உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தோல்வியில் கலங்கிய கே.என்.நேரு!

Go down

தோல்வியில் கலங்கிய கே.என்.நேரு! Empty தோல்வியில் கலங்கிய கே.என்.நேரு!

Post by nandavanam Mon Oct 24, 2011 2:52 am

தோல்வியில் கலங்கிய கே.என்.நேரு! P46

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதியை வெற்றி பெற வைத்ததன் மூலம், 'இந்த ஐந்து மாத காலத்தில் எங்கள் மன நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை’ என்று சொல்லாமல் சொல்லி இருக்கி றார்கள் திருச்சி வாக்காளர்கள்!

அ.தி.மு.க-வின் ஐந்து மாத கால ஆட்சியை எடைபோடும் தேர்தலாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்த்தனர், அரசியல் நோக்கர்கள். அதுவும், தி.மு.க. வேட்பாளரான கே.என்.நேரு, நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்தார். அவருக்குச் சில வழக்கு களில் ஜாமீன் கிடைத்தும், வெளியே வரவிடாமல், அடுத் தடுத்து வழக்குகளைப் போட்டு முடக்கினர். பலத்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகே அவரால் வெளியே வரமுடிந்தது. அவர் வெற்றி பெற்றால் 'களத்துக்கு வராமலே வென்றவர்’ என்ற பெருமையும் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், ஆளும் கட்சிக்கு இது மானப் பிரச்னை என்ப தால், பரஞ்சோதிக்காக 17 அமைச்சர்களைக் கொண்ட பெரும் படையே தொகுதியில் பழியாகக் கிடந்தது. முதல்வர் ஜெயலலிதாவும்கூட திருச்சிக்கு வந்து மொத்தம் ஏழு இடங்களில் பேசிவிட்டுச் சென்றார். தி.மு.க. தரப்பிலும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஒரு படையே வேலை செய்தது. கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலினும், தானே போட்டிடுவதுபோல சுற்றிச் சுழன்றார். கருணாநிதியும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நடிகை குஷ்புவும் இரண்டு நாட்கள் அங்கே தங்கிச் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து கலக்கினார். அதனால், இரண்டு தரப்பிலும் முடிவு எப்படி இருக்குமோ என்று அலைமோதினர்.

20-ம் தேதி காலை சாரநாதன் இன்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தில்லை நகரில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு வந்த நேரு, கூடி இருந்த கட்சிக்காரர்களிடம், ''என்னய்யா... வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?'' என்று உற்சாகமாகக் கேட்க, ''அண்ணே... எல்லாம் பிரகாசமா இருக்குண்ணே'' என்று கோரஸாக பதில் வந்திருக்கிறது. ''பார்ப்போம்... இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிவு வரத்தானே போகுது?'' என்று மீசையை முறுக்கியபடியே அமர்ந்தார். ஒவ்வொரு ரவுண்டிலும் கிட்டத்தட்ட ஆயிரம் வாக்குகள் நேரு பின்தங்கி இருப்பதாகத் தகவல் வர... அலுவலகம் களையிழந்துபோனது. ''ஜாமீன் கிடைச்சதும் என்னை வெளியே விட்டிருந்தா, அவங்க என்னைப்பத்தி தப்பு தப்பா பரப்பின தகவல்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து ஜெயிச்சிருக்கலாம்... கையைக் கட்டிப் போட்டுட்டு, சண்டை போடச் சொன்னா அது எப்படிய்யா?'' என்று வருத்தத்தோடு சொன்னாராம் நேரு. நேரம் செல்லச் செல்ல... இதற்கு மேலும் நிலவரம் மாற வாய்ப்பில்லை என்று தெரிந்துகொண்டதும், ''எல்லாருக்கும் சாப்பாடு ரெடி. சாப்பிட்டுட்டு கிளம்புங்க!'' என்று சொல்லிவிட்டு, சொந்த ஊரான கானக்கிளியநல்லூருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக ஜெயலலிதா, பெங்களூரு தனி நீதிமன்றத்துக்குச் சென்று இருப்பதாலோ என்னவோ... அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம் பெருமளவில் இந்த வெற்றியைக் கொண்டாட வில்லை. வாக்கு எண்ணிக்கை முடியும் நேரத்தில், சாரநாதன் கல்லூரி வளாகத்துக்கு அமைச்சர் சிவபதி, திருச்சி எம்.பி-யான குமார், மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்ஏ-வுமான மனோகரன் ஆகியோருடன் பகட்டாக வந்தார் பரஞ்சோதி. அவரை சூழ்ந்துகொண்ட போட்டோகிராஃபர்கள், ''அண்ணே... உற்சாகமா ஒரு போஸ் கொடுங்க!'' என்று சொல்ல... சட்டென்று பரஞ்சோதியை அலேக்காக தூக்கிப் பிடித்தார் குமார்.

பரஞ்சோதியிடம் பேசியபோது, ''புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளுக்கும், திட்டங் களுக்கும் கிடைத்த வெற்றி இது. என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று சிலரைத் தூண்டிவிட்டு எதிர்க் கட்சியினர் செய்த அவதூறுப் பிரசாரங்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டார்கள். அம்மா வின் பிரசாரத்துக்கு முன்னர் அவர்களது தகிடுதத்தம் எதுவும் எடுபடவில்லை!'' என்றார் பூரிப்பாக.

திருச்சி மேற்கில் அ.தி.மு.க. வென்றுவிட்டாலும்... எம்.எல்.ஏ. மனோகரனும், அமைச்சர் சிவபதியும் கலக் கத்தில் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. பரஞ்சோதி, கட்சியில் சீனியர். ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். அவர் வெற்றிக்கனியை பறிந்து வந்ததன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாவட்டச் செய லாளர் பதவியோ... அமைச்சர் பதவியோ வழங்கலாம் என்று கட்சி வட்டாரம் பரவலாகப் பேசுகிறது.

பொதுத் தேர்தல் முடிவு வந்தபோதே மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் மனோகரனுக்கே அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக சிவபதியும், மரியம் பிச்சையும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டனர். எதிர் பாராத விதமாக மரியம்பிச்சை இறந்ததை அடுத்து, அமைச்சர் பதவி மனோகரனுக்கு வழங்கப்படும் என்ற பேச்சு இருந்தது. அதுவும் நடக்காமல் போனது. இந்த நிலையில், பரஞ்சோதி வெற்றிபெற்று இருப்ப தால், 'மீண்டும் மனோகரனுக்கு அமைச்சர் பதவி கைகூடாது’ என்று சொல்லும் விவரம் அறிந்தவர்கள், 'மனோகரனிடம் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு பரஞ்சோதி வசம் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை’ என்கிறார்கள். அதனைக் கேட்டு மனோகரன் ஆடிப்போய் இருக்கிறார். பரஞ்சோதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சிவபதியின் பதவி காலியாகலாம் என்பதால், அவரும் கலக்கத்தில்தான் இருக்கிறார்.

எதையும் எதிர்பாராத சமயத்தில் நடத்துவதுதானே முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைல்!

நன்றி விகடன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum