உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்

Go down

கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம் Empty கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்

Post by nandavanam on Wed Oct 12, 2011 3:54 am

எழுதியவர் koodal bala


கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது .இருப்பினும் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு சாதகமாக உறுதியான பதில்கள் கிடைக்காததால் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது .


இது மக்கள் போராட்டமாக இருந்தாலும் சில ஊடகங்களும் ,அணு உலை ஆதரவாளர்களும் இப்போராட்டம் மர்ம நபர்களால் தூண்டி விடப் படுகிறது என்று நடுநிலையாளர்களை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் .இப்போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்றமுறையில் உண்மை நிலவரத்தை உங்களுக்கு தருகின்றேன் .


கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம் 01
கடந்த11-9-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது .உண்ணாவிரதம் தொடங்கி 5 நாட்கள் கடந்த நிலையில் போராட்ட குழுவில் முக்கியஅங்கம் வகிக்கும் திரு உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு
உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டனர் .அத்திட்டத்தை
உண்ணாவிரதமிருந்த 127 பேரிடமும் நாசூக்காக தெரிவித்தனர்.


ஆனால் அக்கணமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் போராட்டக் குழுவினரிடம் அணு உலையை மூடுவதற்கு முன்பாக எக்காரணம் கொண்டும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று மிகவும் கண்டிப்பாககூறிவிட்டனர் .


அன்றைய தினம் தமிழக அமைச்சரவைக் குழுவும் போராட்டக் குழுவினரை சந்திக்க தாலுகா தலை நகருக்கு வந்திருந்தனர்.அதே வேளையில் அமைச்சர் குழுவை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்வதற்கு போராட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கானோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர் .அதற்கு காரணம் சரியான முடிவு கிடைக்காமல் போராட்டக்குழுவினர் போராட்டத்தை முடித்துவிடக்கூடாது என்பதால்தான் .


அணு உலையை மூட அமைச்சர் குழு உறுதி கூறாவிட்டால் பேச்சு வார்த்தையை நிராகரித்துவிடுவோம் என்று போராட்டக்குழுவினர் பொதுமக்களிடம் உருதியளித்தபின்புதான் பேச்சு வார்த்தைக்கு பொது மக்களும் ,உண்ணாவிரதத்தில் ஈடு பட்டிருந்தோரும் அனுமதித்தனர் .

பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ போராட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது .இதற்கு காரணம் அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள்ள பல்லாயிரக்கணக்கான கூடங்குளம் பகுதி மக்கள்தான் .


இவர்களை மீறி போராட்டக்குழுவினர் ஒரு பாதகமான முடிவை எடுத்தால் அது அவர்களுக்கே பெரிய பாதகமாக முடியலாம் .இதன் காரணமாகத்தான் தற்போது மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .


தற்போது இப்பகுதி மக்களின் மன நிலை அணு உலையை மூடுவதற்கு முன்பாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கூடாது என்பதுதான் .


எழுதியவர் koodal bala
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum