உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திவாலாக காரணம் என்ன?

Go down

திவாலாக காரணம் என்ன? Empty திவாலாக காரணம் என்ன?

Post by nandavanam Sat Nov 26, 2011 4:32 am

திவாலாக காரணம் என்ன? Evening-Tamil-News-Paper_98358881474

திவாலாகும் நிலைக்குச் சென்று விட்ட ஆவின், போக்குவரத்துக் கழகம் மற்றும் மின்சார வாரியம் ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்காக, பால், பஸ் மற்றும் மின் கட்டணங்களை, வேறுவழியின்றி கடுமையாக உயர்த்தியுள்ளதாக, நம் முதல்வர் காரணம் கூறியிருக்கிறார்;

ஏற்றுக் கொள்கிறோம்.இம்மூன்று பொதுத் துறை நிறுவனங்கள் சீரழிந்ததற்கு காரணம், அவற்றில் பணியாற்றும் நிதி நிர்வாக திறமையற்ற உயரதிகாரிகளும், உடந்தையாக இருந்த ஊழியர்களும், இவர்களை ஆட்டுவித்த செல்வாக்கு பெற்றிருந்த லோக்கல் அரசியல்வாதிகளும் தான்!தனியார் பால் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கையில், ஆவின் நிறுவனம் மட்டும் தள்ளாடுவதேன்?

இத்தனைக்கும், ஆவின் பொருட்களுக்கு எப்போதுமே டிமாண்டு உண்டு. அப்படியிருந்தும் இந்த நிலைமையா?அரசு பஸ்கள் அனைத்திலும், கூட்டம் நிரம்பித்தான் வழிகிறது. ஆனாலும், நஷ்டக் கணக்கு காட்டுகின்றனர். நிறுவனங்கள் லாபத்திலிருந்து தான், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் அரசு பஸ் நிறுவனங்களும், ஆண்டாண்டாக தங்கள் ஊழியர்களுக்கு சுளையாக, 20 சதவீதம் போனஸ் கொடுத்து விடுகின்றன. இது எப்படி சாத்தியமாகிறது?கையெழுத்து போட்டு விட்டு, சொந்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடும் ஊழியர்கள், லீவை (லாஸ் ஆப் பே)டூட்டியாக மார்க் செய்து வைத்து, சம்பளம் பெறும் ஊழியர்கள், பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக நிற்கும் மக்கள் கை காட்டியும், பஸ்சை நிறுத்தாமலே சென்றுவிடும் டிரைவர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கியதாக போலி பில்லுக்கு பணம் பெறும் ஊழியர்கள், போக்குவரத்துத் துறையில் உண்டு என்பதை, அதன் ஊழியர்களே மறுக்கமாட்டார்கள்.நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய ஊழியர்கள் தேவை தானா?

எதற்கு இவர்களுக்கு தண்டச் சம்பளம் கொடுக்க வேண்டும்? இத்தகைய ஊழியர்களைக் கண்டறிந்து, கண்டித்து, வேலை வாங்க வேண்டும் அல்லது துணிச்சலாக களையெடுக்க வேண்டும்!அடுத்து, இலவச பஸ் பாஸ், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வழங்கப்படுகிறது. வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மட்டும், இலவச பஸ் பாஸ் வழங்கிவிட்டு, மற்றவர்களுக்கு சலுகைக் கட்டண பாஸ் வழங்கலாம். குழந்தைகளுக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யக் காத்திருக்கும் இன்றைய பெற்றோருக்கு, இது சிரமமான விஷயமல்ல.அதே போல், பணிக்காலம் முடிந்த பின், ஊழியர்களுக்கு இலவச பஸ் பயணச் சலுகையை நீட்டிப்பதை நிறுத்திவிடலாம். இலவச பஸ் பயணம் செய்யும் ஊழியர்களும், அவர் தம் குடும்பத்தினரும்,

ஒரு வகையில், போக்குவரத்து நிறுவனங்களின் திவாலாகும் நிலைக்குக் காரணமானவர்களே!டூட்டியில் இல்லாமல், சொந்த வேலையாக குடும்பத்தை மப்டியில் அழைத்துச் செல்லும் காவல் துறையினருக்கும், இலவச பயணம் அனுமதிக்கக் கூடாது. இப்படி, குடும்பம் குடும்பமாக இலவச பயணம் செய்தால், போக்குவரத்துத் துறை எப்படி உருப்படும்?மின்சார வாரியத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இது நாசமானதற்கு, நிர்வாகச் சீர்கேடு, மின் திருட்டு, மின் இழப்பு, இலவச மின்சாரம் மற்றும் திறமையற்ற அதிகாரிகள் என்று, பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.போதாக்குறைக்கு பொன்னியம்மாள் வந்தாளாம் என்ற கதையாக, இலவசத் திட்டங்கள் வேறு. இலவசங்கள் வேண்டுமென்று மக்கள் கேட்டனரா? ஓசியில் கிடைத்தால், பெற்றுக் கொள்ளத் தான் செய்வர். கொடுக்காவிட்டால், "ஏன் கொடுக்கவில்லை' என்று, யாரும் கேட்க மாட்டார்கள்.இலவசத் திட்டங்கள் தொடரும் வரை, விலைவாசி உயர்வு நிழலாகத் தொடரத் தான் செய்யும். இலவசங்களே வேண்டாம். ஆட்சிப் பொறுப்பேற்கும் எந்த அரசும், விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தாலே போதும்; அதுவே, பெரிய சாதனை தான்.திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை, கட்டணங்களை மட்டும் கடுமையாக உயர்த்தி காப்பாற்றுவது என்பது, நிரந்தரத் தீர்வாகாது. இம்மூன்று நிறுவனங்களையும், அரசியல்வாதிகளின் குறுக்கீடின்றி பணியாற்ற வகை செய்து, மதுரை கலெக்டர் சகாயம் போல், நன்கு நிர்வகிக்கத் தெரிந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.

அப்புறம் எப்படி இவை நஷ்டப்படும், திவாலாகும் என்பதைப் பார்த்து விடுவோம்!முதல்வர் இதைச் செய்ய முன் வருவாரா?


எழுதியவர் ஆர்.ரெங்கராஜன்


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum