உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தி.மு.க-வில் 'பரிதி' புரட்சி!

Go down

தி.மு.க-வில் 'பரிதி' புரட்சி! Empty தி.மு.க-வில் 'பரிதி' புரட்சி!

Post by nandavanam Sat Oct 15, 2011 4:01 am

நன்றி விகடன்


'ரா
மாயணத்தில் இந்திரஜித்... மகாபாரதத்தில்
அபிமன்யூ... எனக்கு பரிதி இளம்வழுதி!'' என்பார் கருணாநிதி. அதனால்தான்,
பரிதி இளம்வழுதிக்கு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்து
அழகு பார்த்தார் கருணாநிதி. கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான பரிதி, மைக்
பிடித்தால் அழவும் வைப்பார், சிரிக்கவும் வைப்பார். சென்னைத் தமிழும்
வரும், கொள்கைத் தமிழும் வரும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி ஒரு மனிதராக
இருந்து அசுர பலத்தோடு இருந்த அ.தி.மு.க-வுடன் மோதியவர். அப்படிப்பட்ட
பரிதி இளம்வழுதி, கடந்த சனிக்கிழமை காலையில் கதறிக் கதறி அழுதார்.
'இனியும் இந்தக் கட்சியில இருக்கக் கூடாது’ என்ற முடிவோடு பேனாவை எடுத்து, எழுதத் தொடங்கினார்.

''தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால், உள்கட்சி ஜன நாயகத்தில் எனது
சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்
பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன். வாழ்க உள்கட்சி ஜனநாயகம்!''- மொத்தமே
அந்தக் கடிதத்தில் இவ்வளவுதான் தி.மு.க-வில் 'பரிதி' புரட்சி! P4வார்த்தைகள்.
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கும் அண்ணா அறிவாலயத்துக்கும் கடிதத்தை
ஃபேக்ஸ் அனுப்பிவிட்டு, தனது பாலவாக்கம் வீட்டுக்குப் போய்விட்டார் பரிதி.
பரபரப்பு பற்றிக்கொண்டது!

50 ஆண்டுகளாகக் கட்சியில் இருப்பவர். துணை சபாநாய கராகவும்
அமைச்சராகவும் இருந்தவர். உள்கட்சி ஜனநாயகத்தின் அங்கமான பொதுக்குழு,
செயற்குழு, உயர்மட்ட செயல் திட்டக் குழு அனைத்திலும் அங்கம் வகிப்பவர்.
அவருக்கே இந்தக் கதியா என்பதுதான் சாதாரணத் தொண்டனின் மனதில் எழுந்த
கேள்வி!

கருணாநிதி, ஸ்டாலின் அல்லது தி.மு.க. ஆகிய மூன்றில், உள்கட்சி
ஜனநாயகத்தைப் பரிதி இளம்வழுதிக்கு உணர்த்தியது எது? அக்டோபர் 1-ம் தேதி
முதல் 7-ம் தேதி வரை நடந்த சம்பவங்களை தி.மு.க-வின் உள்வட்டங்களில் வலம்
வருபவர்கள் அடுக்குகிறார்கள்.

செப்டம்பர்: 30 அறிவாலயத் தில் முப்பெரும் விழா நடக்கிறது. அந்தக்
கூட்டத்துக்குச் சென்ற பரிதி இளம்வழுதி தன் கையில் இரண்டு கவர்களை
எடுத்துச் செல்கிறார். ஒன்று, கருணா நிதிக்கு. இன்னொன்று, ஸ்டாலின் பெயர்
இடப்பட்டு இருந்தது. கருணாநிதியிடம் அந்தக் காகி தத்தைக் கொடுத்த பரிதி,
''எழும்பூர் பகுதி 103-வது வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு
உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன், எழும்பூர் கு.வீராசாமி... இவங்க மூணு பேரும்
எனக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறாங்க. எழும்பூர் தேர்தல்ல எனக்கு
இவங்க சரியா வேலை பார்க்கலை. அதனால்தான் நான் தோற்றேன். இதெல்லாமே முடிஞ்சு
போன சமாசாரம் தலைவரே... இப்ப கிருஷ்ணமூர்த்திக்கும் அவரோட ஆளுங்களுக்கும்
கவுன்சிலர் ஸீட் கிடைக்கவிடாம நான் தடுத்துட்டேன்னு சொல்லி என்னோட
ஆபீஸுக்கு அடியாட்களுடன் வந்து தகராறு பண்ணி இருக்காங்க. அப்ப என்னோட
பி.ஏ-வான கஹாரி மட்டும் இருந்திருக்கார். வந்தவங்க சொன்ன வார்த்தைகளைக்
காதால் கேட்க முடியாது. என் குடும்பத்துப் பெண்களை அசிங்கமாத் திட்டி
இருக்காங்க...'' என்று சொல்லி ஒரு சி.டி-யையும் கருணாநிதியிடம் பரிதி
இளம்வழுதி கொடுக்கிறார். அதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட கருணாநிதி, அருகில்
இருந்த அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனை அழைக் கிறார். ''இவங்க
மூணு பேரையும் சஸ்பெண்ட் பண்ணுய்யா! பொதுச் செயலாளர்ட்ட சொல்லிட்டு
முரசொலிக்கு கொடுத்துடு!'' என்று சொல்கிறார். இரவோடு இரவாக அறிக்கை தயாராகி
கட்டம் கட்டிவிட்டார்கள்.

தி.மு.க-வில் 'பரிதி' புரட்சி! P5

இந்த விழாவுக்கு ஸ்டாலின் வரவில்லை. அவருக்கு உடல் நலம் இல்லாமல்,
அப்போலோவில் சேர்க்கப்பட்டு இருந்தார். எனவே, ஸ்டாலின் பெயரிட்டு பரிதி
எடுத்து வந்த கடிதத்தை அவரிடம் கொடுக்க முடியவில்லை. 'தளபதியைக் காலையில
ஆஸ்பத்திரியில போய்ப் பார்த்துக் கொடுத்திருவோம்’ என்று நிம்மதியாக வீடு
போய்ச் சேர்ந்தார் பரிதி.

அக்டோபர்: 1 - 'முரசொலி’யின் 5-வது பக்கத்தில் பேராசிரியர் அன்பழகன்
பெயரில் அறிக்கை வெளி வந்தது. கிருஷ்ணமூர்த்தி, நாதன், வீராசாமி ஆகிய
மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பு அது. அதன் பிறகு அப்போலோ
மருத்துவமனைக்கு ஸ்டாலினைப் பார்க்க பரிதி செல்கிறார். 'ரெஸ்ட்ல
இருக்காங்க. இன் னிக்கு யாரையும் பார்க்க முடியாது’ என்ற தகவல்
சொல்லப்படுகிறது. 'வந்தேன்னு சொல்லிடுங்க’ என்று திரும்புகிறார் பரிதி.

அக்டோபர்: 3, 4, 5 - மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஸ்டாலின்,
செனடாப் சாலையில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார். மூன்று நாட்களும் பரிதி
அங்கு சென்றதாகவும், மூன்று நாட்களும் ஸ்டாலினை சந்திக்க அவருக்கு அனுமதி
கிடைக்கவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அக்டோபர்: 6 - ஸ்டாலினை சந்திக்கச் சென்ற பரிதி, கையில் ஒரு கடிதத்துடன்
சென்றார். அன்றும் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. 'இதைத் தளபதியிடம்
கொடுத்துடுங்க’ என்று, கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

அக்டோபர்: 7- நீக்கிவைக்கப்பட்டு இருந்த மூவரையும் மறுபடியும்
கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளும் அறிக்கை 'முரசொலி’ அலுவலகத்துக்கு
வருகிறது.

அக்டோபர்: 8 - 'முரசொலி’யில் இந்த அறிக்கை பெட்டிச் செய்தியாக
வருகிறது. அதைப் பார்த்த பரிதி பொங்கிப்போகிறார். 'நான் ஒரு குற்றச்சாட்டை
வைக்கிறேன். தலைவர் உடனடியாக நீக்குகிறார். ஆனால், ஸ்டாலின், அந்த மூணு
பேரையும் உடனே சேர்க்கச் சொன்னால், என்ன அர்த்தம்? என்னை அவர் ஒரு
மனுஷனாகவே மதிக்கவில்லை என்பது தெரியுது. இனிமே இந்தப் பதவியில இருக்கிறதுல
என்ன அர்த்தம்? துணைப் பொதுச் செயலாளர் பதவியில இருக்கிற எனக்கே இதுதான்
மரியாதைன்னா, சாதாரணத் தொண்டன் நிலைமை என்னாவது?’ என்று பரிதி கொந்தளித்து,
தனது பதவியை ராஜினாமா செய்யும் அறிக்கையை எழுதியதாகச் சொல்கிறார்கள்.

'பரிதிக்கு அவங்க பிரச்னை கொடுக்கிறாங்கன்னா... என்னிடம் சொல்லித்தானே
நடவடிக்கை எடுக் கணும். நடவடிக்கை எடுத்து மூணு பேரை நீக்கி விட்டு
என்னிடம் சொன்னால், எனக்கு என்ன மரியாதை இருக்கு?’ என்று ஸ்டாலின்
கேட்டதாகச் சொல்கிறார்கள்.

'நான் தலைவரிடம் பிரச்னையைச் சொல்லத்தான் வந்தேன். அவர்தான் உடனடியாகக்
கட்டம் கட்டி விட்டார். அதைத் தளபதியிடம் சொல்ல எனக்கு வாய்ப்பே
தரப்படவில்லை’ என்று பரிதி தனது தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்.

'மேயர் தேர்தல் நடக்கும்போது மூன்று முக்கிய மான ஆட்களை நீக்கினால்
கட்சிக்கு வீக் என்பது தெரியாதா?'' என்பது ஸ்டாலினின் எதிர்க் கேள்வி யாக
உள்ளது.

''எதுவாக இருந்தாலும் மூன்று பேரையும் கட்சியை விட்டு நீக்கியது
கருணாநிதியும் அன்பழகனும்தானே. அவர்கள் மீது ஸ்டாலினுக்கு வராத கோபம்,
பரிதி மீது ஏன் வர வேண்டும்?'' என்றும் சிலர் கேட்கி றார்கள்.
கருணாநிதியிடமும் ஸ்டாலின் இதுபற்றிக் கேட்டதாக ஒரு தகவல் இருக்கிறது.

''நான் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் 'இதுக்கு விளக்கம் கேளுய்யான்னுதான்
சொன்னேன். சஸ்பெண்ட் செய்யச் சொல்லலை!'' என்று நழுவிக்கொண்டாராம்
கருணாநிதி. இவை எல்லாம் சேர்ந்துதான் பரிதியின் ராஜினாமாவைத் துரிதப்
படுத்தியது என்கிறார்கள்.

''ஏற்கெனவே 'ஸ்டாலின் தலைவராக ஆகும் போதே நமக்கெல்லாம் மரியாதை
இருக்காது’ என்று சொல்லி வந்தவர் பரிதி. அவருக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய
அளவில் நட்பு இல்லை. ஸ்டாலின் அவரை மதிக்கவும் மாட்டார். இவர் அதை வெளியில்
சொல்லவும் மாட்டார். ஒரு காலத்தில் இளைஞர் அணியை உருவாக்குவதிலும் இளைஞர்
அணிச் செயலாளராக ஸ்டாலினை முன் மொழிவதிலும் முன்னணியில் இருந்த வர் பரிதி.
காலப் போக்கில் தனது தனித்தன்மையால் பேச்சாற்றலால் இவர் வளர்ந்தார்.
எப்போதும் யாருக்கும் அடங்கிப் போகும் ஆளாக பரிதி இருந்தது இல்லை. தலைவரை
மட்டுமே மதிப்பார். இது ஸ்டாலின் வட்டாரத்துக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாத
விஷயங்கள். எப்படிப் பார்த்தாலும் அடுத்த முறை இவருக்கு துணைப் பொதுச்
செயலாளர் பதவி தரமாட்டார்கள் என்பதால் இவரே முந்திக் கொண்டார்...'' என்றும்
விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஸ்டாலின் - பரிதி மோதல் கருணாநிதி அறிந்ததுதான் என்பதால், இந்த
ராஜினாமாவை அவரும் எதிர்பார்த்தே இருக்கிறார். வீரபாண்டி ஆறுமுகத்திடம்
பேசிய கருணாநிதி, 'பரிதிகிட்ட பேசிச் சரிபண்ணு...’ என்று உத்தரவிட்டார்.
ஆனால், பரிதியை வீரபாண்டியாரால் பிடிக்க முடியவில்லை. ''தலைவர் இப்போது
சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார். அவரை மீட்க வேண்டும்!'' என்று பரிதி
ஆட்கள் சொல்ல ஆரம்பித்து உள் ளார்கள். மிகப் பெரிய அரசியல் தோல்விக்குப்
பின்னால் தோன்றியிருக்கும் இந்த சலசலப்பு, கட்சித் தொண்டர்கள் மத்தியிலும்
பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பலரும் பரிதியிடம்
தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதனால் விரைவில் பரிதி, புதிய திட்டங்களுடன்
திடீர்ப் புரட்சியைத் தொடங்கலாம்!

நன்றி விகடன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum