உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அதாகப்பட்டது என்னவென்றால்...

Go down

அதாகப்பட்டது என்னவென்றால்... Empty அதாகப்பட்டது என்னவென்றால்...

Post by nandavanam Fri Dec 16, 2011 1:59 am

அதாகப்பட்டது என்னவென்றால்... Stop-AIDS-Hand
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. கிரேக்க, ரோமப் பேரரசுகள் கலை, இலக்கியம், கணிதம், மருத்துவம், தத்துவம் உள்ளிட்டவற்றில் சிறப்புற்றிருந்த வெகு காலத்துக்கு முன்பே தமிழன் இவற்றில் தனிச்சிறப்பு பெற்றிருந்தான்.

அன்னியப் படையெடுப்பால் தீவைக்கப்பட்ட நூலகங்கள், மதச்சண்டைகளில் கொளுத்தப்பட்ட நூல்கள், கால வெள்ளத்தால் செல்லரிக்கப்பட்ட சுவடிகள், முறையாக ஆவணப்படுத்தப்படாமல் குரு-சிஷ்யர் வழிமுறையில் வாய்வழியாகப் பயிற்றுவிக்கப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழர்களின் கலை, இலக்கியக் களஞ்சியம் கிட்டத்தட்ட வெற்று மண்பாண்டமானது. இந்த வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மேற்கத்திய நாகரிகமும், ஆங்கில மோகமும் வெற்று மண்பாண்டத்தைக்கூட விட்டுவைக்காமல் சுக்கலாக உடைத்து ஓட்டாஞ்சல்லியாக்கி கையில் கொடுத்துவிட்டு அவை தமிழனின் தலையில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டன.

கணினி யுகத்தில் தமிழ் மொழியும், இலக்கியமும் திறம்பட தங்களைத் தக்கவைத்துக்கொண்டாலும், பழந்தமிழ்க் கலைகளின் நிலை கவலைதான். இவ்வாறாக அழிவின் விளிம்பில் உள்ள தேவராட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து எனப் பல்வேறு பழந்தமிழ்க் கலைகள் இருப்பினும் அவற்றில் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் இணைந்த வடிவம் கொண்ட தெருக்கூத்தே முதன்மையானது எனலாம்.

"நவராத்திரி' திரைப்படத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த ஒரு பாடலையும், "அன்பே சிவம்' படத்தில் கமல்ஹாசன் நடித்த ஒரு பாடலையும் வைத்துத்தான் தெருக்கூத்துக்கலை என்பது இன்னவிதமாக இருக்கும் என இன்றைய இளைய சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டும் அளவில் உள்ளது. அதாவது நகல் கலையை வைத்துத்தான் நிகழ் கலையை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.

நவீன காட்சி ஊடகங்களின் தாக்கத்துக்குப் பிறகும், வேலூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், தருமபுரி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கிவரும் குழுக்கள் மூலம் இக்கலை இன்றளவும் சிறிது உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

தெருக்கூத்துதான் நவீன நாடகத்தின் இசை, ஒப்பனை, உடையலங்காரம், பாட்டு, ஒளி-ஒலி அமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களின் மூலம். இதிகாசம், புராணம், காப்பியம், காவியம், நவீனம் எனக் கதை எத்தன்மை உடையதாயிருப்பினும் அதை வெகுசுலபமாக உள்வாங்கும் திறன்கொண்ட இக் கலையைக் கற்றுக்கொள்வதற்காக நாடக மோகம் மிகுந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் இருந்து அந்நாட்டுக் கலைஞர்கள் இன்றளவும் தமிழகம் வந்து கற்றுக் கொள்கின்றனர்.

கலைமாமணி விருதுபெற்ற புரிசை கண்ணப்ப தம்பிரான் என்ற தெருக்கூத்துக் கலைஞரால் 1982-ம் ஆண்டு பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி அவரது "பாஞ்சாலி சபதம்' கூத்துப் பிரதியாக்கப்பட்டது. 1990-ல் சிங்கப்பூர் வெள்ளிவிழா சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்திரஜித் தெருக்கூத்தை அரங்கேற்றியது, 1996-ல் கொலம்பியாவில் நடைபெற்ற 5-வது அகில உலக நாடக விழாவில் பெரிய சிறகுடைய வயோதிக மனிதன் என்னும் ஆங்கிலச் சிறுகதையை அந்நாட்டுக் கலைஞர்களுடன் கூத்துக்கலை வடிவில் அரங்கேற்றியது என்பனவற்றை அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் இக் கலைக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம்.

தமிழகத்தில் குறிப்பாக கிராமங்களில் தெருக்கூத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன நாடகங்கள் மூலம் கல்வியறிவு, இனக்கலவரம், தீண்டாமை, சுற்றுச்சூழல், எய்ட்ஸ், வேளாண்மை, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மிகச் சரியாக ஏற்படுத்த முடியும்.

கூத்துக்கலையை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சென்னைக் கூத்துப்பட்டறை, வந்தவாசி அருகே புரிசையில் உள்ள கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றம் போன்ற அமைப்புகளும், நலிந்த கலைஞர்களுக்கான நலவாரியமும், சமீபத்தில் தமிழக அரசால் சீரமைக்கப்பட்ட இயல், இசை, நாடக மன்றமும் கைகோக்கும் பட்சத்தில் மிகச் சிறந்த கலை இலக்கியக் குழுவை ஏற்படுத்த முடியும். இக் குழு மூலம் பழந்தமிழ்க் கலைகளை உயிர்ப்பிக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வறுமையில் வாடும் நலிந்த கலைஞர்கள் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் முடியும்.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் திரைப்படம், கேபிள் தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக முதல்வர், பழந்தமிழ்க் கலைகளை மீட்டெடுக்கவும், அக் கலைஞர்களை சமூக விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்கள் விடுக்கும் வேண்டுகோளாகும்.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum