உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அபத்தம்!

Go down

அபத்தம்!     Empty அபத்தம்!

Post by nandavanam Mon Dec 26, 2011 4:11 am

அபத்தம்!     Fr_pic026
ரஷியாவில் பகவத் கீதை நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 28-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கோரிக்கை பொருத்தமற்றது என்று ரஷியா கூறியிருப்பது ஏதோ அவசரக் கோலத்தில் அறிவிக்கப்பட்டதாகவே கருத முடியும்.

இந்தியக் கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றை நன்கு அறிந்த ரஷிய சான்றோர்களிடம் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று இஸ்கான் அமைப்பு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ரஷிய அரசு இத்தனை அவசரமாக இப்படியொரு பதிலைத் தர வேண்டிய அவசியமே இல்லை. இது அவர்களது பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.

இந்த அறிவிப்புக்கு விளக்கமளித்திருக்கும் ரஷிய வெளிவிவகாரத் துறை, இந்த வழக்கு பகவத் கீதை தொடர்பானது அல்ல, பகவத் கீதையில் இடம்பெற்றுள்ள ஒரு சுலோகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள கருத்துரை அல்லது விளக்கவுரை தொடர்பானது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விளக்கவுரை இஸ்கான் நிறுவனர் பகவத்வேதாந்த சுவாமி பிரபுபாதா எழுதிய, "பகவத் கீதை- உள்ளது உள்ளபடி' என்கிற ஆங்கில நூலின் ரஷிய மொழியாக்கம் குறித்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய சுலோகம் எது? இந்த வழக்கில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விளக்கவுரையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் எவை என்பது பற்றி ரஷிய அரசு கூடுதல் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், இந்த விளக்கவுரையில் இடம்பெற்றுள்ள கருத்து, கூட்டாட்சிச் சட்டம் விதி 13-க்கு முரணானதாக இருப்பதால்தான் இந்த வழக்கு என்றும் ரஷிய வெளியுறவுத் துறை கூறுகிறது.

"மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்/ வீரத்தில் அதுவும் ஒன்று/ நீ விட்டுவிட்டாலும் இவர்களின் மேனி/ வெந்துதான் தீரும் ஓர் நாள்' (கவியரசு கண்ணதாசன் பாடல் வரி) என்று கண்ணன் அர்ச்சுனனுக்குச் சொல்லும் முதல் அத்தியாயத்தின் ஓரிரு வரிகளைக் கொண்டு, வன்முறையை அந்த வரிகள் தூண்டுவதாக ஒருவர் கொள்வார் என்றால், அதைவிட மடமை வேறு ஏதும் இருக்க முடியாது.

பகவத் கீதை நடைபெறும் போர்க்களம் வெறும் குறியீடு. மகாபாரதத்தில் தன் உறவுகளான கௌரவர்களை எதிர்த்துப் போரிடத் தயங்கும் அர்ச்சுனனுக்கு அவனது குருவான கண்ணன் சொல்லும் வாழ்வியல் பாடம்தான் பகவத்கீதை என்பது. ஒரு போர்க்களத்தில் இத்தகைய நீண்ட உரை நிகழ்த்த நேரம் இருக்கிறதா என்று யோசித்தால் நிச்சயம் கிடையாது.

இந்த உரையாடல்கள் பார்வையற்ற திருதராஷ்டிரனுக்கு சஞ்சயனால் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. ஒரு சிறிய கனவில் ஒரு பெரிய நாவல் விரிக்கப்படுவதைப் போன்ற அனுபவம் இது.

வாழ்வின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் உள்ளடக்கிய பகவத் கீதை குறித்து மகாத்மா காந்தி குறிப்பிடும்போது, இது நமக்குள் இருக்கும் தீமைகளை எதிர்த்து அழிக்கும் முறைகளைச் சொல்கின்றது என்று குறிப்பிடுகின்றார். அதாவது, பகவத் கீதையில் போர்க்களம் என்பது வெறும் மனதின் குறியீடு மட்டுமே! தன் உறவுகள் என்பது தானே கற்பிதம் செய்து வளர்த்துக்கொண்ட தீமைகள், தவறான எண்ணங்கள் ஆகியவைதான். அவற்றை வெட்டிவிட (பற்று அற்றுப்போக) வழிசொல்லும் பாடம்தான் கீதை.

இதில் இடம்பெறும் பலவும் குறியீடுகள் மட்டுமே. எல்லா மத நூல்களிலும், அடிப்படையான தத்துவங்கள் குறியீடுகளாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு பகவத்கீதையும் விதிவிலக்கல்ல.

இத்தகைய குறியீடான கருத்துக்காக இதைத் தடை செய்ய வேண்டும் என்றால், அப்படிக் கோருபவர்கள் எல்லா மத நூல்களையும் தடை செய்ய வேண்டிவரும். பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் என்றால் அதை ஏன் 1788-ம் ஆண்டிலேயே ரஷிய மொழியில் மொழிபெயர்த்தார்கள்? லியோ டால்ஸ்ட்டாய் உள்ளிட்ட பல்வேறு ரஷிய அறிஞர்களும் படித்து உணர்ந்தார்கள்? அவர்களுக்கு எல்லாம் வன்முறையாகப்படாத ஒன்று இன்று இவர்களுக்கு மட்டுமே ஏன் புரியாமல் போய்விட்டது?

பிற மதங்கள் மீது தவறான கண்ணோட்டமும், வெறுப்பும் கொள்வதால் மட்டுமே இத்தகைய மாற்றுக் கருத்துகள் உண்டாகின்றன. அந்த நூல்களைத் தடை செய்யவேண்டும் என்கிற அளவுக்குக் கோரிக்கைகள் எழுகின்றன. மத சகிப்புத்தன்மை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். எல்லா மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்பதை உணர்ந்தவர்களுக்கு, இவை பல்வேறு தளங்களில் புரிதலுக்கான வாய்ப்புகளை விரித்துக்கொண்டே செல்லும்.

இன்றைய நாளில் ஒரு நூலைத் தடை செய்வது என்பது இயலாத காரியம். இணைய தளங்களில் பகவத் கீதையின் அனைத்து மொழியாக்கங்களும் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பலருடைய மொழிபெயர்ப்பும் படிக்கக் கிடைக்கின்றது. இவை ஒவ்வொன்றும் அவரவர் புரிந்துகொண்ட அளவில், அவரவர் அறிவின் தளத்திற்கேற்ப பல்வேறு விளக்கங்களை விரித்துரைக்கின்றன. இதில் எந்த நூலை, எந்தக் கருத்தை மட்டும் தடை செய்துவிட முடியும் என்று தெரியவில்லை.

பிரபுபாதா சுவாமிகள் எழுதிய "பகவத் கீதை-உள்ளது உள்ளபடி' எனும் ஆங்கில நூல் உலகம் முழுவதும் கிடைக்கின்றது. பலரால் படிக்கப்படுகின்றது. மற்ற எவரும் காணாத வன்முறை, இந்த வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிகின்றது என்றால், அது அவர்கள் மனதின் நிலைமையை, அறியாமையைப் பிரதிபலிக்கிறதே தவிர, பகவத் கீதையை அல்ல!

சைபீரியாவில், டோம்ஸ்க் நகர நீதிமன்றம் இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யாமல் வழக்கை ஏற்றுக் கொண்டிருப்பதே பெரிய அபத்தம். அதைச் சரிசெய்யும் விதமாக, ரஷிய அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு, டிச.28-ம் தேதி தீர்ப்பு வழங்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ரஷிய அரசு இத்தகைய கருத்துகளை வெளியிடுவது அதைவிட பெரிய அபத்தம்.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum