உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கருணாநிதி குடும்பத்துக்கு சாதகமான ஒரு மூவ் எடுத்தது சி.பி.ஐ.!

Go down

கருணாநிதி குடும்பத்துக்கு சாதகமான ஒரு மூவ் எடுத்தது சி.பி.ஐ.! Empty கருணாநிதி குடும்பத்துக்கு சாதகமான ஒரு மூவ் எடுத்தது சி.பி.ஐ.!

Post by nandavanam Fri Sep 30, 2011 3:37 am

கருணாநிதி குடும்பத்துக்கு சாதகமான ஒரு மூவ் எடுத்தது சி.பி.ஐ.! Cart4

நன்றி விறுவிறுப்பு

“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மூலமாக டாடா நிறுவனம் எந்தப் பலனையும் அடையவில்லை” இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) கூறியுள்ளது சி.பி.ஐ. இந்த ஸ்டேட்மென்டில் இருந்து புரிவது என்ன?

டாடா நிறுவனத்தை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தொடர்பு படுத்தப் போவதில்லை!

இந்த விவகாரத்தில் டாடா நிறுவனத்தின் தொடர்பு பற்றி ஒருபடி மேலே போய் சுப்ரீம் கோர்ட்டில் கருத்து தெரிவித்துள்ள சி.பி.ஐ., “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் டாடா நிறுவனம் பலன் அடைந்தது என்ற வாதமும் தவறானது. அதற்காக கருணாநிதி குடும்பத்தினருக்கு மதிப்பு மிக்க நிலம் ஒன்றை பரிசாக வழங்கியது என்ற கூற்றும் தவறானது.

உண்மையைச் சொல்லப் போனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் டாடா நிறுவனம் நஷ்டத்தையே சந்தித்துள்ளது. ஆ.ராசாவும் அவரது சகாக்களும் மற்றைய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை வழங்கியதால், டாடா நிறுவனம் இந்த வியாபாரத்தில் நஷ்டமடைந்த பார்ட்டியாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ.யின் இந்த வாதம், ராசாவை வழக்கிலிருந்து தப்ப வைக்கப் போவதில்லை. ஆனால், கருணாநிதி குடும்பத்துக்கு பரிசாக நிலம் வழங்கப்பட்டதாக உள்ள குற்றச்சாட்டை கிளியர் செய்யப் போகின்றது. அதாவது, ராசா சிக்கிக்கொள்ள, கருணாநிதி குடும்பத்தினர் இந்த விஷயத்தில் தப்பித்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட நிலம் சம்மந்தமான சர்ச்சையில், ரத்தன் டாடாவால் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதப்பட்ட கடிதம், ‘எவ்வித உள் அர்த்தமும் இல்லாத, பொதுவான கடிதம்தான்’ என்கிறது சி.பி.ஐ. இவ்வாறு கூறப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் அந்தக் கடிதத்தை எந்த வகையிலும் சி.பி.ஐ. உபயோகிக்காமல், ஒரேயடியாகவே ஒதுக்கிவிட சான்ஸ் உள்ளது.

இதே வழக்கின் விசாரணை கடந்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெற்றபோது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் சார்பில் வாக்குமூலம் கொடுத்த ஷாஹிட் உஸ்மான் பால்வா, ஆ.ராசாவுக்கு டாடா நிறுவனம், 20 கோடி ரூபா பணத்தை ஒரு சாரிட்டி பெயரில் வழங்கியது” என்று கூறியிருந்தார்.

பெரம்பலூரிலுள்ள மருத்துவமனை ஒன்றின் பெயரிலுள்ள சாரிட்டிக்கே அந்தத் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வாக்குமூலம், சி.பி.ஐ.யின் இறுதிக் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்பதும், சி.பி.ஐ.யின் தற்போதைய நிலைப்பாட்டில் இருந்து நன்றாகவே புரிகின்றது.

ஆ.ராவின் தனிச் செயலாளராக பணியில் இருந்த ஆர்.கே.சன்டோலியா தனது வாக்குமூலத்தில், “ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றது. நீரா ராடியாவையும், டாடா நிறுவனத்தையும் இவர்கள் முடிந்தவரை வழக்குக்கு வெளியே வைத்திருக்கவே பார்க்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய பங்கு உள்ளது. டாடா, மற்றும் நீரா ராடியாமீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு தைரியம் உள்ளதா?” என்று கேட்டது, கோர்ட் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

அதற்கு சி.பி.ஐ. பதில் கூறியிருக்கவில்லை.

வழக்கின் இந்த திருப்பம், ராசாவுக்கு எந்தவித பலனையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால், டாடா நிறுவனத்துக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் சாதகமாக உள்ளது.

நன்றி விறுவிறுப்பு
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum