உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

சிறுநீரக அழர்ச்சிக்கான அறிகுறிகள்:

Go down

சிறுநீரக அழர்ச்சிக்கான அறிகுறிகள்:

Post by nandavanam on Mon Oct 03, 2011 3:21 am
நன்றி cnn

இரண்டு சிறுநீரகங்களையும் பாதிப்படையச் செய்து வீக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நோயே கடுமையான சிறுநீரக
அழர்ச்சி என்று அறியப்படுகிறது. இது கடுமையான குலோமறோலேன் சிறுநீரக
அழர்ச்சி அல்லது கடுமையான சின்றோம் எனப்படுகிறது. இலங்கையிலே சாதாரணமாக
காணப்படும் ஒரு நோய் இதுவாகும்.

* முகத்தில் வீக்கம் - விசேடமாக
கண்களின் கீழ் காணப்படும் வீக்கம் முதலாவது அறிகுறியாகிறது. காலை வேளைகளில்
இது மிகவும் மோசமாகக் காணப்படும்.

* சிறுநீர் குறைவாகக்
கழிவதையும், சிறுநீரில் உண்டாகும் சிவப்பு, புகைநிறம் மங்கலான
நிறமாற்றத்தையும் நோயாளி அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அறிகுறி
சிறுநீரில் கலந்திருக்கும் இரத்தத்தின் மாறுபட்ட அளவைக் காட்டுகிறது.

* போத்தலில் சிறுநீரை விட்டுக் குலுக்கினால் அதிலே அதிகப்படியான நுரை
ஏற்படுவதை அவதானிக்கலாம். இது சிறுநீரில் அல்பியுமின் இருப்பதற்கான
அறிகுறி. சில நோயாளிகளுக்கு காலும் பாதமும் வீங்கி இருக்கும்.

*
பிரச்சனைக்குரிய அறிகுறி என்னவென்றால் மூச்சு விடுவதில் உண்டாகும் கஸ்டம.
நோயாளி வசதியாக உறங்குவதற்கு உதவியாக பல தலையணைகளை வைத்து நிமிர்த்தி
படுக்க விடவேண்டும்.

* கடுமையான சிறுநீரக அழர்ச்சி உடைய ஒரு
நோயாளிக்கு இரத்த அமுக்கம் கூடிக் கொண்டு போவதுடன் தலை இடியும் இருதயத்
துடிப்பும் ஏற்படும் .

* சிறுநீரக அழர்ச்சியுடன் வரும் ஒரு
நோயாளியிடத்தில் தொண்டைப்புண சரும நோய் என்பவற்றிற்குரிய அறிகுறிகள்
ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கும். சில வேளைகளில் இந்த நோயானது மிக
விரைவாகக் கூடி இரத்த அமுக்கத்தை ஏற்படுத்தும்.

* இதன் விளைவாக
வலிப்பு, பாரிசவாதம் அல்லது வேறுவிதத் தாக்கம் உண்டாகும்.
இப்படிப்பட்டவர்களுக்கு சிறுநீர் சுரப்பது தடைப்பட்டு சிறுநீர் சுரப்பிகள்
செயல் இழந்து இதனால் மூச்சி விடுவதில் கஸ்டம் உண்டாகும். சில வேளைகளில்
இருதயத் துடிப்பு முழுதாக செயல் இழந்து விடவும் கூடும்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை நாடுங்கள்.


நன்றி cnn
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum