உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்!

Go down

சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! Empty சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்!

Post by nandavanam on Thu Oct 13, 2011 3:53 am


சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! P56bநன்றி விகடன்


புலி வருது.. புலி வருது... என்ற கதையாக பூச்​சாண்டி காண்பித்துக் கொண்டிருந்த சி.பி.ஐ. திடீர் வேகம் எடுத்தது திங்கட்கிழமை!

இரண்டு இதழ்களுக்கு முன்பே, 'சென்னையை வலம் வரும் சி.பி.ஐ. டீம்’ என்று
நாம் அட்டைப் படக் கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அதில், ''சி.பி.ஐ.
அதிகாரிகள் சிலர் சென்னைக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களது அசைன்ட்மென்ட்
என்ன என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்!'' என்றும் சொல்லி இருந்தோம்.
கடந்த 10-ம் தேதி காலை 8 மணிக்கு சி.பி.ஐ-யின் ரூட் தெரிந்துவிட்டது.

அடையாறு வட்டாரத்தில் உள்ள போட் கிளப் ஏரியாவில் சன். டி.வி. உரிமையாளர்
கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகிய இருவரது வீடும்
இருக்கிறது. இவர்களது வீட்டுக்குள் 13 சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றார்கள்.
அதேநேரத்தில் டெல்லியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கும் சென்றார்கள்
அதிகாரிகள். சென்னைஎம்.ஆர்.சி. நகர் பகுதியில் சன் டி.வி-யின் பிரதான
அலுவலகத்துக்கும் அதிகாரிகள் சென்றார்கள்.

இரண்டு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் வட்டாரம் சொல்கிறது.

சி.பி.ஐ-யைத் தூண்டிய சிவசங்கரன்

தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங்கரன், தொடங்கிய நிறுவனம்தான்
ஏர்செல். தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது
சிவசங்கரனுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. அது தொடர்பான விவரங்களை
சி.பி.ஐ-யில் வாக்குமூலமாக சிவசங்கரன் கொடுத்துள்ளார்.

''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட நாங்கள்
கொடுத்த விண்ணப்பத்தை அவசியமற்ற காரணங்களைச் சொல்லி தயாநிதி மாறன்
தாமதப்படுத்தினார். இது குறித்து 2005-ம் ஆண்டு தயாநிதிக்கு கடிதம்
அனுப்பினேன். பலன் இல்லை. அதன்பிறகு என்னுடைய ஏர்செல் கம்பெனியை
மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை
செய்யச் சொல்லி எனக்கு நிர்ப்பந்தம் வந்தது. அதனால் வேறு வழியில்லாமல்
ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகிதப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு
கைமாற்றினேன். என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில்
முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைக்கு ஏர்செல் சென்றதும்
ஆறே மாதத்தில் கிடைத்தது.

இந்த உரிமங்களைக் கொடுத்த நான்கு மாதத்தில் சன் டைரக்ட் நிறுவனத்துக்கு சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! Rupee_symbol
600 கோடி அளவிலான முதலீடுகள் சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங்
லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலமாக கிடைத்துள்ளது. இதுவும்
அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன்பிறகு இவர்களின் எஃப்.எம். என்ற
நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் சுமார் சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! Rupee_symbol
100 கோடியை முதலீடு செய்துள்ளது. இவை அனைத்தும் உள்நோக்கம் கொண்ட பணப்
பரிவர்த்தனைகள்!'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் கூறியிருப்பதாக
சி.பி.ஐ. வட்டாரங்கள் செய்தியைக் கசிய விட்டன. இதுதொடர்பாக தயாநிதி மாறன்
மற்றும் கலாநிதி மாறன் ஆகிய இருவரிடமும் அடிப்படை விசாரணைகள் நடந்து
முடிந்தன. சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான சி.பி.ஐ. வழக்கறிஞர்
கே.கே.வேணுகோபாலும், ''இது பற்றி சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகிறது!'' என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். எனவே பூர்வாங்க
விசாரணையை முடுக்கிவிட வேண்டிய நிலை சி.பி.ஐ-க்கு ஏற்பட்டது. இது சி.பி.ஐ.
கையில் இருக்கும் முதல் வழக்கு!

அடுத்த விவகாரம்... 'சுமார் 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளை
தயாநிதிமாறன், தனது போட் கிளப் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகப்
பயன்பாட்டுக்குப் பயன்படுத்த ரகசிய ஏற்பாடு செய்தார்’ என்பது.

''வீடியோ கான்பரன்சிங் போன்றவற்றுக்கும் அதிகளவிலான தகவல்களைப்
பரிமாறிக் கொள்​ளவும் இவை பயன்படுத்தப்​பட்டன. பி.எஸ்.என்.எல்
பொதுமேலாளரின் பெயரில் இந்த இணைப்புகள் பெறப்பட்டிருந்தாலும் தயாநிதிமாறன்
வீட்டில் இருந்து இவை சன் டி.வி-யின் ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இதுபற்றி புகார் வந்தது. 2007-ம் ஆண்டு இது
தொடர்பாக நாங்கள் விசாரிக்க அனுமதி கோரியபோது தொலைத் தொடர்புத் துறை
மறுத்துவிட்டது!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இந்த இரண்டு புகார்களையும் தனித்தனியாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து
வந்தனர். இதற்காகவே இந்த ரெய்டுகள் நடந்துள்ளதாகச் சொல்லப்​படுகிறது.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தயாநிதிமாறன்,
கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத்தின் அதிபரான அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ்
குழுமத்தைச் சேர்ந்த 'ஆஸ்ட்ரோ’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப்
மார்ஷல் ஆகியோர் மீதும் சன் டி.வி., மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், ஆஸ்ட்ரோ
நெட்வொர்க் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். ''குற்றப்
பத்திரிகை தாக்கல் செய்யும் போதுதான் முழுவிவரங்களையும் சொல்வோம்!''
என்கிறார்கள்.

சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! P56a

ரெய்டில் நடந்தது என்ன?

கடந்த 15 நாட்களாக தயாநிதிமாறன், அவரது மனைவி இருவரும் டெல்லியில்தான்
தங்கி இருக்கிறார்கள். சி.பி.ஐ-யின் டெல்லி அதிகாரிகள் எழுப்பிய
சந்தேகங்களுக்கு தயாநிதி அவ்வப்போது பதில் அளித்துவந்தாராம். அக்டோபர்
10-ம் தேதியன்று தயாவின் சென்னை வீட்டில் ரெய்டு நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள்
சென்றபோது, வாசலில் இருந்த செக்யூரிட்டிகள் அரை மணி நேரம் காக்க வைத்தனர்.
அதிகாரிகள் கோபக்குரல் எழுப்பியபிறகுதான், உள்ளே அனுமதித்தனர். அப்போது,
தயாநிதிமாறனின் தாயார் மல்லிகா மற்றும் வேலைக்காரர்கள் ஒன்பது பேர்
வீட்டில் இருந்தனர். ஆனால், கலாநிதி மாறன், அவரது மனைவி மற்றும் முரசொலி
செல்வம் ஆகியோர் அவர்கள் வீட்டில் இருந்தார்கள். சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே
நுழைந்ததும், முதல் வேலையாக அவர்களின் செல்போன்களை வாங்கிக்கொண்டனர்.
'எந்த வழக்கில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது’ என்பது போன்ற அடிப்படை
விவரங்களை உயர் அதிகாரி ஒருவர் விரிவாக எடுத்துச் சொன்னதும், ஓகே
சொன்னாராம் கலாநிதிமாறன். வீட்டில் இருந்த சின்னதும் பெரிசுமாக அனைத்து
பொருட்களின் மதிப்புகளை குறிப்பெடுத்துக்கொள்வதில்தான் அதிகாரிகள் அதிக
கவனம் செலுத்தினார்களாம்.

தண்ணீர் டாங்கில் குதித்த சி.பி.ஐ. அதிகாரி!

தயாநிதி மாறன் வீட்டை அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு பகுதிகளையும்
பூதக்கண்ணாடி கொண்டு அதிகாரிகள் ஆராய்ந்தனர். ஒரு கட்டத்தில், மொட்டை
மாடியில் உள்ள தண்ணீர் டாங்கின் உள்ளே சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் குதித்து
அதன் சுவர்களை ஏதோ ஒரு கருவியால் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு
குறிப்பெடுத்தார். மாடியில் உள்ள மினி சைஸ் ஏர்செல் டவர் ஒன்றைச் சுற்றி
நின்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது
வீட்டில் இருந்து குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டும் காரில் கிளம்பிச்
சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் தொலைத் தொடர்புத் துறையின் டெக்னிக்கல்
அதிகாரிகளைக் கேமரா சகிதம் அழைத்து வந்தனர். இவர்களும் மாடியில் இருந்த
ஏர்செல் டவரை மையமாக வைத்துதான் ஆய்வுகளை நடத்தினர்.

மு.க.தமிழரசு நடத்திய போராட்டம்

ரெய்டு தகவல் கேள்விப்பட்டு, தயாநிதி மாறன் வீட்டுக்கு ஒடிவந்தார்,
கருணாநிதியின் கடைசி மகன் மு.க. தமிழரசு. ஆனால், வாசல் கேட்டிலேயே அவரைத்
தடுத்து நிறுத்தினர். அங்கே நின்றிருந்த தயாநிதி மாறனின் நண்பரான வீனஸ் வீர
அரசு, சத்தம் போட்டு அழைத்து வீட்டுக்குள் இருந்த உயர் அதிகாரிகளை
வாசலுக்கு வரவழைத்தார். 'இவர், தயாநிதியின் மாமா. உள்ளே இவரை அனுமதிக்க
வேண்டும்' என்று வாதாடினார். அந்த அதிகாரி வேறு யாரிடமோ போனில் பேசிவிட்டு,
'சரி, அனுமதிக்கிறோம். செல்போனை எங்களிடம் கொடுக்கவேண்டும். ரெய்டு
முடியும் வரையில் உள்ளேதான் இருக்கவேண்டும். வெளியே செல்ல அனுமதிக்க
மாட்டோம். இந்த கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டால், அனுமதிக்கிறோம்'
என்றார். மு.க. தமிழரசு அதற்கு சம்மதிக்கவே, வீட்டுக்குள் அழைத்துச்
செல்லப்பட்டார்.

தயாநிதிமாறனின் பிள்ளைகள் இருவரும் சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளியில்
படிக்கின்றனர். காலையில் அவர்கள் பள்ளிக்குக் கிளம்பிய பிறகுதான், சி.பி.ஐ.
அதிகாரிகள் வந்தனர். மதிய வேளையில் அந்தக் குழந்தைகளுக்கு சாப்பாடு
எடுத்துச் செல்லவேண்டியுள்ளது என்று வேலைக்காரர்கள் பலமுறை
சொன்னபிறகே, காரில் சாப்பாடு எடுத்துச் செல்ல அனுமதித்தனர். 'குறிப்பிட்ட
நேரத்துக்குள் திரும்பி வந்துவிடவேண்டும். வழியில் யாரிடமும் இங்கு நடப்பதை
சொல்லக்கூடாது' என்றெல்லாம் கார் டிரைவரிடம் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர்
கறாராகச் சொல்லி அனுப்பினார்.

சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! P57

ஒன்பதாவது மாடி!

சன் டி.வி. அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில்தான் சன் டைரக்ட்
நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது. இங்கும் சி.பி.ஐ. அதிகாரிகள்
சென்றார்கள். இதன் நிர்வாகப் பொறுப்பில் சுந்தரம் என்பவர் இருக்கிறார்.
அவரை சந்தித்தார்கள். ''தங்கள் கைவசம் பல ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகளை
சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து வந்தார்கள். அதன் ஒரிஜினல் ஆவணங்களைக் கேட்டு
வாங்கிப் பார்த்தார்கள். அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் எடுத்துக்
கொண்டார்கள்!'' என்றும் சொல்லப்படுகிறது. 2007-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில்
செய்யப்பட்ட முதலீடுகள் சம்பந்தமான ஆவணங்கள் இவை!

சுனிதா ரெட்டி சிக்கிய கதை!

அப்போலோ மருத்துவமனையின் செயல் இயக்குநரான சுனிதா ரெட்டியின் அலுவலகம்
மற்றும் வீடுகளிலும் சோதனை நடந்தது. அப்போலோ அதிபர் பிரதாப் சி.ரெட்டியின்
மகள் இவர். சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளில்
முக்கால்வாசியை மேக்சிஸ் நிறுவனமும், மீதி பங்குகளை சிந்தியா
செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமும் வைத்திருந்தன. இந்த
சிந்தியா செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு, அப்போலோ குழுமத்துக்கு தொடர்புகள்
உண்டாம். ''சுனிதா ரெட்டியின் நிறுவனத்தை தனது கேடயமாக மேக்சிஸ் நிறுவனம்
பயன்படுத்தியது. இதற்காக சுனிதா ரெட்டிக்கு எவ்வளவு பணம் அல்லது வேறு
சலுகைகள் தரப்பட்டன!'' என்று சி.பி.ஐ-யின் கேள்வி எழுப்புகிறது.
''இதுதொடர்பாக, சுனிதா ரெட்டியிடம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நாங்கள்
விசாரணை நடத்திவிட்டோம்!'' என்றும் அந்த அதிகாரிகள் சொல்கிறார்கள்.

அடுத்த நடவடிக்கை எப்போது?

போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, ''குறிப்பிட்ட இரண்டு
வழக்குகள் சம்பந்தமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான
ஆவணங்களைத் திரட்டியபிறகு அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்குவோம்!'' என்று
மையமாக நம்மிடம் சொல்லிச் சென்றார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. செய்தித்
தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா, ''மாறன் சகோதரர்கள் வீடுகளில் சோதனை முடிந்த
பிறகு உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை
மேற்கொள்ளும்!'' என்கிறார்.

- ஆர்.பி.

படங்கள்: கே.கார்த்திகேயன், வி.செந்தில்குமார்

சிவசங்கரனுக்கு அதிர்ச்சி!

சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! P56


மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு எதிராக சிவசங்கரன் தொடுத்த புகார் ஒன்று சிங்கப்பூரில் பூமராங் ஆகியிருக்கிறது.

வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் எழும் பிரச்னைகளைக் களைவதற்காக
சிங்கப்பூரில் செயல்படும் அமைப்பு ஆர்பிட்ரேஷன் பேனல், இந்த நடுவர்
மன்றத்தில் சிவசங்கரனின் சிவா வென்ச்சர்ஸ் லிமிடெட், அனந்த கிருஷ்ணன் மீது
கடந்த 2009-ம் ஆண்டு புகார் ஒன்றைக் கொடுத்திருந்தது. அதில், ''அனந்த
கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் தங்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடி, ஏர்செல்
நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள்ளாக விற்பனை
செய்யவில்லை. அடுத்ததாக ஏர்செல் கம்பெனியின் கணக்கு வழக்குகளில்
தகிடுதத்தம் செய்து தங்களுக்கு (சிவா வென்ச்சர்ஸ் லிமிடெட்) வரவேண்டிய
வருமானத்தையும் வராமல் செய்துவிட்டது!'' என்று குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தப் புகாரை விசாரித்த மூன்று நபர்கள் அடங்கிய சிங்கப்பூரின் நடுவர்
மன்றம் சிவசங்கரனின் புகாரை தள்ளுபடி செய்ததோடு நீதிமன்றச் செலவுகளை
ஈடுகட்ட அனந்த கிருஷ்ணனுக்கு சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்! Rupee_symbol 35

கோடி நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இதை
வைத்தே, ''சிவசங்கரன் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன்
மீது ஏதோ உள்நோக்கத்துடன் பகை தீர்த்துக்கொள்வதற்காக பொய்ப் புகார்
கொடுத்திருக்கிறார் என்பது புரியவில்லையா? வழக்குகளை மிகத் தீவிரமாக
ஆராய்ந்து நச் என்று தீர்ப்பு கொடுக்கும் சிங்கப்பூர் நீதிமன்றமே
சிவசங்கரனின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. இதை எங்கள் தரப்புக்கு
பலமாக எடுத்துக்கொள்வோம்!'' என்கிறது தயாநிதி மாறன் தரப்பு.

நன்றி விகடன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum