உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை!

Go down

அடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை! Empty அடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை!

Post by nandavanam Fri Oct 28, 2011 3:56 am

அடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை! 15swamy

“சோனியாவுக்கு தற்போது மிக அவசரமாக மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டியிருக்கின்றது. அதனால்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவரைச் சிக்க வைக்கப் பார்க்கிறார்” இப்படியொரு அதிரடி ஸ்டேட்மென்ட் யாருடைய வாயில் இருந்து வந்திருக்க முடியும்? ஆம். சுப்ரமணியம் சுவாமிதான் கூறியிருக்கிறார்.

“ராகுல் காந்தியை பிரதமராக்கும் வேளை வந்துவிட்டது. அதனால், மன்மோகன் சி்ங்கை திண்ணையை காலி செய்ய பண்ண வேண்டும்” என்றும் விளக்குகிறார் சுவாமி.

அப்படியானால், மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு பங்குதாரரா? “இல்லை” என்பது சுவாமியின் பதில். “இது தொடர்பான அனைத்து பைல்களையும் நான் பார்த்துவிட்டேன். எந்த இடத்திலும் மன்மோகன் சிங், நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாக, எந்த வழிகளிலும் செயற்படவில்லை என்று என்னால் கூறமுடியும்”

மன்மோகன்சிங், ஆ.ராசாவை ஆரம்பத்தில் கண்டிக்காமல் விட்டதால், ஆ.ராசா புகுந்து விளையாடி விட்டார். அந்த ஒன்றே ஒன்றுதான் மன்மோகன் சிங் விட்ட தவறு என்பதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை சுவாமி. இதில் காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கும் பங்கு உள்ளது என்று அடுத்த வெடிகுண்டைத் தூக்கி வீசியிருக்கிறார்.

“2ஜி ஊழல் என்பது, குறைந்த பட்சம் சோனியா வரையாவது ரீச் பண்ணியிருக்கும்”

“ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடு நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு சோனியா காந்தியிடம் இருந்தது” என்று கூறும் சுவாமியின் வாதத்தில் லாஜிக் இடிக்கின்றது.

எப்படி என்றால், மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி என்று இருந்தாலும், அவர் ஆட்சியின் தலைவரல்ல. கட்சியின் தலைவர்தான். மத்திய அரசின் தலைவர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரே ஒருவர்தான். அவர் பிரதமர் மன்மோகன் சிங்.

ஆட்சி தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் சிங், சோனியா காந்தியிடம் இருந்து பெறுகின்றார் என்று பொதுப்படையாகக் கூறப்படுவது வழக்கம்தான். அது அவர்களுக்கு இடையே உள்ள விவகாரம். ஆட்சியில் நடைபெற்ற எந்தவொரு விஷயத்துக்கும், அது நல்லதோ, கெட்டதோ பொறுப்பு ஏற்க வேண்டியவர் ஆட்சியின் தலைவரே தவிர, அவரது கட்சியின் தலைவர் அல்ல.

சுவாமியின் லாஜிக் முன்னே பின்னே இருந்தாலும், அமைச்சர் சிதம்பரத்துக்கு அடுத்ததாக அவர் சோனியா காந்தி மீது குறி வைத்திருக்கிறார் என்பது புரிகின்றது. சுவாரசியமான ஆதாரங்கள் எதையாவது வைத்திருக்கிறாரோ என்னவோ!

நன்றி விறுவிறுப்பு
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum