உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நெய்யாறு அணை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் மறுக்கும் கேரளா

Go down

நெய்யாறு அணை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் மறுக்கும் கேரளா  Empty நெய்யாறு அணை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் மறுக்கும் கேரளா

Post by nandavanam Wed Dec 28, 2011 4:04 am

நெய்யாறு அணை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் மறுக்கும் கேரளா  Img1111227042_1_1
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று கூறி, அணையின் நீர் தேக்க அளவை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்து தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் கேரள அரசு, புதிய அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை அளிப்போம் என்று பேசி வருகிறது.

ஆனால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் நீர் உரிமையை மறுப்பதுபோல், மற்றொரு அணையிலும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பங்கை அளிக்காமல் துரோகம் இழைத்து வருகிறது கேரள அரசு. அந்த அணையின் பெயர் நெய்யாறு அணை. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளிக்காடு என்ற இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் நதியின் மீது நெய்யாறு அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணை 1952ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 58ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இந்த அணை கட்டுமானத்தில் இருந்தபோது மொழி வழியாக தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் பிரிக்கப்பட, நெய்யாட்டின்கரை தாலுக்கா கேரளத்துடனும், அணையின் தென் பகுதியில் இருந்த விளவங்கோடு தமிழ்நாட்டுடனும் இணைந்தன.
நெய்யாறு அணையில் இருந்து வலப்புறமாக ஒரு கால்வாய் நெய்யாட்டிங்கரை தாலுக்காவிற்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. அணையின் இடப்புறமாக உள்ள கால்வாய் விளவங்கோடு பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. இரண்டு கால்வாய்களிலும் நெய்யாறு அணையில் இருந்துதான் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஆனால், நெய்யாடின்கரைக்குச் செல்லும் வலதுபுற கால்வாயில் மட்டும் எப்போதும் தண்ணீரைத் திறந்துவிடும் கேரள அரசு, தமிழ்நாட்டின் விளவங்கோட்டிலுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்குத் தேவையான தண்ணீரை திறந்துவிடுவதில்லை. இந்த ஓரவஞ்சனை குறித்து பல முறை தமிழ்நாடு அரசுத் தலைவர்கள் (நமது நாட்டின் முதல்வர்கள்!) கேரள அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் எந்த மரியாதையையும் கேரளா கொடுக்கவில்லை.

2004ஆம் ஆண்டிற்குப் பிறகு (தமிழ்நாட்டில் இருந்து 39 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக அணியை தேர்வு செய்த நிலையில்) நெய்யாறு அணையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட இடதுபுறக் கால்வாயில் கேரள அரசு திறந்துவிடவில்லை. விளவங்கோட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏனென்று கேட்கவில்லை மத்திய அரசு.

நெய்யாறு அணைக்கு நீர் வரத்து ஒருபோதும் குறையவில்லை. ஆயினும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை மறுத்தது கேரள அரசு. தண்ணீர் வரத்து சிறப்பாக இருந்தும் விளவங்கோட்டிற்கு தண்ணீர் மறுத்தது கேரள அரசு. நெய்யாறு அணையில் இருந்து உபரி நீர் பூவாற்றில் ஓடி அரபிக் கடலில் கலந்தது.

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர் வழக்குரைஞர் விஜயதரணி, இதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்துப் பேசியுள்ளார். நாகர்கோவில் மக்களவையில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் மக்களவையில் விதி எண் 377இன் கீழ் நெய்யாறு அணையில் இருந்து தண்ணீர் விடப்படாத நிலையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எப்போதும் பேனாவும், பேப்பருமாக ஆட்சி செய்த மு.கருணாநிதியும் ஏராளமான கடிதங்களை கேரள முதல்வருக்கும், பிரதமருக்கும் எழுதித் தள்ளினார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. விளவங்கோடு வறட்சியில்தான் இருக்கிறது.

இதுதான் கேரள அரசின் ‘சகோர மனப்பான்மை’. இப்படிப்பட்ட அரசுதான் புதிய அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருமாம். இதை நம்பி தமிழக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தமிழ்நாட்டில் ஒரு முதுமொழி உண்டு. கேப்பைக் கூழில் நெய் வடிகிறது என்றால் கேட்டவன் புத்தி எங்கே போனது என்று. கேரள அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பிக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தப் பழமொழியை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள்தான் விளக்கிக் கூறி புத்தி புகட்ட வேண்டும்.

நன்றி வெப்துனியா



nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum