உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

யானைகள் ஜாக்கிரதை...!

Go down

யானைகள் ஜாக்கிரதை...!

Post by nandavanam on Fri Dec 23, 2011 4:23 am

மனிதர்-விலங்குகள் மோதலிலேயே இரு தரப்புக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்துவது என்பது மனிதர்-யானைகள் மோதலாகத்தான் இருக்க முடியும். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் பலி, மலையடிவாரத்தில் மின்வேலியில் சிக்கி யானைகள் பலி, ஆயிரக்கணக்கான வாழைகளைச் சூறையாடிய யானைகள், வனப் பகுதியில் யானை மிதித்து தொழிலாளி பலி என செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது.

தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

மலையடிவாரப் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் நுழையும் யானைகள், பயிரை முடிந்த அளவு தின்றுவிட்டு சேதப்படுத்திச் செல்வது வாடிக்கை.

மிகப்பெரிய ஆளுமைகொண்ட யானைகள் கோயில்களில் மிகச் சாதுவாக பக்தர்களை ஆசீர்வதிக்கும்போதும், திரைப்படங்களில் சாகசங்கள் புரியும்போதும் ஆனந்தப்படும், பரவசப்படும் நாம், யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் சம்பவங்களின்போது மட்டும் யானைகளை வில்லன்கள்போல பார்க்கிறோம். "விளைநிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம், தோட்டங்களில் முகாமிட்டு பயிர்களைச் சேதப்படுத்தும் யானைக் கூட்டம்' என ஊடகங்களும் யானைகளை பெரிய சதிகாரக்கும்பல்போல சித்திரிக்கின்றன.

விலங்குகளிலேயே புத்திசாலியாகக் கணிக்கப்பட்டுள்ள யானைகள், புத்திசாலியாக மட்டும்தான் இருக்க முடியுமேயன்றி, திட்டமிட்டுப் பயிர்களை அழிக்க வேண்டும் என்று மனிதர்களைப் போலவா எண்ணம் கொண்டிருக்கும்?

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் யானைகள் மலைப் பகுதிகளில் இருந்து இறங்கி மலையடிவாரப் பகுதி கிராமங்களுக்குள் புகுவதும், விளைநிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்துவதும், யானைகளை காட்டுக்குள் விரட்டியடிப்பதற்காக வனத் துறையினர் போராடுவதும் வழக்கம். மலையிலிருந்து கீழே இறங்கும் யானைகள், குறிப்பிட்ட பகுதி வழியாக மலையடிவார தோட்டங்களுக்குள் புகுவது என்பது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாகவும், குறிப்பிட்ட அந்த வழி "யானைப் பாதையாக' இருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அது என்ன யானைப் பாதை?

யானைகள் ஆண்டாண்டு காலமாக நடமாடி வரும் பகுதிதான் யானைப் பாதை. மலைகள் பலநூறு ஆண்டுகளாக உள்ளன. யானைகளும் காலம்காலமாக உள்ளன. இடையில் வந்ததுதான் மலையடிவார கிராமங்களும், விளைநிலங்களும். அப்படியானால், யார் பாதையில் யார் குறுக்கிட்டது?

இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டும்தான் என்ற மனப்பான்மை கொண்டவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. ஏரிகளை, குளங்களை அழித்து வீடுகளைக் கட்டிக்கொண்டு, மழைக்காலத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது என இயற்கையின் மீது பழி போடுவது போன்ற மனப்பான்மைதான் இதுவும்.

இனப்பெருக்கத்துக்காக சமதளத்தைத் தேடி யானைகள் வருவதாகவும், மலைப் பகுதியில் உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாக உணவைத் தேடி அவை கீழே இறங்கி வருவதாகவும் வனத் துறையினர் கூறுகின்றனர்.

மலைப் பகுதியில் சுற்றுலாத் தலங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிப்பதும், நமக்கு வசதியான இடத்தில் மலைச் சாலை அமைப்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தச் சாலை வாகனங்களுக்கானது அல்ல, வனவிலங்குகளுக்கானது என்பதைப் புரிந்து செயல்பட்டால், யானைகளும் ஒருவேளை ஊர்களுக்குள் வராமல் இருக்குமோ என்னவோ?

கேரளத்தில் சாலையில் நடந்துசென்றபோது அரசு பஸ் மோதியதில் கோயில் யானை ஒன்று பலியானது. அதற்காக கோயில் நிர்வாகத்துக்கு ரூ.10.48 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அண்மையில் உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், மோட்டார் வாகனச் சட்டப்படி மனிதர்கள் மட்டும்தான் விபத்து இழப்பீடு பெற முடியும் என்பதையும் நிராகரித்தது.

களக்காடு மலையடிவாரப் பகுதியில், காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால், "யானைகள் ஜாக்கிரதை' என வனத்துறை சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

கடைசி இரு தகவல்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா, ஆம்... ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை யானைகள்தாம்.

நன்றி தினமணி

avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum