உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

விஜய்காந்த் பிரச்சாரக் கூட்ட்த்தில் வெடித்த பட்டாசுகள்

View previous topic View next topic Go down

விஜய்காந்த் பிரச்சாரக் கூட்ட்த்தில் வெடித்த பட்டாசுகள்

Post by nandavanam on Mon Oct 10, 2011 3:55 am

எழுதியவர் shanmugavelகிருஷ்ணகிரியில் நான்கு முனை சந்திப்பு.முக்கியமான இடம்.தினம் அரசியல் தலைவர்கள் யாராவது பேசிக்கொண்டுதான்இருக்கிறார்கள்.பா.ம.க,தே,மு.தி.க. போன்ற கட்சிகளுக்கு தங்கள் வாக்கு வங்கியைதனித்துக் காட்டும் அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.விஜய்காந்த்,ராமதாஸ் போன்றதலைவர்கள் தமிழகமெங்கும் சுற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அன்று வழக்கத்துக்குமாறாக பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டிருந்த்து.வானத்தில் வர்ணஜாலம்.விலை உயர்ந்தவையாக இருக்க வேண்டும்.இடைவிடாத சத்தம்.பெரும்பாலும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில்
பட்டாசு சத்தம் கேட்பதில்லை.தலைவர்கள் வந்தவுடன் சில இடங்களில் வெடிப்பார்கள்.பிரச்சார வாகனத்தில் நின்றவாறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.விசாரித்தபோது விஜய்காந்த் என்று தெரிந்த்து.வெடி சத்தம்தான் கேட்டிருக்குமே தவிர யாருக்கும் அவர் என்ன
பேசினார் என்பது தெரியாது.கூட்ட்த்தில் இருந்த அவரது கட்சியினருக்கே அவர் பேசியது காதில் விழுந்திருக்காது.


இன்று பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன்.நல்லாட்சி தருவோம் என்று பேசினாராம்.பலர் வெளிப்படையாகவே திட்டிக் கொண்டிருந்தார்கள்.தனது கருத்துக்களை தெரிவிக்கவே ஒரு
தலைவர் ஊர்,ஊராக அலைந்து பேசுகிறார்.அவரது பேச்சை கேட்கவிடாதவாறு பட்டாசுவெடித்துக் கொண்டாடுவது அவரது வருகையின் நோக்கத்தையே சிதைத்து விடுகிறது.


நம்மிடையே இன்னொரு பழக்கமுண்டு.அவர்கள் செய்த்து போல நாமும் செய்ய வேண்டும் என்று.ஒவ்வொரு கட்சியினரும் பட்டாசு வெடித்து புகை கிளப்ப ஆரம்பித்தால் என்னவாகும் என்று கவலையாக இருக்கிறது.இதனால் ஏற்படும் மாசுபாட்டையும் கவனிக்க வேண்டும்.குழந்தைகள்,பெண்கள் என்று அனைவரும் அதிகம் நடமாடும் பகுதிகள்
இவை.குழந்தைகளுக்கு அலர்ஜியை தோற்றுவித்து பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.பலனில்லாத இம்மாதிரி விஷயங்கள் தேவைதானா என்பதை,கட்சியினரும் அரசாங்கமும் யோசிக்க வேண்டும்.விஜய்காந்த் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தார்.தான் பேசுவது மக்களைச் சென்று சேர்கிறதா? இல்லையா? என்பதை கவனித்த்தாகவே தெரியவில்லை.ஒருவேளை பக்கத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் கவனித்து நாளிதழ்களில் போட்டுவிடுவார்கள் என்று நினைத்திருக்கலாம்.அவர்களும் முழுமையாக கேட்டிருக்க முடியாது எதிர்க்கட்சித்தலைவரும்,அவரது
கட்சியினரும்,மற்ற கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.


எழுதியவர் shanmugavel
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Re: விஜய்காந்த் பிரச்சாரக் கூட்ட்த்தில் வெடித்த பட்டாசுகள்

Post by babuveera on Mon Oct 10, 2011 9:08 pm

என்னைக்கோ ஒரு நாள்தான் பட்டாசு வெடிக்கரங்க.உங்களோட சிந்தனைக்கு ஒரு வணக்கம் .நாட்டுல பார்த்திங்கன்ன ""தினமும் சிகரட் உதுரங்க .பஸ் ,லாரி,கெரசின் ,போட்டு வண்டி ஒட்ட்ரங்க ,எல்லாமே மாசுதான் ,யோசித்து பார்த்தால் நம்மால் வாழமுடியாது"""'
avatar
babuveera

Posts : 7
Join date : 28/09/2011
Age : 39
Location : NEW DELHI

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum