உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

தி.மு.க. ‘பெரிய மீன்கள்’ இதோ வேறு விதமாகச் சிக்குகின்றன!

Go down

தி.மு.க. ‘பெரிய மீன்கள்’ இதோ வேறு விதமாகச் சிக்குகின்றன!

Post by nandavanam on Fri Oct 07, 2011 3:49 am

நன்றி விறுவிறுப்பு

தி.மு.க. பிரமுகர்களுக்கு எதிராக ‘இதோ வருகிறது.. அதோ வருகின்றது’ என்று
கூறப்பட்டுவந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் தீவிரமடையும் அறிகுறிகள்
தென்படுகின்றன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் வீடு,
மற்றும் அவரது உறவினர் வீடுகள் உட்பட, 11 இடங்களில் செவ்வாய்
கிழமை அதிரடி சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க. பிரமுகர்களை
தேர்தல் வேலைகளில் இருந்து ஒதுக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் ஆளும்
கட்சிக்கு உள்ளது. அதற்காக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நில
அபகரிப்பு வழக்குகள், ஆட்களை ஜாமீனில் வெளியே வரவும் விட்டுவிடுகிறது.

இதற்கு மேலும் தி.மு.க. தலைகளை வெளியே வராமல் உள்ளே வைத்திருக்க ஒரே
வழி, சொத்துக் குவிப்பு புகார்கள்தான் என ஆட்சி மேலிடத்துக்கு அட்வைஸ்
கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கடந்த வார இறுதியில் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்ட இரு போலீஸ்
உயரதிகாரிகளுடன், முதல்வரே நேரில் இதுபற்றி அரை மணி நேரத்துக்கும் மேலாக
விவாதித்ததாகத் தெரியவருகின்றது. போலீஸ் அதிகாரிகளிடம், குறிப்பிட்ட சில
முன்னாள் அமைச்சர்களின் பைல்களையும் கையோடு எடுத்து வருமாறு கார்டனில்
இருந்து தகவல் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
வார இறுதியில் நடைபெற்ற ஆலோசனையின் அதிரடி ஆக்ஷன்தான், செவ்வாய்க் கிழமை
அரங்கேறியது என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில். “இருந்து பாருங்கள், இது
வெறும் தொடக்கம்தான். அடுத்தடுத்து பல இடங்களில் ரெய்டு நடக்கப் போவதைக்
காணப்போகிறீர்கள்” என்றால் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.

ரெய்டுக்கு உள்ளாகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின்
சொந்த மாவட்டம் கடலூர். அங்குள்ள முட்டம் கிராமத்தில் அவர் வீடு உள்ளது.
அங்கே சோதனை நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் நடாத்திவரும் கல்லூரிகள்
வெவ்வேறு இடங்களில் உள்ளன. அங்கும் ரெய்டு நடந்துள்ளது.
நாட்டார்மங்கலத்தில் இரண்டு கல்லூரிகள், பழஞ்சாநல்லூரில் மூன்று கல்லூரிகள்
என்று அந்த லிஸ்ட் உள்ளது.

இதைத் தவிர, இந்த முன்னாள் அமைச்சருக்கு ஏகப்பட்ட பினாமிகள் உள்ளனர்
என்பது ஊரெல்லாம் தெரிந்த ரகசியம். அந்த வகையிலும் அவரது உறவினர்கள் பலரது
வீடுகள் அதிரடி ரெய்டுக்கு உள்ளாகியுள்ளன. முட்டம், காட்டுமன்னார்கோயில்,
சிதம்பரம், வடலூர், திருமுட்டம், கூரைநாடு (மயிலாடுதுறை) ஆகிய இடங்களில்
உள்ள அவரது பல உறவினர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் போய் இறங்கினார்கள்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார்.

சொந்த ஊர் வீட்டைத் தவிர, அமைச்சர் சென்னைக்கு வரும்போது தங்குவதற்காக
அவருக்கு பாலவாக்கம், 5-வது குறுக்கு தெருவிலும் ஒரு வீடு உள்ளது. அங்கும்
சோதனை நடாத்தப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகளின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சரின் மெயின் டாக்குமென்ட் காப்பகமே இந்த வீடுதான்
என்கிறார்கள். மற்றைய இடங்களில் உள்ள சொத்துக்கள் பலவற்றைப் பற்றிய
விபரங்கள், மற்றும் அவை தொடர்பான கணக்குகள் அனைத்தும் சென்னை வீட்டில்
வைத்தே மெயின்டெயின் பண்ணியதாகவும் கூறப்படுகின்றது.

அவற்றில் பல ஆவணங்கள் இப்போது போலீசின் கைகளில்!

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் இடங்களில் நடைபெற்ற ரெய்டு தமக்கு
வெற்றி என்கிறார்கள் ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள். இந்த ரெயிடுக்கு
முன்னர் பல தகவல்களை கடந்த சில வாரங்களாகவே அவர்கள் திரட்டி
வந்திருப்பதாகவும் அந்த அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற ரெய்டு, பல தி.மு.க. மாஜிகளை கலங்க வைத்திருப்பதாக
தி.மு.க. வட்டாரங்களிலேயே கூறுகின்றார்கள். உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில்
உற்சாகமாக இறங்க தயாராக இருந்த சில முன்னாள் அமைச்சர்களே, இப்போது லேசாகப்
பின்னடிக்கத் தொடங்குகிறார்கள்.

இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா என்ற ரீதியில் போகிறதாம் அவர்களின் நினைப்பு.

இதற்கிடையே தி.மு.க. வட்டாரங்களில் பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கும்
மற்றொரு கதை, மிக விரைவில் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரும் ரெய்டு
வளையத்துக்குள் வருவார்கள் என்பதுதான். சொந்தக் கட்சிக்காரர்களே இதுபற்றி
வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு, இவர்கள் புகுந்து
விளையாடியிருக்கிறார்கள்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தி.மு.க.
ஆட்சிக் காலத்திலேயே அவ்வளவாக லைம்-லைட்டுக்குள் வராத ஆள். அவரது
சொத்துக்கள் மீது நடாத்தப்பட்டது ஒரு ட்ரையல் ரன்தான் என்கிறார்கள் போலீஸ்
வட்டாரங்களில்.

அப்படியானால் பெரிய மீன்கள் இனித்தான் சிக்கப் போகின்றன!

நன்றி விறுவிறுப்பு
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum