கடாபி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு என்னாச்சு?
Page 1 of 1

வியாழக்கிழமை இன்டர்-நெட்டில் உலாவிய இரு வீடியோ காட்சிகள் கடாபியை அவரது இறுதி நிமிடங்களில் உயிருடன் காட்டின. போராளிப் படையினரின் ஒரு குழுவிடம் சிக்கிக் கொண்ட அவரை, அந்தக் குழுவில் இருந்த சிலர் செல்போனில் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அவை.
மஞ்சள்நிற வாகனம் ஒன்றில் இருந்து கடாபி இழுத்து கீழே வீழ்த்தப்படுவது, அவர்மீது தாக்குதல் நடாத்தப்படுவது, ரத்தம் வழிந்த நெற்றியை அவர் தடவிப் பார்ப்பது என்று விலாவாரியாக அவரது இறுதி நிமிடங்கள் படமாக்கப்பட்டிருந்தன. கடாபியின் தலையைப் பிடித்து தரையில் மோதுவது, அவரது காலைப் பிடித்து முறுக்கி உடலைத் திருப்புவது ஆகிய மகா வன்முறையான காட்சிகளும் இந்த வீடியோ கிளிப்பிங்ஸில் இருந்தன.
ஆரம்பத்தில் ஒரு த்ரில்லுக்காக இந்த வீடியோ பைல்களை வெளியிட்ட யாரோ, பின்னர் இந்த வீடியோவே போர்க் குற்றங்களுக்கான ஆதாரமாக மாறலாம் என்ற விஷயம் புரிந்தவுடன் அதை அமுக்கி விட்டது தெரிந்தது.
ஆனால், அதற்குள் அதிலிருந்து பகுதி பகுதியாக காப்பி பண்ணப்பட்ட வீடியோ பைல்கள் வெளியே வெவ்வேறு சோர்ஸ்களின் மூலம் உலாவத் தொடங்கின.
ஒரிஜினல் வீடியோ கிளிப்புக்கு லிங்க் கொடுத்திருந்த நியூயார்க் டைம்ஸ்கூட, சுமார் 2 மணி நேரத்தில் அதை ரிமூவ் பண்ணிக் கொண்டது. போர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வீடியோ கிளிப்கள் பின்னாட்களில் வெடிக்கக்கூடிய டைம்-பாம்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள் தாமதமாகவே புரிந்து கொண்டன.
ஏதோ ஒரு நாளில், நெதர்லாந்து நாட்டின் The Hague நகரில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றம் என்ற வகையில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படலாம். இதற்கான விசாரணை தேவை என்ற கோஷத்தின் பின்னணியில் சில அரபு நாடுகளின் அழுத்தமும் வந்து சேரலாம்.
அல்-ஜசிராவும் ஆரம்பத்தில் காட்டிய தனது கிளிப்பிங்கை சில ரவுன்ட்களின்பின் எடிட் பண்ணி வெளியிடத் தொடங்கியது. சி.என்.என். மற்றும் ஏ.பி.சி. ஆகியவை, முன்னெச்சரிக்கையாக “கிராபிக்ஸ் கலந்த காட்சிகள்” என்று அறிவித்தபின்னரே ஒளிபரப்பின. அவைகூட ஒரிஜினல் வீடியோ கிளிப்பிங்கில் இருந்த பல காட்சிகளைத் தவிர்த்துவிட்டன.
இதன் ஒரிஜினல் வீடியோ கிளிப்பிங்கை, அது வெளியிடப்பட்ட சில நிமிடங்களுக்குள் பார்த்த மிகச் சொற்ப நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படி இருந்தால், இந்த வீடியோ கிளிப்பிங்ஸ் பற்றி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.

நன்றி விறுவிறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum