்தப் பயிற்சியின் போது எழுந்த எண்ணங்கள்தான் அவரைத் தலைவராக்கியது.

அன்றைய எகிப்தின் புரட்சித் தலைவர் நாசரினால் பெரிதும் கவரப்பட்டு, தன்னுடைய நாட்டிலும் மன்னராட்சியை ஒழிக்கத் துணிந்தவர். கம்பீரமான தோற்றத்தாலும், மிடுக்கான குரலினாலும் ராணுவத்தில் நண்பர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்ததால், லெப்டினட்டாக இருந்தபோது ஒரு புரட்சிப் படையை உருவாக்கி, மன்னரைக் கைது செய்ய அரண்மனைக்குச் சென்ற இந்தத் துணிச்சல்காரர், சில ஆண்டுகளில் தன்னை கர்னலாக உயர்த்திக் கொண்டார். இறுதிவரை அதே பதவிக்கான இலச்சினையைத்தான் அணிந்திருந்தார்.

1969ல் மன்னரை அப்புறப்படுத்தி, ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்த முதல் காரியம், 5 ஷரத்துகள் மட்டுமே கொண்ட புதிய இஸ்லாமியச் சட்டம். இதன்படி எல்லா அதிகாரமும் தலைவருக்கே. அடுத்தது, 50 விழுக்காடு லாபத்தை மன்னருடன் பகிர்ந்து கொண்டிருந்த ஐரோப்பிய - அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளை, ‘80 விழுக்காடு தாருங்கள் அல்லது வெளியேறுங்கள்’ என்று சொன்னதுதான்.


நாட்டில் தொண்ணூறு விழுக்காடு சகாரா பாலைவன மாகியிருந்தாலும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நான்காவது பெரிய நாடான லிபியா, புதிய ஆட்சியில் பெட்ரோல் வளத்தினால் செல்வபுரியாகும் என எதிர்பார்த்த உலகிற்கு, அதன் செயல்கள் வியப்பளித்தன. கிடைத்த பெரும் பணத்தில் ஆயுதங்கள் வாங்கிக் குவித்து, அண்டை நாடுகளில் கலகம் ஏற்படத் தீவிரவாதிகளை வளர்க்கப் பயன் படுத்தினார் கடாஃபி.

ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் தலைவனாகத் தன்னை கற்பனை செய்துகொண்டு, அதை உண்மையாக்க கொடுங்கோலனாக உருவெடுத்தார். எதிர்ப்பவர் எவரானாலும் அழித்தார். தூதரங்கள், விமானங்கள், ஹோட்டல்கள் போன்றவை அச்சம் உண்டாக்குவதற்காகவே அழிக்கப் பட்டன.

 ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’ 4

ஆடம்பரமான உடை, பெண் அதிகாரிகள் மட்டுமே கொண்ட பாதுகாப்புப் படை, வெளிநாட்டுப் பயணங்களில் 400 பேர் கொண்ட குழு, போகும் நாடுகளில் கூடாரமிட்டு தங்குவது போன்ற ஆர்ப்பாட்ட ஆடம்பரங்களினால் உலகைக் கவர்ந்திருந்தாலும், உள்நாட்டில் எதிர்ப்பவர்களை அழிக்கும் சர்வாதிகாரப் போக்கினால் மக்களின் வெறுப்பு உச்சகட்டத்திலிருந்தது. இதனால், டூனிசியாவில் எழுந்த எதிர்ப்பு அலைக்கு லிபியாவும் பலியானது.

இப்படியொரு வாய்ப்புக்காக காத்திருந்த அமெரிக்காவின் ஆசியுடன் எழுந்த உள்நாட்டு ராணுவப் புரட்சி, கடாஃபியை ஓட ஓட விரட்டியது. ஒவ்வொரு நகராக புரட்சிப் படையிடம் இழந்தவர், கடைசியில் தன் கிராமத்தில் பதுங்கியிருந்தபோது அவர்களிடம் பிடிபட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள்: ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’

எழுதியவர் பாலா
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum