உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

வில்லனை எகிறி அடிக்கும் விஜயகாந்துக்கு, ஜெயலலிதா ‘டிஷ்யும்!’

Go down

வில்லனை எகிறி அடிக்கும் விஜயகாந்துக்கு, ஜெயலலிதா ‘டிஷ்யும்!’

Post by nandavanam on Sun Sep 25, 2011 10:06 pmநன்றி விறுவிறுப்பு

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது எப்படி என்ற ஆலோசனைகளில் மற்றைய கட்சிகள்
மூழ்கியிருக்க, மிக வேகமாகத்தான் செயற்படுகிறார் ஜெயலலிதா. அ.தி.மு.க.
சார்பில் போட்டியிடும் 52 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்கள்
அடங்கிய பட்டியலை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டிருக்கிறார் அவர்.


இது, அ.தி.மு.க.வால் வெளியிடப்பட்ட 2-வது வேட்பாளர் பட்டியல்.
முதலாவது பட்டியல் வெளியானதில் கூட்டணிக் கட்சியினருக்கு ஏற்பட்ட குழப்பமே
இன்னமும் தீரவில்லை. அதற்குள் அவர்கள் தலையில் இரண்டாவது இடியைத் தூக்கிப்
போட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.


முதலாவது பட்டியல், வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது. அதில், 10 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.


அ.தி.மு.க.வின் இரண்டாவது பட்டியலில், 17 மாவட்டங்களில் உள்ள 52
நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்
அர்த்தம் என்னவென்றால், 10 மாநகராட்சி மேயர்கள், மற்றும் 52 நகராட்சித்
தலைவர்களுக்கான தேர்தல்களில் ஒரு இடத்தைக்கூட கூட்டணிக் கட்சியினருக்கு
ஒதுக்க முடியாது என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.


இதன்மூலம் கூட்டணிக் கட்சியினருக்கு அவர் கூறியுள்ள மெசேஜ்,
“இஷ்டமென்றால் எமது கட்சி வேட்பாளரை ஆதரியுங்கள். கஷ்டமென்றால், நீங்களே
சொந்தமாக தனித்துப் போட்டியிட்டுக் கொள்ளுங்கள்” என்பதே!


விஜயகாந்தும், கம்யூனிஸ்ட்களும் இதை எப்படி எடுத்துக் கொள்ளப்
போகின்றார்கள் என்பதில்தான் இருக்கிறது, தேர்தல் வியூகங்கள். அவர்கள்
தனித்துப் போட்டியிடப் போகிறார்களா? அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணி ஒன்றை
அமைக்கப் போகின்றார்களா? அல்லது, ”நமக்கும் ஏதாவது போடுங்கள் தாயி”
கோரிக்கையா?


விஜயகாந்தின் விருப்பத் தொகுதிகள் பற்றி, கீழே ‘தொடர்புடையவை’
பகுதியிலுள்ள முதலாவது செய்தியில் படித்துப் பாருங்கள். கேப்டன் அப்படி ஆசை
வைத்திருக்க, இவர் இப்படி காலை வாரி விட்டிருக்கிறார். இப்போது முன்பைவிட
கடுமையாக யோசிக்க வேண்டிய நிலையில் கேப்டன்!


ஜெயலலிதா வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல், கூட்டணிக்
கட்சியினருக்கு பிளட் பிரஷரை எகிற வைத்தாலும், அவரது சொந்தக் கட்சியினரிடம்
பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. காரணம், பட்டியல் கட்சிக்காரர்களால்
ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே உள்ளது.


பட்டியலில் ஐந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு
கொடுக்கப்பட்டுள்ளது. (மைதிலி திருநாவுக்கரசு, கே.பவானி கருணாகரன்,
துரை.அரங்கநாதன், கே.சி.கருப்பன், கற்பகம் இளங்கோ) அறிவிக்கப்பட்ட 52
வேட்பாளர்களில், 13 பேர் பெண்கள். அதிகளவில் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு
அளிக்கப்பட்டிருக்கிறது.


கூட்டணிக் கட்சியினரின் ஆதரவு இல்லாமலேயே தன்னால் தனித்து ஜெயிக்க
முடியும் என்று ஜெயலலிதா நினைக்கிறாரா? அல்லது, கூட்டணிக் கட்சியினரை லேசாக
மிரட்டிய பின்னர், பேரம் பேசும் உத்தியா அது?


எல்லாமே அடுத்த வாரத்தில் தெரிந்து போகும்.


நன்றி விறுவிறுப்பு
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum