உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

புற்றுநோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு

Go down

புற்றுநோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு

Post by nandavanam on Mon Sep 26, 2011 1:24 pm
நன்றி cnn


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆண்டு காலமாக ரேடியம் கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இது புற்றுநோய்களை உருவாக்கும் செல்களை அழிக்கிறது. இதனால் உடலில்
பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே கதிர்வீச்சு செலுத்தாமல் மருந்து
மாத்திரைகள் மூலம் குணப்படுத்த டாக்டர்கள் தீவிர முயற்சி கொண்டனர்.


இந்த நிலையில் ஆல்பா கதிர்வீச்சு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை லண்டனின் உள்ள ராயல் மார்ஸ்டன்
ஆஸ்பத்திரி டாக்டர்கள் புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை
செய்தனர். இந்த மருந்து 922 பேருக்கு வழங்கப்பட்டது.


அதை சாப்பிட்டவர்கள் நோயின் தாக்கம் குறைந்து நீண்ட நாட்கள் உயிர்
வாழ்ந்தனர். மேலும் இந்த மருந்தினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.
எனவே இந்த மருந்து புற்று நோய்க்கு சிறந்தது என இங்கிலாந்தின் புற்றுநோய்
ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இந்த மருந்து கண்டுபிடித்ததன் மூலம் புற்று நோயை முற்றிலும்
குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது என முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் கிறிஸ்பார்க்கர்
தெரிவித்துள்ளார். இந்த மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சி குறிப்புகள்
ஐரோப்பிய புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி cnn
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum