உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எடைக்கேற்ற அளவு தண்ணீர்:

Go down

எடைக்கேற்ற அளவு தண்ணீர்: Empty எடைக்கேற்ற அளவு தண்ணீர்:

Post by nandavanam Fri Oct 14, 2011 4:07 am

எடைக்கேற்ற அளவு தண்ணீர்: Ht1022

நன்றி cnn

50 முதல் 60 கிலோ எடை கொண்டவர்கள் 24 மணி நேர தேவைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். இது வெறும் தண்ணீர் மட்டும் என்றில்லை. காய்கறி, பழங்கள், ஜூஸ், கூட்டு, குழம்பு, சாம்பார் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

* உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது.

* சுவாசம் வழியாக 300 முதல் 400 மி.லி. நீர் வெளியேறுகிறது. வியர்வை மூலம் 300 முதல் 400 மி.லி. வெளியேறுகிறது. இதை சரிக்கட்டத்தான் நாம் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர்பருக வேண்டியிருக்கிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை
அதிகரிக்கவேண்டும்.

* ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும்.

* கூடவே
உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும்,
காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
இப்போது கோடைகாலம் என்பதால் வெயில் அனலாய் கொளுத்துகிறது. மதிய
நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.

* இந்த வெயில் காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் டீஹைடிரேஷன் என்கிற நீர்ச்சத்தின்மை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மூளை, இதயம், சிறுநீரகம் ஆகிய உடலின் முக்கிய
உறுப்புகள் பாதிக்கப்படும்.

* டீஹைடிரேஷன் ஆரம்ப நிலையில்
இருந்தால் தண்ணீர் மற்றும் பழச்சாறு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம்
அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதனால், தண்ணீர் நிறைய
குடியுங்கள். முக்கியமாக, அதை சுத்தமாக குடியுங்கள். இந்த சீசனில்
என்னென்ன பழங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள்.

வெயிலில்அதிக நேரம் அலையாதீர்கள். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றினால் நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

நன்றி cnn
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum