உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

கலைஞர், ஜெயலலிதா -வின் விஷப்பரிட்சை... பாடம் கற்க்கப்போவது யார்?

View previous topic View next topic Go down

கலைஞர், ஜெயலலிதா -வின் விஷப்பரிட்சை... பாடம் கற்க்கப்போவது யார்?

Post by nandavanam on Fri Sep 30, 2011 3:32 am

எழுதியவர் சௌந்தர்

தமிழக அரசியலில் இதுவரை காணாத ஒரு புதிய திருப்பமாக அனைத்துக்கட்சிகளும் தனித்து போட்டி என்ற முடிவு வரவேற்கத்தக்கதா அல்லது வருத்தப்பட வேண்டியதா என்று தெரியவில்லை.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் எந்த அடிப்படையை மனதில்வைத்து கூட்டணிக்கட்சி‌களை கழட்டிவிட்டது என்று தெரியவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளையும் தற்போது கழட்டிவிட்டு தன்னுடைய சுயரூபங்களை காட்டிவிட்டது இந்த இருகட்சிகளும்.

மூன்றாம் அணி என்ற கனவில் இருந்த தேமுதிக தற்போது தான் ஒருசில கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறது. மீதமுள்ள கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதுவும் நல்லதுக்குதான் எந்தக்கட்சி எவ்வளவு பலம் என்று தெரிந்துவிடும். பொதுவாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு அங்கு நிற்க்கும் வேட்பாளரின் பலத்தை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயக்கப்படுகிறது. கட்சி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் மேயர் பதவிக்கான தேர்தலில் கட்சிகளே பிராதன இடத்தை பிடிக்கும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், சட்டசபைத் தேர்தலை விட, போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எல்லாம் பதவி ஆசை தான். பதவி பெறுவதெல்லாம், மக்களுக்கு உதவி செய்வதற்கே என்ற பொருள் பொதிந்த வாசகம், பொருளற்றதாக ஆகிவிட்டது. பொருள் சேர்க்க வேண்டுமா... ஒன்று, ஆன்மிகத்தில் சேர்; இல்லையேல், அரசியலில் சேர் என்ற நிலை, இன்றைய சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது. தடி எடுத்தவர்கள், தலைதூக்கும் நிலையைக் காண முடிகிறது.

இது ஒருபுறமிருக்க, தேர்தலில் கூட்டணி எதற்கு? சில கொள்கைகளை ஆணி வேராகக் கொண்டு, கட்சிகள் தொடங்கப் படுகின்றன. அத்தகைய கொள்கைகளை, தேர்தல் காலங்களில் மக்களிடம் எடுத்துக் கூறி, தனித்தே நிற்பது தான், மக்களாட்சியின் அசைக்க முடியாத தத்துவம். இதை விடுத்து, வெற்றிபெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்பது, மக்களாட்சிக்கு எதிரான செயல் என்றே கருத வேண்டும். வேண்டுமானால், கட்சியைக் கலைத்துவிட்டு, விரும்பும் கட்சியில் சேர்ந்து செயல்படலாம்.

கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகு, தேர்தலில் தோல்வி கண்டவர்கள் சலிப்புற்று, "கூடா நட்பு கேடாய் அமைந்தது' எனக் கூறுவது, எந்தவிதத்தில் நியாயம்? எனவே தான், ஒவ்வொரு கட்சியும், தனித்தே தேர்தலில் போட்டியிடுவது நல்லது.

திமுக-வும் அதிமுக-வும் தற்போது ஒரு விஷப்பரிட்சையில் ஈடுப்பட்டுள்ளது. தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்கப்போவது தானைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா.. பொருத்திருந்து பார்ப்போம்...
எழுதியவர் சௌந்தர்
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum